இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPadஇல் இருந்து உங்களின் பிற Apple சாதனங்களுக்கு FaceTime அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்தல்

உங்கள் iPadஇல் FaceTime அழைப்பைத் தொடங்கி, ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருக்கும் மற்றொரு சாதனத்திற்கு அந்த அழைப்பை மாற்றலாம்.

கன்டினியுட்டி கேமரா மற்றும் மைக் மூலம் உங்கள் Mac அல்லது Apple TV 4Kஇல் மேற்கொள்ளப்படும் FaceTime அழைப்புகளுக்கு iPadஐ வெப்கேமாகவும் மைக்ரோஃபோனாகவும் பயன்படுத்தலாம். Apple TV 4Kஇல் FaceTimeஐப் பயன்படுத்துதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

குறிப்பு: அழைப்புக்காக, அமைப்புகள்  > செயலிகள் > FaceTime என்பதில் காட்டப்படும் உங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புத் தகவல், நீங்கள் ஹேண்ட் ஆஃப் செய்ய விரும்பும் சாதனத்தில் அமைப்புகள் > செயலிகள் > FaceTime என்பதில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புத் தகவலுடன் பொருந்த வேண்டும்.

iPadஇல் இருந்து iPhone அல்லது Macக்கு FaceTime அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்தல்

உங்கள் iPadஇல் FaceTime அழைப்பின்போது, அந்த அழைப்பை உங்கள் iPhone (iOS 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு) அல்லது Macக்கு (macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு) ஹேண்ட் ஆஃப் செய்யலாம். இரண்டு சாதனங்களிலும் ஒரே Apple கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்க வேண்டும்.

  1. iPadஇல் உள்ள FaceTime செயலியில் ஓர் அழைப்பின்போது பிற சாதனத்தில் பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • “அழைப்பை இந்தச் [சாதனத்திற்கு] நகர்த்து என்ற பரிந்துரையுடன் கூடிய அறிவிப்பு மீது தட்டவும்.”

    • திரையில் மேலே உள்ள வீடியோ Handoff பட்டன் அல்லது வீடியோ Handoff பட்டன்-ஐத் தட்டவும்.

  2. “மாற்று” அல்லது “இணை” என்பதைத் தட்டவும்.

    அழைப்பு புதிய சாதனத்திற்கு நகரும். அழைப்பு முதலில் தொடங்கப்பட்ட சாதனத்தில், அழைப்பு வேறு சாதனத்தில் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்தும் பேனரும் ஸ்விட்ச் பட்டனும் தோன்றும், நீங்கள் அழைப்பை மீண்டும் மாற்ற விரும்பினால் அந்த பட்டனைத் தட்டலாம்.

FaceTime அழைப்பை உங்கள் iPadஇல் இருந்து Apple TV 4Kக்கு ஹேண்ட் ஆஃப் செய்தல்

உங்கள் iPadஇல் FaceTime அழைப்பைத் தொடங்கலாம் (அல்லது பெறலாம்), பின்னர் Apple TV 4K (2ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு) பெரிய திரைக்கு அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்யலாம், அதற்கு அந்த இரண்டு சாதனங்களும் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும். நீங்கள் அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்த பிறகு அது Apple TV 4Kஇல் தொடரும், அழைப்பு நீடிக்கும் வரை Apple TV 4Kக்கான வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோனாக உங்கள் iPad செயல்படும். ஆதரிக்கப்படும் iPad மாடல்களில் Apple TV 4K (2ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தையது) உடன் கன்டினியுட்டி கேமரா கிடைக்கிறது.

Apple TV 4Kக்கு (2ஆம் தலைமுறை) அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்து தொடர்வது பற்றிய வழிமுறைகளுக்கு, Apple TV 4Kஇல் (2ஆம் தலைமுறை) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு) FaceTimeஐப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.