iPadஇல் நினைவூட்டல்கள் செயலியில் ஐட்டங்களை நீக்குதல் அல்லது மீட்டெடுத்தல்

நினைவூட்டல்கள் செயலியின் பட்டியல்களில் உள்ள ஐட்டங்களை நிரந்தரமாக நீக்கலாம். நீங்கள் தவறுதலாக ஒரு ஐட்டத்தை நீக்கினால், “சமீபத்தில் நீக்கியவை” பட்டியலில் இருந்து 30 நாட்களுக்குள் அதை மீட்டெடுக்கலாம்.

ஐட்டத்தை நீக்குதல்

  1. iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. பட்டியலைப் பார்க்கும்போது, ஒரு ஐட்டத்தீன் மீது இடதுபுறமாக ஸ்வைப் செய்து பிறகு “நீக்கு” என்பதைத் தட்டவும்.

உடனடியாகச் செயல்தவிர்க்க, மூன்று விரல்களால் தட்டவும் அல்லது உங்கள் iPadஐ அசைக்கவும்.

சமீபத்தில் நீக்கப்பட்ட ஐட்டங்களை மீட்டெடுத்தல் அல்லது நிரந்தரமாக நீக்குதல்

  1. iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. பட்டியல் காட்சியில், “சமீபத்தில் நீக்கியவை” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்ய:

    • ஐட்டத்தை மீட்டெடுத்தல்: ஐட்டத்தைத் தட்டி, பின்னர் “மீட்டெடு” என்பதைத் தட்டவும். ஐட்டம் இயல்புநிலைப் பட்டியலுக்கு நகரும்.

    • ஐட்டத்தை நிரந்தரமாக நீக்குதல்: ஐட்டத்தின் மீது இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “நீக்கு” என்பதைத் தட்டி, மீண்டும் “நீக்கு” என்பதைத் தட்டவும். உங்கள் சாதனங்கள் அனைத்திலிருந்தும் ஐட்டம் உடனடியாக அகற்றப்படும்.

“சமீபத்தில் நீக்கியவை” கோப்புறையில் உள்ள ஐட்டங்கள் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நிரந்தரமாக அகற்றப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.