iPadஇல் உள்ள “ஜர்னல்” செயலி மூலம் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுதல்

ஜர்னல் செயலியில் உங்கள் ஜர்னலிங் இலக்குகளைக் கண்காணித்து புதிய பழக்கவழக்கங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

புள்ளிவிவரங்கள் மூலம் ஜர்னலிங் இலக்குகளைக் கண்காணித்தல்

  1. iPadஇல் உள்ள ஜர்னல் செயலிக்குச் செல்லவும்.

    உங்கள் தற்போதைய ஸ்ட்ரீக் (அதாவது, நீங்கள் தொடர்ச்சியாக ஜர்னலைப் பதிவுசெய்த நாட்கள் அல்லது வாரங்களின் எண்ணிக்கை) மற்றும் பிற புள்ளிவிவரங்கள் சைடுபாரில் காட்டப்படும்.

  2. மேலும் விவரங்களைப் பார்க்க, புள்ளிவிவரங்கள் என்பதைத் தட்டி, ஏதேனும் ஒரு டைலைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: சைடுபாரைத் திறக்க மற்றும் மூட, “சைடுபாரை நிலைமாற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

    ஜர்னல் செயலியின் திரையில் நடப்பு ஸ்ட்ரீக், எழுதிய வார்த்தைகளின் எண்ணிக்கை போன்ற அளவீடுகள் காட்டப்பட்டுள்ளன.

ஜர்னலிங் அட்டவணையை அமைத்தல்

ஜர்னலிங் அறிவிப்புகள் மூலம், நீங்கள் பின்னர் எழுத நினைவூட்டலை அமைக்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஜர்னல் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “பிரத்தியேகம்” என்பதைத் தட்டி, வாராந்தர அட்டவணையை அமைக்கவும்.

ஜர்னல் விட்ஜெட்டைப் பயன்படுத்துதல்

உங்களின் தற்போதைய தொடர்ச்சியான எழுதுதல் முயற்சி அல்லது நாள் முழுவதும் மாறக்கூடிய எழுத்து அறிவுறுத்தல்களைக் கொண்ட விட்ஜெட்டை உங்கள் முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரையில் சேர்க்கவும், எனவே தற்போது நிகழ்பவற்றை நீங்கள் பிரதிபலிக்கலாம்.

  1. iPad முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரையில், ஜர்னல் விட்ஜெட்டைச் சேர்க்கவும்.

  2. விட்ஜெட்டை மாற்ற, அதனைத் தொட்டுப் பிடித்து, “விட்ஜெட்டைத் திருத்து” என்பதைத் தட்டவும்.

  3. விட்ஜெட்டைத் தட்டி அதில் தோன்றும் வெவ்வேறு எழுதுதல் அறிவுறுத்தல்களிலிருந்து தேர்ந்தெடுக்கவும், புதிய பதிவைத் தொடங்கவும் அல்லது உங்கள் தற்போதைய தொடர்ச்சியான எழுதுதல் முயற்சி பற்றிய விவரங்களைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.