இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Apple Intelligence மற்றும் தனியுரிமை

Apple Intelligence* AI உலகில் மேம்பட்ட தனியுரிமையைப் பாதுகாப்பை வழங்கும் அதேவேளையில், உங்களுக்குப் பொருத்தமான மற்றும் உங்கள் தனிப்பட்ட சூழலுக்கு ஏற்ற நுண்ணறிவை வழங்கும். சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கமே Apple Intelligenceஇன் முக்கிய அடிப்படையாக உள்ளது. எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்காமலேயே உங்கள் தனிப்பட்ட தகவல்களை அது புரிந்துகொள்ளும்.

அதிகச் செயலாக்கத் திறன் தேவைப்படும் சிக்கலான கோரிக்கைகளுக்கு, பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டை Apple Intelligence பயன்படுத்தும். நுண்ணறிவின் இன்னும் அதிகமான பலனைப் பெற, iPad போன்ற உங்கள் Apple தயாரிப்புகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கிளவுடிலும் விரிவுபடுத்தும். Apple சிலிக்கான் மூலம் இயக்கப்படும் பெரிய, சர்வர் அடிப்படையிலான மாடல்களை பிரைவேட் கிளவுட் கம்ப்யூட் பயன்படுத்துகிறது. உங்கள் தரவு ஒருபோதும் சேமிக்கப்படாது. அது உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மட்டுமே பயன்படுத்தப்படும். சுயாதீனமான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தனியுரிமை வாக்குறுதியை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

பிரைவேட் கிளவுட் கம்ப்யூட் பற்றிய தகவல்

பயனர் ஒரு கோரிக்கையை உருவாக்கும்போது, Apple Intelligence அதைச் சாதனத்திலேயே செயலாக்க முடியுமா என்று பகுப்பாய்வு செய்யும். அதிகச் சிக்கலான கோரிக்கைகளுக்கு, உங்கள் iPadஇன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கிளவுடில் விரிவுபடுத்தும் பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டை இது பயன்படுத்தும். பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டில், தரவு நீக்கப்படுவதற்கு முன்பு உங்கள் கோரிக்கைக்குத் தொடர்புடைய தரவுகள் மட்டும் Apple சிலிக்கான் சர்வர்களில் செயலாக்கப்படும். பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டிற்குக் கோரிக்கைகள் அனுப்பப்படும்போது Appleஇல் தரவு சேமிக்கப்படாது, அணுகக்கூடிய வகையில் அவை மாற்றப்படாது. மேலும் பயனரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மட்டுமே அவை பயன்படுத்தப்படும். சுயாதீனமான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் Apple சிலிக்கான் சர்வர்களில் இயங்கும் நிரலாக்கக் குறியீட்டை ஆய்வு செய்யலாம். தனியுரிமை வாக்குறுதியை எப்போது வேண்டுமானாலும் சரிபார்ப்பதற்கு பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டை இந்த சர்வர்கள் அனுமதிக்கின்றன.

பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டின் அடித்தளத்தை உருவாக்கும் Apple சிலிக்கான் சர்வர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கிளவுட் பாதுகாப்பை வழங்குகின்றன. பயனரின் iPadஇல் செய்வதைப் போன்று, சர்வரில் உள்ள அதிமுக்கிய என்கிரிப்ஷன் கீக்களை Secure Enclave பாதுகாக்கிறது. அதேநேரத்தில் iPadOSஇல் செய்வதைப் போன்று, சர்வரில் இயங்கும் OS கையொப்பமிடப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளதை “செக்யூர் பூட்” உறுதிசெய்கிறது. கையொப்பமிடப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட நிரலாக்கக் குறியீடு மட்டுமே இயங்குவதை “டிரஸ்டட் எக்ஸிகியூஷன் மானிட்டர் (TEM)” தொழில்நுட்பம் உறுதிசெய்கிறது. மேலும் ஒரு கோரிக்கையை அனுப்புவதற்கு முன்பு, ஒரு பிரைவேட் கிளவுட் கம்ப்யூட் கிளஸ்டரின் அடையாளத்தையும் உள்ளமைவையும் பயனரின் சாதனம் பாதுகாப்பாகச் சரிபார்க்க “சான்றொப்பம்” அனுமதிக்கிறது. மேலும், Appleஇன் தனியுரிமை வாக்குறுதியைச் சரிபார்க்க, பிரைவேட் கிளவுட் கம்ப்யூட் சர்வர்களில் இயங்கும் மென்பொருளை சுயாதீன நிபுணர்கள் ஆய்வு செய்யலாம்.

குறிப்பு: மேலும் தெரிந்துகொள்ள, பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்: கிளவுடில் AI தனியுரிமைக்கான ஒரு நவீன தொழில்நுட்பம் என்ற பிரிவிற்குச் செல்லவும்.

Apple Intelligence அறிக்கையை உருவாக்குதல்

பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டிற்கு உங்கள் iPad அனுப்பிய கோரிக்கைகளின் அறிக்கையை நீங்கள் உருவாக்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “தனியுரிமை & பாதுகாப்பு” என்பதைத் தட்டவும்.

  3. “Apple Intelligence அறிக்கை” என்பதைத் தட்டி, “கடந்த 15 நிமிடங்கள்” (இயல்புநிலை), “கடந்த 7 நாட்கள்” போன்ற அறிக்கை நேரஅளவைத் தேர்வுசெய்யவும். அறிக்கையை முடக்க”ஆஃப்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    குறிப்பு: நீங்கள் நேரஅளவை மாற்றியதில் இருந்து பிரைவேட் கிளவுட் கம்ப்யூட் கோரிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அறிக்கை காலியாக இருக்கலாம்.

  4. “செயல்பாட்டை எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டி, கோப்பைச் சேமிப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்த பிறகு, “எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டவும்.

    அறிக்கையானது Apple_Intelligence_Report.json என்ற பெயரில் கோப்பாகச் சேமிக்கப்படும்.

  5. டெக்ஸ்ட் ரீடரில் கோப்பைத் திறக்கவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கவும்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.