இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad பேட்டரியை சார்ஜ் செய்தல்

iPadஇல் உள்ளமைந்த லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. லித்தியம்-அயன் தொழில்நுட்பம் தற்போது உங்கள் சாதனத்திற்குச் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. பாரம்பரிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில், லித்தியம்-அயன் பேட்டரிகள் இலகுவானவை, வேகமாக சார்ஜ் ஆகக்கூடியவை, நீண்ட காலம் நீடித்து உழைப்பவை, மேலும் அதிக பேட்டரி ஆயுளுக்காக அதிக ஆற்றலைக் கொண்டவை.

பேட்டரி எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதில் இருந்து அதிக பலன்களைப் பெற, Apple லித்தியம்-அயன் பேட்டரிகள் இணையதளத்தைப் பார்க்கவும்.

பேட்டரியை சார்ஜ் செய்வது பற்றி

மின்னல் குறியீட்டுடன் கூடிய பேட்டரி ஐகான் பேட்டரி சார்ஜ் செய்யப்படுவதைக் குறிக்கிறது.

ஸ்டேட்டஸ் பாரின் மேல் வலது மூலையில் உள்ள பேட்டரி ஐகான், பேட்டரி நிலை அல்லது சார்ஜிங் நிலையைக் காட்டுகிறது. நீங்கள் iPadஐ ஒத்திசைக்கும்போதோ பயன்படுத்தும்போதோ, பேட்டரியை சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகலாம்.

iPadஇல் சார்ஜ் மிகவும் குறைவாக இருந்தால், அதில் சார்ஜ் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்ட பேட்டரி படத்தைக் காட்டப்படலாம், சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு 10 நிமிடங்களாவது சார்ஜ் செய்திருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. நீங்கள் சார்ஜ் செய்யத் தொடங்கும் போது iPadஇல் சார்ஜ் மிகவும் குறைவாக இருந்தால், பேட்டரி சார்ஜ் குறைவாக இருப்பதைக் குறிக்கும் படம் காட்டப்படுவதற்கு முன் டிஸ்ப்ளே 2 நிமிடங்கள் வரை வெறுமையாக இருக்கலாம். iPad சார்ஜ் ஆகவில்லை எனில் என்ன செய்வது? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

பேட்டரியை சார்ஜ் செய்தல்

உங்கள் iPad பேட்டரியை சார்ஜ் செய்ய, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • மொபைலுடன் வழங்கப்படும் கேபிள் மற்றும் பவர் அடாப்டரைப் பயன்படுத்தி iPadஐ ஒரு பவர் அவுட்லெட்டில் இணைத்தல். பவர் அடாப்டர் மற்றும் சார்ஜ் கேபிள் கட்டுரையைப் பார்க்கவும்.

    ஒரு பவர் அவுட்லெட்டில் பிளக் செய்யப்பட்டுள்ள பவர் அடாப்டருடன் இணைக்கப்பட்டுள்ள iPad.
  • iPad மற்றும் உங்கள் கம்ப்யூட்டரை கேபிள் மூலம் இணைத்தல்.

    உங்கள் கம்ப்யூட்டர் ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். ஆஃப் செய்யப்பட்டுள்ள கம்ப்யூட்டருடன் iPad இணைக்கப்பட்டிருந்தால், சார்ஜ் செய்யப்படுவதற்குப் பதிலாக பேட்டரி சார்ஜ் குறையக்கூடும். உங்கள் iPad சார்ஜ் செய்யப்படுவதை உறுதிசெய்ய, பேட்டரி ஐகானில் “சார்ஜிங்” ஐகான் குறியீடு காட்டப்படுகிறதா எனப் பார்க்கவும்.

    உங்கள் Mac அல்லது Windows சாதனம் iPadஐ சார்ஜ் செய்வதற்குப் போதுமான ஆற்றலை வழங்கவில்லை என்றால், ஸ்டேடஸ் பாரில் “சார்ஜ் ஆகவில்லை” என்ற செய்தி காட்டப்படும்.

    குறிப்பு: உங்கள் கீபோர்டில் அதிக திறன் கொண்ட USB போர்ட் இருந்தால் மட்டுமே iPadஐ உங்கள் கீபோர்டுடன் இணைத்து சார்ஜ் செய்ய முயலவும்.

பவர் அவுட்லெட்டில் iPadஐ இணைத்து iCloud பேக்-அப்பைத் தொடங்கலாம். iPadஐ பேக்-அப் செய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

கவனத்திற்கு: iPad சார்ஜிங் போர்ட்டில் திரவம் இருக்கக்கூடும் என நீங்கள் சந்தேகித்தால், சார்ஜிங் கேபிளை அதில் செருக வேண்டாம். திரவத்துடனான தொடர்பு பற்றிய தகவல்களுக்கும், பேட்டரி மற்றும் iPad சார்ஜிங் பற்றிய பிற முக்கியப் பாதுகாப்புத் தகவல்களுக்கும், iPadக்கான முக்கியப் பாதுகாப்புத் தகவல்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

சார்ஜிங் வேகத்தை மேம்படுத்துதல்

iPad மெதுவாக சார்ஜ் ஆகிறது என்றால், அமைப்புகள் > பேட்டரி என்பதில் ஸ்லோ சார்ஜர் மெசேஜ் உங்களுக்குக் காட்டப்படும். வேகமான சார்ஜிங்கை iPad ஆதரித்தாலும், நீங்கள் இணைத்துள்ள சார்ஜருக்கு உகந்த மின்சக்தியை வழங்கும் திறன் இல்லாதபட்சத்தில் இந்த மெசேஜ் காட்டப்படும்.

