இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Mail செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்

Apple Intelligence* உங்கள் மின்னஞ்சல்களைக் கண்காணிப்பதை முன்னெப்போதும் இல்லாத வகையில் எளிதாக்குகிறது. எழுதும் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் மெசேஜ்களை எழுதி அனுப்பலாம், “முன்னுரிமை மெசேஜ்கள்” அம்சத்தைப் பயன்படுத்தி மிக அவசரமான மின்னஞ்சல்களை (அன்றைய நாளுக்கான இரவு உணவு விருந்து அழைப்பு, போர்டிங் பாஸ் போன்றவை) பார்க்கலாம். மின்னஞ்சல்களுக்கு விரைவாகப் பதில் எழுதவும், உங்கள் பதிலில் அனைத்து விவரங்களும் உள்ளடக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும் “ஸ்மார்ட் பதிலளிப்பு” அம்சம் உதவுகிறது. சிக்கலான மின்னஞ்சல்களின் சுருக்கவிவரத்தைப் பெற்று அதில் தொடர்புடைய விவரங்களைப் பார்க்கலாம், நீண்ட மின்னஞ்சல் தொடரிழைகளைப் புரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

உங்கள் இன்பாக்ஸில் முன்னுரிமை மெசேஜ்களைப் பார்த்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் இன்பாக்ஸைத் தட்டி, “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “முன்னுரிமையானவற்றைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

    நேர வரம்பிற்குட்பட்ட மின்னஞ்சல்கள் உங்கள் இன்பாக்ஸில் மேலே காட்டப்படும்.

    குறிப்பு: “முதன்மை” பிரிவு அல்லது பட்டியல் காட்சியில் முன்னுரிமை மெசேஜ்கள் காட்டப்படும்.

Mailஇல் “ஸ்மார்ட் பதிலளிப்பு” அம்சத்தைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு மின்னஞ்சலைத் தட்டி, “பதிலளி” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. கீபோர்டில், பரிந்துரைக்கப்படும் பதிலைத் தட்டவும்.

    Apple Intelligence மின்னஞ்சலில் பதிலை உருவாக்குகிறது. உங்கள் பதிலை மேம்படுத்த, iPadஇல் Apple Intelligence உடன் எழுதும் கருவிகளைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

  4. உங்கள் பதில் அனுப்பத் தயாரானதும், “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

மின்னஞ்சல் சுருக்கவிவரத்தைப் பெறுதல்

Apple Intelligence சிக்கலான மின்னஞ்சலின் சுருக்கவிவரத்தைப் பெற அல்லது நீண்ட மின்னஞ்சல் தொடரிழையின் தகவல்களைச் சில விநாடிகளில் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

    உங்கள் இன்பாக்ஸில் உள்ள ஒவ்வொரு மின்னஞ்சலின் கீழும் ஒரு சிறிய சுருக்கவிவரம் தானாகவே காட்டப்படும்.

  2. “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, மின்னஞ்சலைத் தட்டி, “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: “சுருக்கவிவரம்” பட்டன் காட்டப்படுவதற்கு நீங்கள் திரையின் மேல்பகுதிக்கு ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.

திரையின் மேல்பக்கத்தில் சுருக்கவிவரம் காட்டப்படும். அந்த மெசேஜ் ஒரு மின்னஞ்சல் தெடரிழையின் ஒரு பகுதி எனில், தொடரிழை உள்ளடக்கங்களின் சுருக்கவிவரமும் காட்டப்படும்.

மின்னஞ்சல் சுருக்கவிவர முன்னோட்டங்களை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

நீங்கள் Apple Intelligenceஐ ஆன் செய்திருந்தால், உங்கள் மின்னஞ்சல்களுக்குக் கீழே சுருக்கவிவரங்கள் தானாகவே காட்டப்படும். அதற்குப் பதிலாக சமீபத்திய மெசேஜின் முதல் வரியைப் பார்க்க விரும்பினால் சுருக்கவிவரங்களை நீங்கள் ஆஃப் செய்யலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “Mail” என்பதைத் தட்டவும்.

  3. மின்னஞ்சல் சுருக்கவிவரத்தின் முன்னோட்டங்களை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கவும்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.