இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் இருந்து மெசேஜ்களை அனுப்புதல், அவற்றுக்குப் பதிலளித்தல்

மெசேஜ்கள், படங்கள் மற்றும் பலவற்றை நீங்கள் அனுப்பலாம். ஒரு திரெட்டில் உள்ள உரையாடலிலோ குறிப்பிட்ட கருத்துகளுக்கோ நீங்கள் பதிலளிக்கலாம். Siriஐப் பயன்படுத்தி உங்கள் மெசேஜ்களைக் கேட்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம்.

மெசேஜஸ் செயலியில் உள்ள அனைத்து அம்சங்களையும் முழுமையாகப் பயன்படுத்த, நீங்கள் மெசேஜஸ் செயலியை அமைத்திருக்க வேண்டும்.

Siri: Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்: “Read my last message from Antonio.” Siriஐப் பயன்படுத்துவது எப்படி என்று அறிக.

“மெசேஜஸ்” உரையாடல் பட்டியல் இடதுபுறத்திலும் உரையாடலுக்கான டிரான்ஸ்கிரிப்ட் வலதுபுறத்திலும் காட்டப்பட்டுள்ளன. படிக்காத மெசேஜ் நீல நிறப் புள்ளியால் குறிக்கப்பட்டுள்ளது.

உரையாடலைத் தொடங்குதல்

புதிய உரையாடலைத் தொடங்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு நீங்கள் மெசேஜ் அனுப்பலாம்.

“மெசேஜஸ்” உரையாடல் பட்டியல் இடதுபுறத்திலும் உரையாடலுக்கான டிரான்ஸ்கிரிப்ட் வலதுபுறத்திலும் காட்டப்பட்டுள்ளன. மேலே, தொடர்பு ஐகானைத் தட்டினால் உரையாடல் விவரங்கள் திறக்கப்படும்.
  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் மேல்பகுதியில் உள்ள கம்போஸ் பட்டன்-ஐத் தட்டவும்.

  3. பெறுநர் புலத்தைத் தட்டி, ஒவ்வொரு பெறுநரின் ஃபோன் எண், தொடர்பின் பெயர் அல்லது Apple கணக்கை உள்ளிடவும்.

    தொடர்புகளில் இருந்து பெறுநர்களைத் தேர்வுசெய்ய, தொடர்பைச் சேர்ப்பதற்கான பட்டன்-ஐத் தட்டவும்.

  4. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

  5. அனுப்ப “அனுப்பு” பட்டன் ஐகானைத் தட்டவும்.

    மெசேஜை அனுப்ப முடியாவிட்டால் ஒரு விழிப்பூட்டல் காட்டப்படும். மெசேஜை மீண்டும் அனுப்ப முயல்வதற்கு அனுப்புதல் தோல்வியடைந்ததைக் குறிக்கும் பட்டன் ஐகானைத் தட்டவும்.

ஓர் உரையாடலில் இருந்து உரையாடல் பட்டியலுக்குத் திரும்பச் செல்ல “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால் Genmoji என அழைக்கப்படும் பிரத்தியேக இமோஜியை நீங்கள் உருவாக்கலாம். Genmoji மூலம் நீங்களே இமோஜியை உருவாக்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

சிக்கல்களை எதிர்கொண்டால், iPhone அல்லது iPadஇல் மெசேஜ்களை அனுப்பவோ பெறவோ முடியாவிட்டால் என்ன செய்வது என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

மெசேஜுக்குப் பதிலளித்தல்

உரையாடல் பட்டியலில் மெசேஜ்கள் உரையாடல் வாரியாகக் குழுவாக்கப்படும். உரையாடலில் ஒரு புள்ளி காட்டப்பட்டால், அதிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களைப் படிக்கவில்லை என்று அர்த்தம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடல் பட்டியலில், நீங்கள் பங்கேற்க விரும்பும் உரையாடலைத் தட்டவும்.

  3. வார்த்தைப் புலத்தைத் தட்டி, உங்கள் மெசேஜை உருவாக்கவும். அதன் பிறகு, மெசேஜை அனுப்ப “அனுப்பு” பட்டன் ஐகானைத் தட்டவும்.

Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் பெறும் மெசேஜ்களுக்கு ஏற்றவாறு பதிலளிப்பதைப் பரிந்துரைக்க அதைப் பயன்படுத்தலாம். மெசேஜஸ் செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: உங்களுக்கு எப்போது மெசேஜ் அனுப்பப்பட்டது என்பதை நீங்கள் பார்க்க முடியும். உரையாடலில் உள்ள அனைத்து மெசேஜ்களுக்குமான நேர விவரங்களைப் பார்க்க மெசேஜ் பபுள் மீது இடதுபுறமாக இழுக்கவும்.

