இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Mail செயலியில் மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்தல் மற்றும் அவற்றை ஃபார்வேர்டு செய்தல்

Mail செயலியில் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கலாம், அவற்றை ஃபார்வேர்டு செய்யலாம்.

மின்னஞ்சலுக்குப் பதிலளித்தல்

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. மெசேஜைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • அனுப்புநருக்கு மட்டும் பதிலளித்தல்: “மேலும் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

    • அனுப்புநருக்கும் பிற பெறுநர்களுக்கும் பதிலளித்தல்: “அனைவருக்கும் பதிலளி” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. உங்கள் பதிலை டைப்செய்து, அனுப்ப “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கும்போது சில வார்த்தைகளை மேற்கோள் காட்டுதல்

நீங்கள் ஒரு மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கும்போது, எந்த விஷயத்திற்குப் பதிலளிக்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அனுப்புநரிடமிருந்து வந்த உரையையும் அதில் உள்ளடக்கலாம்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. அனுப்புநரின் மெசேஜில் உரையின் முதல் வார்த்தையைத் தொட்டுப் பிடித்து, கடைசி வார்த்தை வரை இழுக்கவும். (உரையைத் தேர்ந்தெடுத்தல், வெட்டுதல், நகலெடுத்தல், ஒட்டுதல் என்பதைப் பார்க்கவும்.)

  3. “மேலும் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டி, “பதிலளி” என்பதைத் தட்டி, உங்கள் மெசேஜை டைப் செய்யவும்.

குறிப்பு: மேற்கோளாகக் காட்டப்படும் வார்த்தைகளின் உட்தள்ளலை ஆஃப் செய்ய, “அமைப்புகள்  > செயலிகள் > Mail > மேற்கோள் அளவை அதிகரி” (கம்போஸிங் என்பதன் கீழ் இருக்கும்) என்பதற்குச் சென்று, “மேற்கோள் அளவை அதிகரி” என்பதை ஆஃப் செய்யவும்.

மின்னஞ்சலை ஃபார்வேர்டு செய்தல்

நீங்கள் ஒரு மின்னஞ்சலைப் புதிய பெறுநர்களுக்கு ஃபார்வேர்டு செய்யலாம்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. மெசேஜைத் தட்டி, “ஃபார்வேர்டு செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

    அசல் மெசேஜில் புகைப்படங்கள், ஆவணங்கள் போன்ற இணைப்புகள் இருந்தால், ஃபார்வேர்டு செய்யப்படும் மெசேஜில் அவற்றைச் சேர்க்க வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். சேர் அல்லது சேர்க்க வேண்டாம் என்பதைத் தேர்வுசெய்யவும்.

  3. புதிய பெறுநர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்.

  4. மெசேஜைத் தட்டி, உங்கள் பதிலை டைப் செய்யவும். ஃபார்வேர்டு செய்யப்படும் மெசேஜ் கீழே காட்டப்படும்.

மின்னஞ்சல்களைப் பின்தொடர்தல்

நீங்கள் அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்குப் பல நாட்கள் கழித்தும் பதில் பெறவில்லை எனில், அது குறித்து உங்களுக்கு நினைவூட்டும் வகையில் உங்கள் இன்பாக்ஸின் மேற்புறம் அந்த மின்னஞ்சல் தானாகவே நகர்த்தப்படும்.

“பின்தொடர்வுப் பரிந்துரைகள்” என்பதை ஆஃப் செய்ய, “அமைப்புகள்  > செயலிகள் > Mail” என்பதற்குச் சென்று, “பின்தொடர்வுப் பரிந்துரைகள்” என்பதை ஆஃப் செய்யவும்.

Mailஇல் தன்னியக்க பதிலளிப்பை அமைத்தல்

iCloud.comஇல், பெறப்படும் மின்னஞ்சலுக்குப் பதிலளிக்க நீங்கள் தன்னியக்க பதிலளிப்பை அமைக்கலாம் அல்லது மற்ற இன்பாக்ஸுக்கு மெசேஜ்களைத் தானாக ஃபார்வேர்டு செய்யலாம். iCloud.comஇல் உள்ள Mailஇல் தன்னியக்க பதிலளிப்பை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்

“ஸ்மார்ட் பதிலளிப்பு” அம்சத்தைப் பயன்படுத்துதல்

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் பெறும் மின்னஞ்சலுக்கு ஏற்றவாறு பதிலைப் பரிந்துரைக்க இதைப் பயன்படுத்தலாம். Mailஇல் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜப்பானியம், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.