இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் புகைப்படங்களைப் பார்த்தல், பகிர்தல் மற்றும் அச்சிடுதல்

iPad கேமரா மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ஃபோட்டோஸ் செயலியில் சேமிக்கப்படும். iCloud புகைப்படங்கள் ஆன் செய்யப்பட்டிருந்தால், புதிய புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் தானாகவே பதிவேற்றப்பட்டு, iCloud புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ள உங்கள் சாதனங்கள் அனைத்திலும் (iOS 8.1, iPadOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்டவை) உள்ள ஃபோட்டோஸ் செயலியில் கிடைக்கும்.

குறிப்பு: அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதில் இருப்பிடச் சேவைகள் ஆன் செய்யப்பட்டிருந்தால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பிடத் தரவுடன் குறியிடப்படும். மேலும் செயலிகளும் புகைப்படப் பகிர்வு இணையதளங்களும் அந்த இருப்பிடத் தரவைப் பயன்படுத்தலாம். iPadஇல் நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவல்களைக் கட்டுப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் புகைப்படங்களைக் காட்டுதல்

  1. iPadஇல் கேமராவை கேமரா திறக்கவும்.

  2. ஷட்டர் பட்டனுக்குக் கீழே உள்ள சிறுபடத்தைத் தட்டவும்.

  3. நீங்கள் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களைப் பார்க்க வலதுபுறம் ஸ்வைப் செய்யவும்.

    கட்டுப்பாடுகளைக் காட்ட அல்லது மறைக்க திரையைத் தட்டவும்.

  4. ஃபோட்டோஸ் செயலியில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் பார்க்க, “அனைத்து புகைப்படங்கள்” என்பதைத் தட்டவும்.

உங்கள் புகைப்படங்களைப் பகிர்தல் மற்றும் அச்சிடுதல்

  1. iPadஇல் புகைப்படத்தைப் பார்க்கும்போது, “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  2. உங்கள் புகைப்படத்தைப் பகிர, AirDrop, Mail அல்லது மெசேஜஸ் போன்ற விருப்பங்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உங்கள் புகைப்படத்தை அச்சிட, செயல்களின் பட்டியலிலிருந்து “அச்சிடு” என்பதைத் தேர்ந்தெடுக்க மேலே ஸ்வைப் செய்யவும்.

iPadஇல் AirDropஐப் பயன்படுத்தி அருகிலுள்ள Apple சாதனங்களுக்கு ஐட்டங்களை அனுப்புதல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் iPhone அல்லது iPadஇல் இருந்து AirPrintஐப் பயன்படுத்தி அச்சிடுதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

புகைப்படங்களைப் பதிவேற்றுதல் மற்றும் அவற்றை எல்லா சாதனங்களிலும் புதுப்பித்த நிலையில் வைத்துக்கொள்ளுதல்

iCloud புகைப்படங்கள் சேவையைப் பயன்படுத்தி உங்கள் iPadஇல் இருந்து iCloudக்குப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நீங்கள் பதிவேற்றலாம், அதே Apple கணக்கு மூலம் உள்நுழைந்திருக்கும் மற்ற சாதனங்களிலும் அவற்றை அணுகலாம். உங்கள் iPadஇல் சேமிப்பகத்தை மிச்சப்படுத்த அல்லது அனைத்து சாதனங்களிலும் உங்கள் புகைப்படங்களைச் சமீபத்திய நிலையில் வைத்திருக்க iCloud புகைப்படங்கள் உதவும். iCloud புகைப்படங்களை ஆன் செய்ய, அமைப்புகள்  > ஃபோட்டோஸ் என்பதற்குச் செல்லவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.