இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் VoiceOver சைகைகளைப் பயன்படுத்துதல்

VoiceOver ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, நிலையான தொடுதிரை சைகைகள் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும், அதுமட்டுமல்லாமல் கூடுதல் சைகைகள் திரையைச் சுற்றிச் செல்லவும் தனிப்பட்ட ஐட்டங்களைக் கட்டுப்படுத்தவும் உங்களை அனுமதிக்கும். VoiceOver சைகைகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு விரல்களால் தட்டுவதும் ஸ்வைப் செய்வதும் அடங்கும்.

VoiceOver சைகைகளைச் செயல்படுத்த, நீங்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, இரண்டு விரல்களால் தட்டுவதை நீங்கள் ஒரே கையில் உள்ள இரண்டு விரல்களைத் தட்டியோ, இரண்டு கைகளில் இருந்தும் ஒவ்வொரு விரலைத் தட்டியோ, உங்கள் கட்டை விரல்களைத் தட்டியோ செய்யலாம். ஒரு ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்து இரண்டு முறை தட்டுவதற்குப் பதிலாக, “பிரித்துத் தட்டுதல்” சைகையைப் பயன்படுத்தலாம். அதாவது ஒரு ஐட்டத்தைத் தொட்டுப் பிடித்து, மற்றொரு விரலால் திரையைத் தட்டவும்.

திரையில் உள்ள ஐட்டங்களைக் கண்டறிந்து பேசுதல்

திரையைக் கண்டறிய, உங்கள் விரலை அதன் மேல் இழுக்கவும். VoiceOver நீங்கள் தொடும் ஒவ்வொரு ஐட்டத்தின் பெயரையும் வாசிக்கும்.

மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக திரையைக் கண்டறிந்து பார்க்க, VoiceOver சைகைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆக்‌ஷன்

சைகை

ஒரு ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்துப் பேசுதல்

ஐட்டத்தைத் தட்டுதல் அல்லது தொடுதல்

அடுத்த ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்தல்

வலது புறம் ஸ்வைப் செய்தல்

முந்தைய ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்தல்

இடதுபுறமாக ஸ்வைப் செய்தல்

ஐட்டங்களின் குழுவிற்கு நகர்த்துதல்

இரண்டு விரல்களால் வலதுபுறமாக ஸ்வைப் செய்தல்

ஐட்டங்களின் தொகுப்பில் இருந்து நகர்த்துதல்

இரண்டு விரல்களால் இடதுபுறம் ஸ்வைப் செய்தல்

திரையில் உள்ள முதல் ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்தல்

திரையின் மேற்பகுதிக்கு அருகில் நான்கு விரல்களால் தட்டுதல்

திரையில் கடைசி ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்தல்

திரையின் கீழ்ப்பகுதிக்கு அருகில் நான்கு விரல்களால் தட்டுதல்

மேலிருந்து முழுத் திரையில் உள்ளவற்றைப் பேசுதல்

இரண்டு விரல்களால் மேலே ஸ்வைப் செய்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்திலிருந்து முழு திரையில் உள்ளவற்றைப் பேசுதல்

இரண்டு விரல்களால் கீழே ஸ்வைப் செய்தல்

இடைநிறுத்துதல் அல்லது பேச்சைத் தொடர்தல்

இரண்டு விரலால் தட்டுதல்

பட்டியலில் உள்ள நிலை, உரை தேர்ந்தெடுக்கப்பட்டதா இல்லையா என்பன போன்ற கூடுதல் தகவல்கள் குறித்து பேசுதல்

மூன்று விரல்களால் தட்டுதல்

வழிசெலுத்தல் ஸ்டைல்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, சமமான அல்லது குழுவாக்கப்பட்ட வழிசெலுத்தலைப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.

மேலே, கீழே, இடதுபுறம் மற்றும் வலதுபுறம் ஸ்க்ரோல் செய்தல்

வேறொரு பக்கத்திற்கு நகர்த்த, VoiceOver சைகைகளைப் பயன்படுத்தவும்.

