இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Mail செயலியில் மின்னஞ்சல்களை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்

இனி உங்களுக்குத் தேவையில்லாத மின்னஞ்சல்களை நீக்கலாம் அல்லது காப்பகப்படுத்தலாம். நீங்கள் மனதை மாற்றினால், நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்டெடுக்க முடியும்.

மின்னஞ்சல்களை நீக்குதல்

மின்னஞ்சல்களை நீக்குவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • முதன்மை மெசேஜைப் பார்க்கும்போது: மின்னஞ்சலுக்கு மேலே உள்ள “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • மெசேஜ் பட்டியலைப் பார்க்கும்போது: “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, நீங்கள் நீக்க விரும்பும் மின்னஞ்சல்களின் செக்பாக்ஸ்களைத் தட்டி அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் பட்டியலின் கீழ்ப்பகுதியில் உள்ள “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

      முக்கியம்: பரிவர்த்தனைகள், அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் உள்ள மெசேஜ்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, அந்தப் பிரிவில் அந்த அனுப்புநரிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மெசேஜ்களும் தேர்ந்தெடுக்கப்படும்.

    • அனுப்புநரின் டைஜஸ்ட் காட்சியில் பார்க்கும்போது: ஒரு மெசேஜில் இடதுபக்கம் ஸ்வைப் செய்து, “பதிலளிப்புச் செயல்கள்” பட்டன் என்பதைத் தட்டவும்.

நீக்குதல் உறுதிப்படுத்தலை ஆஃப் செய்ய, “அமைப்புகள்  > செயலிகள் > Mail” என்பதற்குச் சென்று, “நீக்கும் முன் கேள்” (“மெசேஜ்கள்” என்பதன் கீழ் இருக்கும்) என்பதை ஆஃப் செய்யவும்.

நீக்கப்பட்ட மின்னஞ்சலை மீட்டெடுத்தல்

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் மெயில்பாக்ஸ்களைப் பார்க்க மேல் இடது மூலையில் உள்ள “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, மின்னஞ்சல் கணக்கை அடுத்துள்ள “சுருக்கப்பட்டது” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “டிராஷ்” என்பதைத் தட்டி, நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் மெசேஜைத் தட்டவும்.

  4. “நகர்த்து” பட்டன்-ஐத் தட்டி, மின்னஞ்சலை நகர்த்த மெயில்பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் அனைத்துக் கணக்குகளில் இருந்தும் நீக்கிய மெசேஜ்களை எளிதில் பார்க்க, உங்கள் அனைத்துக் கணக்குகளில் இருந்தும் நீக்கிய மெசேஜ்களைக் கொண்ட ஒரு மெயில்பாக்ஸைச் சேர்க்கலாம். மேல் இடதுபுறத்தில் உள்ள “மெயில்பாக்ஸ்கள்” என்பதைத் தட்டி, பட்டியலின் மேலே உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, “அனைத்து டிராஷ்” மெயில்பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

நீக்குவதற்குப் பதிலாகக் காப்பகப்படுத்துதல்

“காப்பகப்படுத்தியவை” மெயில்பாக்ஸில் மின்னஞ்சல் மெசேஜ்களை நீங்கள் காப்பகப்படுத்தலாம். (நீங்கள் “காப்பகப்படுத்தியவை” மெயில்பாக்ஸை அமைத்திருந்தாலும், விரும்பினால் மெசேஜ்களை நீக்கவும் செய்யலாம்.)

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “Mail” என்பதைத் தட்டவும்.

  3. Mail கணக்குகளைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • நீங்கள் iCloud மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தினால்: iCloudஐத் தட்டி, “மெயில்பாக்ஸ் செயல்பாடுகள்” என்பதைத் தட்டவும்.

    • நீங்கள் மற்றொரு மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தினால்: மின்னஞ்சல் கணக்கைத் தட்டி, கணக்கு அமைப்புகளைத் தட்டி, “மேம்பட்டது” என்பதைத் தட்டவும்.

  4. “மெயில்பாக்ஸைக் காப்பகப்படுத்து” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (“நிராகரிக்கப்பட்ட மெசேஜ்களை இதற்கு நகர்த்தவும்” என்பதன் கீழ் இருக்கும்).

இந்த விருப்பத்தை ஆன் செய்தால், மின்னஞ்சலைக் காப்பகப்படுத்துவதற்குப் பதிலாக அதை நீக்க, “காப்பகப்படுத்து” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, “மெசேஜ்களை டிராஷுக்கு அனுப்பு” என்பதைத் தட்டவும்.

நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்

நீக்கிய மெசேஜ்களை எவ்வளவு கால அளவிற்கு டிராஷ் மெயில்பாக்ஸில் வைத்திருக்கலாம் என்பதைத் தேர்வுசெய்யும் வசதியைச் சில மின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் வழங்குகின்றன.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “Mail” என்பதைத் தட்டவும்.

  3. Mail கணக்குகளைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • நீங்கள் iCloud மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தினால்: iCloudஐத் தட்டி, “மெயில்பாக்ஸ் செயல்பாடுகள்” என்பதைத் தட்டவும்.

    • நீங்கள் மற்றொரு மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தினால்: உங்கள் மின்னஞ்சல் வழங்குநர் பெயரைத் தட்டி, “கணக்கு அமைப்புகள்” என்பதைத் தட்டி “மேம்பட்டது” என்பதைத் தட்டவும்.

  4. “அகற்று” என்பதைத் தட்டி, நேர இடைவெளியைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு: சில மின்னஞ்சல் சேவை வழங்குநர்கள் உங்கள் தேர்வை ஓவர்ரைடு செய்யக்கூடும். எடுத்துக்காட்டாக, நீங்கள் “வேண்டாம்” என்பதைத் தேர்ந்தெடுத்தாலும் கூட, நீக்கப்பட்ட மெசேஜ்களை 30 நாட்களுக்கு மேல் iCloud வைத்திருக்காது.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.