இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உங்கள் குறிப்புகளை லாக் செய்தல்

குறிப்புகள் செயலியில், உங்கள் அதிமுக்கியத் தகவல்களைப் பாதுகாக்க குறிப்புகளை லாக் செய்யலாம். உங்கள் சாதன பாஸ்கோடு அல்லது பிரத்தியேக பாஸ்வேர்டைப் பயன்படுத்தி லாக் செய்யப்பட்ட குறிப்புகளை அணுகலாம். உங்களிடம் பல “குறிப்புகள்” கணக்குகள் இருந்தால், ஒவ்வொரு கணக்கிற்கும் லாக் செய்யும் முறையைத் தேர்வுசெய்யலாம் (எடுத்துக்காட்டாக, உங்கள் iCloud கணக்கிற்கு).

சாதன பாஸ்கோடு மூலம் குறிப்புகளை லாக் செய்தல்

லாக் செய்யப்பட்ட குறிப்புகளை அணுக உங்கள் சாதன பாஸ்கோடைப் பயன்படுத்தினால், தனி பாஸ்வேர்டை உருவாக்கி அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை, இதனால் லாக் செய்யப்பட்ட குறிப்புகளுக்கான அணுகலை இழக்கும் வாய்ப்பு குறைகிறது. உங்கள் சாதன பாஸ்கோடைப் பயன்படுத்தினால், உங்கள் லாக் செய்யப்பட்ட குறிப்புகளை அணுக Face ID அல்லது Touch IDஐப் பயன்படுத்தலாம்.

ஒரே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள பல சாதனங்கள் உங்களிடம் இருந்தால், ஒரு சாதனத்தில் உள்ள, லாக் செய்யப்பட்ட உங்கள் குறிப்புகளை அணுக அந்தச் சாதனத்தின் பாஸ்கோடைப் பயன்படுத்தலாம் (இல்லையெனில் Mac சாதனத்திற்கான உள்நுழைவு பாஸ்வேர்டைப் பயன்படுத்தலாம்).

சாதன பாஸ்கோடு மூலம் லாக் செய்யப்பட்ட குறிப்புகளை அணுக, நீங்கள் OS 16, iPadOS 16, macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்த வேண்டும். OSஇன் முந்தைய பதிப்பைக் கொண்ட சாதனங்களில், லாக் செய்யப்பட்ட குறிப்புகளை உங்களால் அணுக முடியாது.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. செயலிகள் என்பதைத் தட்டி “குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. பாஸ்வேர்டு என்பதைத் தட்டவும்.

  4. உங்களிடம் பல கணக்குகள் இருந்தால், நீங்கள் பாஸ்வேர்டை அமைக்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. “சாதன பாஸ்கோடைப் பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.

  6. கூடுதல் வசதிக்காக, நீங்கள் Face ID அல்லது Touch IDஐ ஆன் செய்யலாம்.

பிரத்தியேக பாஸ்வேர்டு மூலம் குறிப்புகளை லாக் செய்தல்

லாக் செய்யப்பட்ட குறிப்புகளுக்குப் பிரத்தியேக பாஸ்வேர்டை உருவாக்குவது கூடுதல் பாதுகாப்பை வழங்கும், ஆனால் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், லாக் செய்யப்பட்ட குறிப்புகளுக்கான அணுகலை நீங்கள் இழக்கக்கூடும்.

ஒரே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள அனைத்துச் சாதனங்களிலும் உங்கள் லாக் செய்யப்பட்ட குறிப்புகளை அணுக பிரத்தியேக பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட iCloud கணக்கு அல்லது "எனது iPadஇல்" கணக்கு இருந்தால், ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு பிரத்தியேக பாஸ்வேர்டை அமைக்கலாம்.

பிரத்தியேக பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யப்பட்ட குறிப்புகளை அணுக, நீங்கள் iOS 9.3, iPadOS 13, OS X 10.11.4 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். OSஇன் முந்தைய பதிப்பைக் கொண்ட சாதனங்களில் குறிப்புகளைப் பார்க்க முடியாது.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. செயலிகள் என்பதைத் தட்டி “குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. பாஸ்வேர்டு என்பதைத் தட்டவும்.

  4. உங்களிடம் பல கணக்குகள் இருந்தால், நீங்கள் பாஸ்வேர்டை அமைக்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. “பிரத்தியேக பாஸ்வேர்டைப் பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.

  6. கூடுதல் வசதிக்காக, நீங்கள் Face ID அல்லது Touch IDஐ ஆன் செய்யலாம்.

    உங்கள் குறிப்புகளை அன்லாக் செய்வதற்கான ஒரே வழிமுறையாக Face ID அல்லது Touch IDஐச் சார்ந்திருக்க வேண்டாம். உங்கள் Face ID அல்லது Touch ID அமைப்புகளைப் புதுப்பிக்கிறீர்கள் அல்லது குறிப்புகள் பாஸ்வேர்டை மாற்ற விரும்புகிறீர்கள் எனில், உங்கள் குறிப்புகள் பாஸ்வேர்டை மீண்டும் உள்ளிட வேண்டும்.