குறிப்பிட்ட மெசேஜுக்கு இன்லைனில் பதிலளித்தல்

குறிப்பிட்ட மெசேஜுக்கு இன்லைனில் நீங்கள் பதிலளிக்கலாம். நீங்கள் எந்த மெசேஜுக்குப் பதிலளிக்கிறீர்கள் என்பது இன்லைன் பதிலில் காட்டப்படும். எந்த மெசேஜுக்குப் பதிலளிக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுவது, பல மெசேஜ்களைக் கொண்ட உரையாடலை ஒழுங்கமைக்க உதவும்.

மெசேஜஸில் உள்ள குழு உரையாடலில் இன்லைன் பதிலை உருவாக்குதல். உரையாடலில் உள்ள மற்றொரு நபர் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவரது பெயர் தடிமனான நீல நிற எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது.
  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடல் பட்டியலில், நீங்கள் பங்கேற்க விரும்பும் உரையாடலைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • நீங்கள் பதிலளிக்க விரும்பும் மெசேஜ் பபுள் மீது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

    • நீங்கள் பதிலளிக்க விரும்பும் மெசேஜ் பபுளைத் தொட்டுப் பிடித்து, “பதிலளி” என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் மெசேஜை உள்ளிட்டு, “அனுப்பு” பட்டன் ஐகானைத் தட்டவும்.

    குறிப்பு: குழு உரையாடலில் உள்ள அனைவராலும் உங்களின் இன்லைன் பதிலைப் பார்க்க முடியும். தனிப்பட்ட முறையில் பதிலளிக்க, உரையாடலின் மேலே உள்ள குழு ஐகானைத் தட்டி, நீங்கள் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்ப விரும்பும் நபரின் ஐகானைத் தொட்டுப் பிடித்து, “மெசேஜ் அனுப்பு” என்பதைத் தட்டவும்.

  5. முதன்மை உரையாடலுக்குச் செல்ல, மங்கலான பின்னணியைத் தட்டவும்.

தம்ப்ஸ்-அப், இதயம் போன்ற Tapback மூலம் பதிலளிக்க மெசேஜைத் தொட்டுப் பிடிக்கவும்.

உதவிக்குறிப்பு: மெசேஜின் ஒரு பகுதியை நகலெடுக்க, மெசேஜைத் தொட்டுப் பிடித்து, “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, நீங்கள் நகலெடுக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, “நகலெடு” என்பதைத் தட்டவும்.

பூட்டுத் திரையில் இருந்து மெசேஜ்களுக்கு பதிலளித்தல்

மெசேஜஸ் செயலியைத் திறக்காமல் பூட்டுத் திரையில் இருந்தே மெசேஜ்களுக்குப் பதிலளிக்கலாம். பூட்டுத் திரை அம்சங்களை ஆன் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

சில பபுள்கள் நீல நிறத்திலும் மற்றவை பச்சை நிறத்திலும் இருப்பது ஏன்?

iMessageஐப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்ப முடிந்தால், மெசேஜை அனுப்புவதற்கான அம்புக்குறி நீல நிறத்தில் “அனுப்பு” பட்டன் காட்டப்படும், நீல நிற பபுளில் மெசேஜ் காட்டப்படும்.

பெறுநர் Apple சாதனத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் உங்களால் iMessageஐப் பயன்படுத்த முடியாது. இந்தச் சூழல்களில் நீங்கள் SMS, MMS அல்லது RCSஐப் பயன்படுத்தலாம். SMS, MMS அல்லது RCS மூலம் அனுப்பப்படும் மெசேஜ்கள் பச்சை நிற பபுள்களில் தோன்றும்.

மேலும் தகவலுக்கு, iMessage, RCS மற்றும் SMS/MMSக்கு இடையேயான வேறுபாடு என்ன? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்

குறிப்பு: Apple அல்லாத சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நீங்கள் மெசேஜ்களை அனுப்பும்போது அவை எதிர்பார்த்தபடி காட்டப்படாமல் போகலாம்.

நேரலை மொழிபெயர்ப்பு அம்சத்தைப் பயன்படுத்துதல்

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், மெசேஜஸில் உள்ள உரையைத் தானாக மொழிபெயர்க்க இதைப் பயன்படுத்தலாம். மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை மொழிபெயர்த்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.