இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டைக் கண்டறிதல்

iPadஇல் உங்கள் கணக்குகளின்படி தேடுவதன் மூலமோ அவற்றை வரிசைப்படுத்துவதன் மூலமோ இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டை நீங்கள் கண்டறியலாம்.

கணக்கின்படி தேடுவதன் மூலம் இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டைக் கண்டறிதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் மேல்பகுதியில் உள்ள தேடல் புலத்தில் கணக்கின் பெயரை உள்ளிடவும்.

  3. கணக்கைத் தட்டி, பாஸ்வேர்டு புலத்தைத் தட்டவும்.

கணக்குகளை வரிசைப்படுத்துவதன் மூலம் இணையதளம் அல்லது செயலிக்கான உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறிதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “அனைத்தும்” என்பதைத் தட்டவும்.

  3. கணக்குகள் பட்டியலின் கீழே உள்ள “வகைப்படுத்து” பட்டன்-ஐத் தட்டி, உங்கள் கணக்குகளை வரிசைப்படுத்த விரும்பும் விதத்தைத் தட்டவும்.

  4. கணக்கைக் கண்டறிந்து அதைத் தட்டி, பாஸ்வேர்டு புலத்தைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.