iPadஇல் சார்ஜ் வரம்பை அமைத்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், பேட்டரி ஆயுள் மிக விரைவில் குறைந்துவிடாமல் நீட்டித்திருக்க, குறிப்பாக iPadஐ அடிக்கடி சார்ஜ் செய்தாலோ நீண்ட நேரத்திற்கு சார்ஜிலேயே வைத்திருந்தாலோ நீங்கள் அதிகபட்ச பேட்டரி அளவை 80% ஆக அமைத்துக்கொள்ளலாம்.

“சார்ஜ் வரம்பு” அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், 80% எட்டும்போது சார்ஜ் செய்வதை iPad நிறுத்தும்.

iPad பேட்டரி அமைப்புகளில் சார்ஜிங் தகவல் கார்டு காட்டப்பட்டுள்ளது. பேட்டரியில் 80% சார்ஜ் இருக்கிறது என்றும் “80% வரம்பு வரை சார்ஜ் செய்யப்பட்டது” என்ற மெசேஜும் இந்த கார்டில் காட்டப்பட்டுள்ளன. “100%க்கு சார்ஜ் செய்” என்ற விருப்பத்தை பட்டன் வழங்குகிறது.

என்ன நடக்கும்?

  • 80% சார்ஜ் வரம்பு அமைக்கப்பட்டிருந்தாலும், துல்லியமான பேட்டரி சதவீதத்தைத் காட்டுவதற்காக உங்கள் iPad அவ்வப்போது 100% சார்ஜ் செய்யப்படும். உங்கள் iPad முழு சார்ஜ் அளவையும் வழக்கமாக நிறைவு செய்ய முடியாவிட்டால், இது அடிக்கடி நிகழலாம்.

சார்ஜ் வரம்பை அமைத்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, “பேட்டரி ஆயுள்” என்பதைத் தட்டவும்.

  3. 80% வரம்பை ஆன் செய்யவும். நீங்கள் எந்த நேரத்திலும் வரம்பை அகற்றலாம்.

சார்ஜ் வரம்பை மாற்றுதல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, “பேட்டரி ஆயுள்” என்பதைத் தட்டவும்.

  3. “80% வரம்பு” என்பதை ஆஃப் செய்துவிட்டு, பின்வரும் செயல்களில் ஒன்றைச் செய்யவும்:

    • 80% சார்ஜ் வரம்பைத் தற்காலிகமாக ஓவர்ரைடு செய்தல்: “இன்று முடியும் வரை அனுமதி” என்பதைத் தட்டவும். காலை 6:00 மணிக்கு சார்ஜ் வரம்பு 80%க்கு மாற்றப்படும்.

    • புதிய சார்ஜ் வரம்பை அமைத்தல்: “வரம்பை 100% என்று அமை” என்பதைத் தட்டவும். சார்ஜ் வரம்பு நீங்கள் மீண்டும் மாற்றும் வரை 100% ஆக இருக்கும்.

உங்கள் சார்ஜ் வரம்பைத் தற்காலிகமாக ஓவர்ரைடு செய்து, திட்டமிட்டதைவிட முன்கூட்டியே உங்கள் iPadஐ முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், அமைப்புகள் செயலிக்குச் சென்று, “பேட்டரி” என்பதைத் தட்டி, “100% வரை சார்ஜ் செய்” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.