iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் நினைவுத் திரைப்படங்களை பிளே செய்தல்

உங்கள் நினைவுகள் சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு நினைவையும் இசையுடன் கூடிய ஒரு திரைப்படமாகப் பார்க்கலாம். ஃபோட்டோஸ் செயலியில் உங்களிடம் உள்ள அனைத்துச் சேகரிப்புகளையும் ஆல்பங்களையும் அவை உருவாக்கப்பட்டதன்படி ஒரு நினைவுத் திரைப்படமாகப் பார்க்கலாம் அல்லது அவற்றைத் திருத்தி இன்னும் தனிப்பட்டதாக ஆக்கலாம்.

நினைவுத் திரைப்படத்தை பிளே செய்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் தேர்வுசெய்துள்ள நினைவுகளை ஸ்க்ரால் செய்து பார்க்க “நினைவுகள்” என்பதற்குக் கீழே இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும் அல்லது அவை அனைத்தையும் பார்க்க “நினைவுகள்” என்பதைத் தட்டவும்.

  4. ஒரு நினைவை பிளே செய்ய, நினைவின் கீழ் வலது மூலையில் உள்ள “பிளே செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. நினைவுத் திரைப்படம் பிளே ஆகும் போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • இடைநிறுத்துதல்: திரையைத் தட்டி, “இடைநிறுத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

    • பின்னோக்கி அல்லது முன்னோக்கிச் செல்ல: இடது அல்லது வலதுபக்கமாக ஸ்வைப் செய்யவும். அல்லது திரையைத் தட்டி, திரையின் கீழ் இடது அல்லது வலதுபக்கத்தில் உள்ள ஃபிரேம்களை ஸ்லைடு செய்யவும்.

    • ஒலிமுடக்குதல்: திரையைத் தட்டி, “ஒலிமுடக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • நினைவை மூட: திரையைத் தட்டி, “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

ஓர் ஆல்பம் அல்லது சேகரிப்பிலிருந்து நினைவுத் திரைப்படத்தை பிளே செய்தல்

ஃபோட்டோஸ் செயலியில் உங்களிடம் உள்ள அனைத்து ஆல்பங்களையும் சேகரிப்புகளையும் நினைவுத் திரைப்படங்களாகப் பார்க்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. ஏற்கெனவே உள்ள ஆல்பம் அல்லது சேகரிப்பைத் தேர்ந்தெடுத்து, புகைப்படங்களையும் வீடியோக்களையும் நினைவுத் திரைப்படமாகப் பார்க்க “பிளே செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

    நினைவுத் திரைப்படத்தில் மாற்றங்களைச் செய்ய, உங்கள் நினைவுகளைத் தனிப்பயனாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

    அடிப்படையில் இருந்து ஒரு நினைவுத் திரைப்படத்தை உருவாக்க, புகைப்பட ஆல்பத்தை உருவாக்கிய பிறகு, அதை ஒரு நினைவுத் திரைப்படமாகப் பார்க்க பின்வரும் படிகளைப் பின்பற்றவும்.

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், நினைவுத் திரைப்படத்தை நீங்கள் உருவாக்கலாம். நீங்கள் பார்க்க விரும்பும் கதையை விவரிக்கவும். Apple Intelligence அதற்கேற்ற சிறந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிந்து, திரைக்கதையாக அவற்றைத் தொகுத்து, இசையையும் சேர்க்கும். நினைவுத் திரைப்படத்தை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைப்பதில்லை. மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.