7.5 வாட் அல்லது அதற்கும் குறைவான மின்சக்தியை வழங்கும் வயர் சார்ஜரைப் பயன்படுத்தினால் சார்ஜ் ஆவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் ஆகலாம்.

iPad பேட்டரி அமைப்புகளில் சார்ஜிங் தகவல் கார்டு காட்டப்பட்டுள்ளது. இந்த கார்டு, பேட்டரி 80 சதவீதம் சார்ஜ் ஆகியிருப்பதைக் காட்டுகிறது. மேலும் அது “ஸ்லோ சார்ஜர்” உடன் இணைக்கப்பட்டிருப்பதையும் குறிக்கிறது.

சார்ஜ் ஆகும் முறையைப் புரிந்துகொள்ளுதல்

பேட்டரி ஆயுள் நீண்டகாலம் நீட்டிக்க உதவும் வகையில் சார்ஜாகும் விதத்தை iPad நிர்வகிக்கும். சார்ஜ் ஆகும்போது என்ன நடக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்:

  • 80% வரை வேகமான சார்ஜிங்: பேட்டரி 80% எட்டும்வரை iPadஇல் வேகமான சார்ஜிங் நடக்கும்.

  • 80 சதவீதத்திற்குப் பிறகு டிரிக்கிள் சார்ஜிங்: பேட்டரி அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சார்ஜிங் மெதுவாக நடக்கும். இந்த இறுதிக் கட்டம் பேட்டரி ஆயுளைக் காக்க உதவுகிறது.

  • வெப்பநிலை: தீவிர வெப்பநிலைச் சூழல்களில் சார்ஜிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பேட்டரியின் வெப்பநிலை அதன் இயல்பான இயக்க வரம்பிற்குத் திரும்பியதும் மீண்டும் தொடங்கும்.

இந்தப் பாதுகாப்புச் செயல்பாடுகள் தானாகவே நடைபெறும். உங்கள் அமைப்புகளில் மாற்றங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.

சார்ஜிங் சுழற்சிகள் மற்றும் பேட்டரி ஆயுள் பற்றிய தகவல்கள்

எந்த வகையான பேட்டரியாக இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரீசார்ஜ்களுக்குப் பிறகு அவற்றின் திறன் குறையும். லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஒவ்வொரு சார்ஜிங் சுழற்சி நிறைவடையும்போதும் அதன் திறன் சற்று குறையும். Apple லித்தியம்-அயன் பேட்டரிகள் சார்ஜிங் சுழற்சியின் அடிப்படையில் செயல்படும். அதிக எண்ணிக்கையிலான சார்ஜிங் சுழற்சிகள் நிறைவடைந்த பிறகும், தயாரிப்பைப் பொறுத்து, அவற்றால் 80% திறனைத் தக்கவைக்க முடியும்.

உங்கள் பேட்டரியின் திறன் மொத்தமாக 100% பயன்படுத்தப்பட்ட பிறகே* (தொடர்ச்சியாக முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும்) ஒரு சார்ஜ் சுழற்சி நிறைவுபெறும். உதாரணத்திற்கு, உங்கள் பேட்டரியின் திறனில் 75%ஐ ஒரு நாள் பயன்படுத்திவிட்டு, அதை அன்றிரவு முழுமையாக மீண்டும் சார்ஜ் செய்திருக்கலாம். அடுத்த நாள் நீங்கள் 25% பயன்படுத்திய பிறகு மொத்தமாக 100% சார்ஜைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தமாகும். இந்த இரண்டு நாட்களிலும் பயன்படுத்திய ஆற்றல் ஒரு சார்ஜிங் சுழற்சிக்கு ஈடாகும்.

பயன்பாடு மற்றும் அமைப்புகளைப் பொறுத்து பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜ் செய்யப்படும் சுழற்சிகள் மாறுபடும். Apple அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரால் iPad பேட்டரி பழுதுபார்க்கப்பட வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். பேட்டரி பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி இணையதளத்தைப் பார்க்கவும்.

பேட்டரி ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைப் தெரிந்துகொள்ள, Apple லித்தியம்-அயன் பேட்டரிகள் இணையதளத்தைப் பார்க்கவும்.

*காலப்போக்கில் பேட்டரி திறனில் இழப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, பேட்டரியின் அசல் திறனில் 80% முதல் 100% வரை சார்ஜ் ஆனதுமே அது முழுமையான சார்ஜ் சுழற்சி எனக் கணக்கில் கொள்ளப்படுகிறது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.