இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPad பற்றிய தகவல்களைப் பெறுதல்

மொத்த சேமிப்பகத்தையும் பயன்படுத்தப்பட்ட சேமிப்பகத்தையும் செயலி வாரியாகப் பார்த்தல்

அமைப்புகள்  > பொது அமைப்புகள் > iPad சேமிப்பகம் என்பதற்குச் செல்லவும்.

iPhone மற்றும் iPadஇல் சேமிப்பகத்தை எப்படிச் சரிபார்ப்பது?, உங்கள் iCloud சேமிப்பகத்தை நிர்வகித்தல் ஆகிய Apple உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்.

பேட்டரி பயன்பாட்டைப் பார்த்தல்

iPadஐ சார்ஜ் செய்ததில் இருந்து தற்போது வரையிலான கால அளவையும், செயலி வாரியான பேட்டரி பயன்பாட்டையும் பார்க்க அமைப்புகள்  > பேட்டரி என்பதற்குச் செல்லவும். பேட்டரியின் அளவைச் சதவீதமாகக் காட்சிப்படுத்தலாம், “குறைந்த ஆற்றல் பயன்முறையை” ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். iPad பேட்டரியை சார்ஜ் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.

மொபைல் டேட்டா பயன்பாட்டைப் பார்த்தல்

அமைப்புகள்  > மொபைல் டேட்டா என்பதற்குச் செல்லவும். iPadஇல் (Wi-Fi + cellular மாடல்கள்) மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் IMEI எண்ணைக் கண்டறிதல்

உங்கள் iPadக்கான IMEI (சர்வதேச மொபைல் உபகரண அடையாளம்) எண்ணை அமைப்புகளில் பார்க்கலாம்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > அறிமுகம் என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் IMEIஐக் கண்டறிய கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்யவும்.

பெயர், மாடல், iPadOS பதிப்பு, வரிசை எண் மற்றும் பலவற்றைப் பார்த்தல்

அமைப்புகள்  > பொது அமைப்புகள் > அறிமுகம் என்பதற்குச் செல்லவும். நீங்கள் பார்க்கக்கூடிய ஐட்டங்களில் அடங்குபவை:

  • பெயர்

  • iPadOS மென்பொருள் பதிப்பு

  • மாடல் பெயர்

  • பாகம் மற்றும் மாடல் எண்கள். மாடலின் வலதுபுறத்தில், பாக எண் காட்டப்படும். மாடல் எண்ணைப் பார்க்க, பாக எண்ணைத் தட்டவும்.

  • வரிசை எண்

  • நெட்வொர்க் (Wi-Fi + cellular மாடல்கள்)

  • பாடல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செயலிகளின் எண்ணிக்கை

  • திறன் மற்றும் கிடைக்கக்கூடிய சேமிப்பகம்

  • நெட்வொர்க் வழங்குநர் (Wi-Fi + cellular மாடல்கள்)

  • மொபைல் டேட்டா எண் (Wi-Fi + cellular மாடல்கள்)

  • Wi-Fi மற்றும் Bluetooth® முகவரிகள்

  • GSM நெட்வொர்க்குகளுக்கான ICCID (ஒருங்கிணைந்த சர்க்யூட் கார்டு அடையாளத்தகவல் அல்லது ஸ்மார்ட் கார்டு) (Wi-Fi + cellular மாடல்கள்)

  • CDMA நெட்வொர்க்குகளுக்கான MEID (மொபைல் உபகரண அடையாளத்தகவல்) (Wi-Fi + cellular மாடல்கள்)

  • மோடம் ஃபர்ம்வேர்

வரிசை எண் மற்றும் பிற அடையாளங்காட்டிகளை நகலெடுக்க, “நகலெடு” விருப்பம் காட்டப்படும் வரை அடையாளங்காட்டியைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.

சட்டம் மற்றும் ஒழுங்குமுறைத் தகவல்களையும் (சட்டப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் உரிமம், உத்தரவாதம், RF வெளிப்பாட்டுத் தகவல்கள் உட்பட) ஒழுங்குமுறைக் குறியீடுகளையும் பார்க்க, அமைப்புகள் > பொது அமைப்புகள் > சட்டம் & ஒழுங்குமுறை என்பதற்குச் செல்லவும்.

பழுதறிதல் தகவல்களைப் பார்த்தல் அல்லது ஆஃப் செய்தல்

அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் செல்லவும்.

Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த உதவ, நீங்கள் ஆன் செய்யும் அமைப்புகளின் அடிப்படையில் iPad பழுதறிதல் மற்றும் பயன்பாட்டுத் தரவை அனுப்பும். இந்தத் தரவு ஒருவரை அடையாளப்படுத்தும்படி இருக்காது, ஆனால் இதில் இருப்பிடத் தகவல்கள் இருக்கலாம்.

இவற்றையும் பாருங்கள்iPadஐ ஆன் செய்து அமைத்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.