ஆக்‌ஷன்

சைகை

ஒரு பக்கம் மேலே ஸ்க்ரால் செய்தல்

மூன்று விரலால் கீழே ஸ்வைப் செய்யவும்

ஒரு பக்கத்தில் கீழே ஸ்க்ரால் செய்தல்

மூன்று விரலால் மேலே ஸ்வைப் செய்யவும்

ஒரு பக்கத்தில் இடதுபுறமாக ஸ்க்ரால் செய்தல்

மூன்று விரலால் வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்

ஒரு பக்கத்தில் வலதுபுறமாக ஸ்க்ரால் செய்தல்

மூன்று விரலால் இடதுபுறம் ஸ்வைப் செய்யவும்

ஐட்டத்தில் நடவடிக்கை எடுத்தல்

ஒரு ஐட்டத்தில் செயல்களைச் செய்ய, VoiceOver சைகைகளைப் பயன்படுத்தவும்.

ஆக்‌ஷன்

சைகை

ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்தல்

தட்டவும்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்தைச் செயல்படுத்துதல்

இருமுறை தட்டவும்

ஐட்டத்தைத் தொட்டுப் பிடிக்கவும் (நீண்ட நேரம் அழுத்தவும்)

மூன்று முறை தட்டவும்

ஸ்லைடரை இழுத்தல்

தேர்ந்தெடுக்க ஸ்லைடரைத் தட்டி, ஒரு விரலால் மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்யவும் அல்லது அதிகரிக்கக்கூடிய மூன்று டோன்கள் கேட்கும் வரை ஸ்லைடரை இருமுறை தட்டிப் பிடித்து, இழுக்கவும்

தற்போதைய செயலைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல் (உதாரணமாக, இசை அல்லது வீடியோவை பிளே செய்தல் அல்லது இடைநிறுத்துதல், கேமராவில் புகைப்படம் எடுத்தல், பதிவைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல், ஸ்டாப்வாட்சைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல்)

இரண்டு விரலால் இருமுறை தட்டவும்

விழிப்பூட்டலை நிராகரித்தல் அல்லது முந்தைய திரைக்குத் திரும்புதல்

இரண்டு விரலால் ஸ்க்ரப் செய்யவும் (இரண்டு விரல்களை முன்னும் பின்னுமாக மூன்று முறை நகர்த்தி, “z”ஐ உருவாக்கவும்)

ஐட்டத்தைக் கண்டறிவதை எளிதாக்க அதன் லேபிளைத் திருத்துதல்

இரண்டு விரல்களால் இருமுறை தட்டிப் பிடிக்கவும்

உதவிக்குறிப்பு: ஒரு ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் செயல்படுத்த இருமுறை தட்டுவதற்குப் பதிலாக, ஒரு விரலால் ஒரு ஐட்டத்தைத் தொட்டுப் பிடித்து, மற்றொரு விரலால் திரையைத் தட்டவும்.

VoiceOverஐக் கட்டுப்படுத்த சைகைகளைப் பயன்படுத்துதல்

VoiceOverஐக் கட்டுப்படுத்த, இந்தச் சைகைகளைப் பயன்படுத்தவும்.

ஆக்‌ஷன்

சைகை

VoiceOverஐ ஒலிமுடக்குதல் அல்லது ஒலி இயக்குதல்

மூன்று விரலால் இருமுறை தட்டவும்.

“VoiceOver”, “ஜூம்” ஆகிய இரண்டும் ஆன் செய்யப்பட்டிருந்தால், மூன்று விரலால் மூன்று முறை தட்டுதல்.

திரை மறைப்பை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

(திரை மறைப்பு ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, டிஸ்ப்ளே கருப்பு நிறத்தில், ஆஃப் செய்யப்பட்டிருப்பதைப் போலத் தோன்றினாலும் திரை உள்ளடக்கங்கள் செயலில் இருக்கும்.)

மூன்று விரலால் மூன்று முறை தட்டவும்.

“VoiceOver”, “ஜூம்” ஆகிய இரண்டும் ஆன் செய்யப்பட்டிருந்தால், மூன்று விரலால் நான்கு முறை தட்டுதல்.

