இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பிடங்களைப் பகிர்தல் மற்றும் தொலைந்துபோன அவர்கள் சாதனங்களைக் கண்டறிதல்

குடும்பப் பகிர்வு மூலம் உங்கள் இருப்பிடத்தை உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவின் உறுப்பினர்களுடன் பகிரலாம் மற்றும் தொலைந்துபோன அவர்கள் சாதனங்களைக் கண்டறியவும் உதவலாம். குடும்ப ஒருங்கிணைப்பாளர் குடும்பப் பகிர்வு அமைப்புகளில் இருப்பிடப் பகிர்வை அமைக்கும்போது, ஒருங்கிணைப்பாளரின் இருப்பிடம் பிறகு சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவருடனும் தானாகப் பகிரப்படும். பிறகு, குடும்ப உறுப்பினர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பகிரலாமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்

உங்கள் குடும்பத்தினருடன் இருப்பிடங்களைப் பகிர்ந்தால் அவர்களால் இடம் அறி செயலியில் உங்கள் இருப்பிடத்தைப் பார்க்க முடியும். நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் இருப்பிடங்களை மாற்றும்போதும் அறிவிப்பைப் பெறலாம்—உதாரணமாக, பள்ளி நேரங்களில் குழந்தை பள்ளியை விட்டு வெளியேறுதல் போன்றவை.

  1. அமைப்புகள்  > குடும்பம் > இருப்பிடப் பகிர்வு என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் குடும்ப உறுப்பினருக்கான இருப்பிடப் பகிர்வு அம்சத்தை ஆன் செய்யவும்.

    உங்கள் இருப்பிடத்தைப் பகிர விரும்பும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இந்தப் படியை நீங்கள் மீண்டும் செய்யலாம். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதாகவும், உங்களுடன் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதைத் தேர்வுசெய்ய முடியும் என்ற மெசேஜையும் பெறுகிறார்கள்.

    எந்தவொரு குடும்ப உறுப்பினருடனும் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

  3. பின்னர் இணையப்போகும் புதிய உறுப்பினர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர விரும்பினால், “இருப்பிடத்தைத் தானாகப் பகிர்” என்பதை ஆன் செய்யவும்.

குறிப்பு: ஸ்கிரீன் டைம் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரால் தங்களது இருப்பிடப் பகிர்வு அமைப்புகளை மாற்ற முடியாமல் போகலாம்.

உங்கள் இருப்பிடத்தைப் பகிர, அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு ஆகியவற்றில் இருப்பிடச் சேவைகள் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவலைக் கட்டுப்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

குடும்ப உறுப்பினரின் சாதனத்தைக் கண்டறிதல்

உங்கள் குடும்பப் பகிர்வுக் குழு உறுப்பினர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்த பிறகு, இடம் அறி செயலியில் சேர்க்கப்பட்டிருக்கும் தொலைந்த சாதனத்தைக் கண்டறிய அவர்களால் உதவ முடியும்.

”இடம் அறி” செயலியில் சாதனத்தைக் கண்டறிதல் கட்டுரையைப் பார்க்கவும்.

உங்கள் சாதனங்கள் பட்டியலில் முதலிடத்திலும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் சாதனங்கள் அதற்குக் கீழேயும் உள்ளன.

AirTagஐ உங்களுடன் பகிருமாறு குடும்ப உறுப்பினரிடம் கேட்டல்

“இடம் அறி” செயலியில், “உங்களுக்கு அருகில் ஒரு AirTag உள்ளது” அல்லது “தெரியாத AirTag” என்ற அறிவிப்பைப் பெற்றால், அதற்குச் சொந்தமான குடும்ப உறுப்பினரிடம் AirTagஐ உங்களுடன் பகிருமாறு கேட்கலாம்.

  1. அறிவிப்பில், “AirTagஐப் பகிர உரிமையாளரிடம் கேள்” என்பதைத் தட்டவும்.

  2. திரையில் கீழே உள்ள “உரிமையாளரிடம் கேள்” என்பதைத் தட்டவும்.

குடும்ப உறுப்பினர் தொலைந்த சாதனத்தைக் கண்டறிய iCloud.comஇல் சாதனங்களைக் கண்டறில் என்பதைப் பயன்படுத்தலாம். iCloud பயனர் வழிகாட்டியில் iCloud.comஇல் சாதனங்களைக் கண்டறிதலில் சாதனத்தைக் கண்டறிதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.