இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் டிராக்பேடு அமைப்புகளை மாற்றுதல்

iPad திரையில் உள்ள ஐட்டங்களில் செயல்களை மேற்கொள்ள நீங்கள் டிராக்பேடைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றலாம்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் என்பதற்குச் சென்று, உங்கள் ஆக்சஸரிகளைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்: 

    • டிராக்பேடு

    • டிராக்பேடு & மவுஸ்

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • டிராக்கிங் வேகத்தை மாற்றுதல்: பாயின்டரைத் திரையின் குறுக்கே நகர்த்தும்போதான டிராக்கிங் வேகத்தை அமைக்க ஸ்லைடரை இழுக்கவும்.

    • நேச்சுரல் ஸ்க்ராலிங்கை ஆன்/ஆஃப் செய்தல்: இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், திரையில் உள்ள உள்ளடக்கங்கள் உங்கள் விரல் நகரும் அதே திசையில் நகரும்.

    • “கிளிக் செய்ய தட்டுதல்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல்: இந்த விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், ஒரு விரலால் டிராக்பேடை லேசாகத் தட்டுவதும் டிராக்பேடு கிளிக் ஆகும் வரை அழுத்துவதும் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்டிருக்கும்.

    • “இரு விரல் செகண்டரி கிளிக்கை” ஆன் அல்லது ஆஃப் செய்தல்: இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், முகப்புத் திரையில் உள்ள ஐகான்கள், மெயில்பாக்ஸில் உள்ள மெசேஜ்கள், “கட்டுப்பாட்டு மையத்தில்” உள்ள கேமரா பட்டன் போன்ற ஐட்டங்களுக்கான விரைவுச் செயல்கள் மெனு காட்டப்படுவதற்கு இரண்டு விரல்களால் நீங்கள் கிளிக் செய்யவேண்டும்.

குறிப்பு: பாயின்டரின் நிறம், வடிவம், அளவு போன்ற தோற்றத்தையும் நீங்கள் மாற்றலாம். iPadஇல் மவுஸ் அல்லது டிராக்பேடைப் பயன்படுத்தும்போது பாயின்டரை எளிதாகப் பார்க்கும்படி அமைத்தல் பிரிவைப் பார்க்கவும்.

இவற்றையும் பாருங்கள்iPadக்கான டிராக்பேடு சைகைகள்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.