முக்கியம்: உங்கள் பிரத்தியேக பாஸ்வேர்டை மறந்துவிட்ட நிலையில் லாக் செய்யப்பட்ட குறிப்புகளை அணுக Face ID அல்லது Touch IDஐப் பயன்படுத்த முடியாவிட்டால், Apple அந்த குறிப்புகளுக்கான அணுகலை மீண்டும் பெற உங்களுக்கு உதவ முடியாது.

உங்கள் பிரத்தியேக பாஸ்வேர்டை மீட்டமைக்கலாம், ஆனால் முன்பு லாக் செய்யப்பட்ட குறிப்புகளுக்கான அணுகலை இது உங்களுக்கு வழங்காது. இனி நீங்கள் லாக் செய்யும் அனைத்துக் குறிப்புகளுக்கும் புதிய பிரத்தியேக பாஸ்வேர்டு பொருந்தும். அமைப்புகள் > செயலிகள் > குறிப்புகள் என்பதற்குச் சென்று, பாஸ்வேர்டுகள் > பாஸ்வேர்டை மீட்டமை என்பதைத் தட்டவும்.

iPhone அல்லது iPad இல் குறிப்புகளை எப்படி லாக் அல்லது அன்லாக் செய்வது என்பதற்கான Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

லாக் செய்யும் முறையை மாற்றுதல்

நீங்கள் பிரத்தியேகமான பாஸ்வேர்டைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் சாதன பாஸ்கோடைப் பயன்படுத்துவதற்கு மாறலாம். லாக் செய்யும் முறையை நீங்கள் மாற்றினால், முந்தைய முறையைப் பயன்படுத்தி நீங்கள் அணுகிய குறிப்புகள் புதிய முறையைப் பயன்படுத்தத் தொடங்கும்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. செயலிகள் என்பதைத் தட்டி “குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “பாஸ்வேர்டு” என்பதைத் தட்டி ஒரு கணக்கைத் தேர்வுசெய்யவும் (உங்களிடம் பல கணக்குகள் இருந்தால்), பிறகு “சாதன பாஸ்கோடைப் பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.

குறிப்பை லாக் செய்தல்

iCloudஇல் உள்ள குறிப்புகளையும் சாதனத்தில் உள்ள குறிப்புகளையும் மட்டுமே உங்களால் லாக் செய்ய முடியும். குறிச்சொற்கள், PDF, ஆடியோ, வீடியோ, Keynote, Pages அல்லது Numbers இணைப்புகளைக் கொண்ட குறிப்புகள், பிற கணக்குகளுடன் ஒத்திசைக்கப்படும் குறிப்புகள், விரைவுக் குறிப்புகள் ஆகியவற்றை உங்களால் லாக் செய்ய முடியாது. iCloudஇல் பகிரப்பட்ட குறிப்பை உங்களால் லாக் செய்ய முடியாது.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பைத் திறந்து, “குறிப்புச் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டவும் (மேல் வலது மூலையில் இருக்கும்).

  3. “லாக் செய்” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

குறிப்பு லாக் செய்யப்பட்டிருக்கும்போது, குறிப்புகள் பட்டியலில் தலைப்பு காட்டப்படும்.

குறிப்பிலிருந்து லாக்கை அகற்ற, “குறிப்புச் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டி (மேல் வலது மூலையில் இருக்கும்), “அகற்று” என்பதைத் தட்டவும்.

லாக் செய்யப்பட்ட குறிப்புகளைத் திறத்தல்

ஒரு லாக் செய்யப்பட்ட குறிப்பைத் திறந்தால், ஒரே கணக்கில் உள்ள லாக் செய்யப்பட்ட அனைத்துக் குறிப்புகளும் பல நிமிடங்களுக்குத் திறக்கப்படும் என்பதால் நீங்கள் எளிதாக மற்றொரு குறிப்பிற்குச் செல்லலாம் அல்லது பிற செயலிகளில் இருந்து தகவல்களை நகலெடுத்து ஒட்டலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. லாக் செய்த குறிப்பைத் தட்டி “பின்செல்” பட்டன் அல்லது “குறிப்பைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  3. குறிப்பைத் திறக்க, Face ID, Touch ID, உங்கள் சாதன பாஸ்கோடு அல்லது உங்கள் குறிப்புகள் பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும்.

உங்கள் குறிப்புகளை மீண்டும் லாக் செய்ய, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • திரையின் மேல்பகுதியில் உள்ள “அன்லாக்” பட்டன்-ஐத் தட்டவும்.

  • குறிப்புகள் பட்டியலின் மேலே உள்ள “இப்போது லாக் செய்” என்பதைத் தட்டவும்.

  • குறிப்புகள் செயலியை மூடுதல்.

  • உங்கள் iPadஐ லாக் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.