இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் இருந்து HomePod மற்றும் பிற வயர்லெஸ் ஸ்பீக்கர்களில் ஆடியோவை பிளே செய்தல்

HomePod, Apple TV 4K மற்றும் AirPlay 2 செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிவிகளிலும், Bluetooth® ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் போன்ற வயர்லெஸ் சாதனங்களிலும் iPadஇல் இருந்து ஆடியோவை பிளே செய்யலாம்.

iPadஇல் இருந்து வயர்லெஸ் சாதனத்தில் ஆடியோவை பிளே செய்தல்

  1. உங்கள் iPadஇல் பாட்காஸ்ட்கள் , இசை போன்ற ஆடியோ செயலியைத் திறந்து, பிளே செய்ய வேண்டியதைத் தேர்ந்தெடுக்கவும்.

  2. “பிளேபேக் சாதனம்” பட்டன்-ஐத் தட்டி பிளேபேக் சாதனத்தைத் தேர்வுசெய்யவும்.

    குறிப்பு: உங்கள் AirPlay 2 செயல்படுத்தப்பட்ட சாதனங்கள் பிளேபேக் சாதனங்களின் பட்டியலில் காட்டப்படவில்லை எனில், அவை ஒரே Wi-Fi நெட்வொர்க்கில் இருப்பதை உறுதிசெய்யவும். Bluetooth சாதனத்தைப் பயன்படுத்தினால், நீங்கள் அதை Bluetooth வரம்பிற்கு வெளியே நகர்த்தும் பட்சத்தில், iPad பிளேபேக் சாதனமாக மாற்றப்படும்.

பிளேபேக் சாதனத்தைத் தேர்ந்தெடுக்க, பூட்டுத் திரையிலோ கட்டுப்பாட்டு மையத்திலோ “பிளேபேக் சாதனம்” பட்டன்-ஐத் தட்டலாம்.

குறிப்பு: Bluetooth ஆடியோ சாதனத்தை அமைப்பது பற்றிய தகவல்களுக்கு, iPadஐ Bluetooth ஆக்சஸரியுடன் இணைத்தல் பிரிவைப் பார்க்கவும்.

பல AirPlay 2 செயல்படுத்தப்பட்ட சாதனங்களில் ஆடியோவை பிளே செய்யவும்

AirPlay 2 மற்றும் iPad மூலம், ஒரே Wi-Fi நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள பல AirPlay 2 செயல்படுத்தப்பட்ட சாதனங்களில் ஆடியோவை இயக்கலாம். எடுத்துக்காட்டாக, லிவிங் ரூம் மற்றும் சமையலறையில் உள்ள HomePod ஸ்பீக்கர்கள், படுக்கையறையில் உள்ள Apple TV 4K, தனியறையில் உள்ள AirPlay 2 செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிவி ஆகியவற்றில் பார்ட்டி பிளேலிஸ்ட்டை பிளே செய்யலாம்.

Siri: Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்:

  • “Stop playing music everywhere”

  • “Set the dining room volume to 10 percent”

  • “What’s playing in the kitchen?”

  • “Play a song I like in the kitchen”

  • “Add the living room speaker”

  • “Remove the music from the kitchen”

  • “Move the music to the den”

iPad திரையில் இருந்தும் பிளேபேக் சாதனங்களை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. கட்டுப்பாட்டு மையத்தில், பூட்டுத்திரையில் அல்லது நீங்கள் பிளேபேக்கைக் கேட்டுக்கொண்டிருக்கும் செயலிக்கான “இப்போது பிளே ஆவது” திரையில் உள்ள “பிளேபேக் சாதனம்” பட்டன்-ஐத் தட்டவும்.

  2. நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒவ்வொரு சாதனத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு: ஸ்டீரியோ இணைப்பில் அமைக்கப்பட்டுள்ள சாதனங்கள் ஒற்றை ஆடியோ சாதனமாகக் கருதப்படும்.

HomePod ஸ்பீக்கர் மற்றும் Apple TV 4Kஐப் பயன்படுத்துவதைப் பற்றி மேலும் அறிய, HomePod பயனர் வழிகாட்டியையும் Apple TV 4K பயனர் வழிகாட்டியையும் பார்க்கவும்.

AirPlay 2 செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலுக்கு, ஹோம் ஆக்சஸரிகள் இணையதளத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.