நிலையான சைகையைப் பயன்படுத்துதல்

அதிகரிக்கக்கூடிய மூன்று டோன்கள் கேட்கும் வரை திரையில் இருமுறை தட்டிப் பிடித்து, சைகைகளைச் செய்யவும். உங்கள் விரலை எடுக்கும்போது, VoiceOver சைகைகள் தொடங்கும்.

உதாரணமாக, மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்வதற்குப் பதிலாக உங்கள் விரலால் ஒலியளவு ஸ்லைடரை இழுக்க, ஸ்லைடரைத் தேர்ந்தெடுத்து, இருமுறை தட்டிப் பிடித்து, மூன்று டோன்களுக்காகக் காத்திருந்து, இடது அல்லது வலதுபுறமாக ஸ்லைடு செய்யவும்.

ஐட்டம் தேர்வியைத் திறத்தல்

இரண்டு விரலால் மூன்று முறை தட்டவும்.

ஐட்டங்களின் பட்டியலை விரைவாக பார்க்க, தேடல் புலத்தில் ஒரு பெயரை டைப் செய்து, பட்டியலை அகரவரிசைப்படி நகர்த்த வலது அல்லது இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும் அல்லது பட்டியலின் வலதுபுறத்தில் உள்ள அட்டவணைக் குறியீட்டைத் தட்டி, மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்யவும். கையெழுத்து அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு ஐட்டத்தின் பெயரை எழுதுவதன் மூலமும் நீங்கள் அதைத் தேர்ந்தெடுக்கலாம். உரையாக உள்ளிடாமல் திரையில் நேரடியாக பிரெய்லை டைப் செய்ய “பிரெய்ல் திரை உள்ளீடு” அம்சத்தைப் பயன்படுத்தினால், டைப் செய்து ஐட்டத்தைக் கண்டறியலாம்.

தேர்வு எதுவும் செய்யாமல் ஐட்டங்களுக்கான தேர்வியை நிராகரிக்க, இரண்டு விரல்களால் ஸ்க்ரப் செய்ய வேண்டும் (இரண்டு விரல்களை முன்னும் பின்னுமாக மூன்று முறை நகர்த்தி, “z” வடிவத்தை உருவாக்க வேண்டும்).

VoiceOver விரைவு அமைப்புகளைத் திறத்தல்

இரண்டு விரல்களால் நான்கு முறை தட்ட வேண்டும்.

“நேரடியாகக் கண்டறிதல்” அம்சத்தைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல்

நான்கு விரல்களால் மூன்று முறை தட்ட வேண்டும். VoiceOver மூலம் உங்களைச் சுற்றி இருப்பவை குறித்து நேரலை விளக்கங்களைப் பெறுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

VoiceOver ரோட்டரைப் பயன்படுத்துதல்

திரையில் உள்ள ரோட்டரைப் பயன்படுத்தி நீங்கள் VoiceOver அமைப்புகளை மாற்றலாம், திரையில் ஒரு ஐட்டத்திலிருந்து அடுத்த ஐட்டத்திற்குச் செல்லலாம், பிரெய்ல் திரை உள்ளீடு, கையெழுத்து போன்ற சிறப்பு உள்ளீட்டு முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். ரோட்டரைப் பயன்படுத்தி VoiceOverஐக் கட்டுப்படுத்துதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

ரோட்டருடன் இந்தச் சைகைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆக்‌ஷன்

சைகை

ரோட்டர் அமைப்பைத் தேர்வுசெய்தல்

இரண்டு விரல்களால் சுழற்ற வேண்டும்

முந்தைய ஐட்டத்திற்கு நகர்த்துதல் அல்லது (ரோட்டர் அமைப்பைப் பொறுத்து) நிலையை அதிகரித்தல்

மேலே ஸ்வைப் செய்ய வேண்டும்

அடுத்த ஐட்டத்திற்கு நகர்த்துதல் அல்லது (ரோட்டார் அமைப்பைப் பொறுத்து) நிலையைக் குறைத்தல்

கீழே ஸ்வைப் செய்ய வேண்டும்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.