இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் கீபோர்டுகளைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

உங்கள் iPadஇல் வெவ்வேறு மொழிகளில் எழுதுவதற்கோ டிக்டேஷனைப் பயன்படுத்துவதற்கோ கீபோர்டுகளைச் சேர்க்கலாம். திரையில் உள்ள அல்லது வெளிப்புற கீபோர்டு அமைப்பை நீங்கள் மாற்றலாம்.

பிற மொழிகளுக்கான கீபோர்டுகளைச் சேர்த்தால், கீபோர்டுகளுக்கு இடையே மாறாமல் இரண்டு மொழிகளில் டைப் செய்யலாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு மொழிகளுக்கு இடையே உங்கள் கீபோர்டு தானாகவே மாறுகிறது. (அனைத்து மொழிகளுக்கும் கிடைக்காது.)

மற்றொரு மொழிக்கான கீபோர்டைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > கீபோர்டு என்பதற்குச் செல்லவும்.

  2. “கீபோர்டுகள்” என்பதைத் தட்டி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • கீபோர்டைச் சேர்க்க: “புதிய கீபோர்டைச் சேர்” என்பதைத் தட்டவும், பிறகு பட்டியலிலிருந்து கீபோர்டைத் தேர்வுசெய்யவும். மேலும் கீபோர்டுகளைச் சேர்க்க மீண்டும் செய்யவும்.

    • கீபோர்டை அகற்ற: “திருத்து” என்பதைத் தட்டவும், நீங்கள் அகற்ற விரும்பும் கீபோர்டுக்கு அடுத்துள்ள “நீக்கு” பட்டன்-ஐத் தட்டி, “நீக்கு” என்பதைத் தட்டவும், பிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    • உங்கள் கீபோர்டு பட்டியலை மீண்டும் வரிசைப்படுத்த: “திருத்து” என்பதைத் தட்டவும், கீபோர்டுக்கு அடுத்துள்ள "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐப் பட்டியலில் உள்ள புதிய இடத்திற்கு இழுக்கவும், பிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

நீங்கள் வேறு மொழிக்குக் கீபோர்டைச் சேர்த்தால், விருப்பமான மொழி வரிசைப் பட்டியலில் தொடர்புடைய மொழி தானாகச் சேர்க்கப்படும். நீங்கள் இந்தப் பட்டியலைப் பார்க்கலாம் மற்றும் அமைப்புகள் > பொது அமைப்புகள் > மொழி & வட்டாரம் என்பதில் நேரடியாக மொழிகளைச் சேர்க்கலாம். செயலிகளும் இணையதளங்களும் உரையை காட்சிப்படுத்தும் விதத்தை மாற்ற இந்தப் பட்டியலை மறுவரிசைப்படுத்தலாம்.

வேறு கீபோர்டுக்கு மாற்றுதல்

  • திரையில் உள்ள கீபோர்டில்: “இமோஜி” பட்டன் அல்லது கீபோர்டை மாற்றுவதற்கான கீ-ஐத் தொட்டுப் பிடித்து, நீங்கள் அணுக விரும்பும் கீபோர்டின் பெயரைத் தட்டவும்.

    ஒரு கீபோர்டிலிருந்து மற்றொன்றுக்கு மாற, “இமோஜி” பட்டன் அல்லது கீபோர்டை மாற்றுவதற்கான கீ-ஐத் தட்டலாம். செயல்படுத்தப்பட்ட மற்ற கீபோர்டுகளை அணுக தொடர்ந்து தட்டவும்.

  • வெளிப்புற கீபோர்டில்: ஆங்கிலம், இமோஜி மற்றும் வேறொரு மொழிக்கு நீங்கள் சேர்க்கும் மற்ற கீபோர்டுகள் ஆகியவற்றுக்கு இடையே மாற, "கன்ட்ரோல்" பட்டனை அழுத்திப் பிடித்து “ஸ்பேஸ் பார்” பட்டனை அழுத்தவும்.

    iPadக்கான Magic Keyboard மற்றும் Smart Keyboardஇல், நீங்கள் கீபோர்டை மாற்றுவதற்கான கீ-ஐ அழுத்தியும் ஒரு கீபோர்டிலிருந்து மற்றொன்றுக்கு மாறலாம்.

கீபோர்டுக்கு மாற்று லே-அவுட்டை ஒதுக்குதல்

உங்கள் கீபோர்டில் உள்ள கீகளுடன் பொருந்தாத மாற்று கீபோர்டு லே-அவுட்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > கீபோர்டு > கீபோர்டுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. திரையின் மேற்புறத்தில் உள்ள மொழியைத் தட்டி, பிறகு பட்டியலில் இருந்து மாற்று லே-அவுட்டைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.