இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மெசேஜஸ் செயலியில், “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

நீங்கள் ஒரு மெசேஜைப் படித்துவிட்டதாக அதை அனுப்பியவர் தானாகவே தெரிந்துகொள்ள அனுமதிக்க விரும்பினால் “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஆன் செய்திருந்தால், அனுப்புநர் அனுப்பிய மெசேஜ்களுக்குக் கீழே “படிக்கப்பட்டது” என்ற வார்த்தை அவருக்குக் காட்டப்படும், இது அவரின் மெசேஜ்களை நீங்கள் படித்துவிட்டீர்கள் என்பதைக் குறிக்கும். நீங்கள் அவரின் மெசேஜைப் படிக்கவில்லை என்றால், அனுப்புநர் “டெலிவரி செய்யப்பட்டது” என்று காட்டப்படும்.

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை நீங்கள் அனைவருக்குமோ குறிப்பிட்ட தொடர்புகளுக்கு மட்டுமே ஆன் செய்துகொள்ளலாம்.

குறிப்பு: “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தைப் பயன்படுத்த, நீங்களும் உங்கள் பெறுநரும் iMessageஐ ஆன் செய்திருக்க வேண்டும்.

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஆன் செய்தல்

நீங்கள் மெசேஜ்களைத் திறந்துவிட்டதாக அனைவரும் தெரிந்துகொள்வதை அனுமதிக்க விரும்பினால் “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஆன் செய்யலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “மெசேஜஸ்” என்பதைத் தட்டவும்.

  3. “படித்ததற்கான உறுதிப்படுத்தலை அனுப்பு” என்பதை ஆன் செய்யவும்.

குறிப்பு: “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஒரு குறிப்பிட்ட தொடர்புக்கு நீங்கள் ஆஃப் செய்திருந்தால், அந்த ஒரு தொடர்புக்கான அமைப்பைத் தனியே மீண்டும் ஆன் செய்ய வேண்டும். (கீழே உள்ள “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆன் செய்தல் என்பதைப் பார்க்கவும்.)

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஆஃப் செய்தல்

நீங்கள் மெசேஜ்களைத் திறந்துள்ளீர்கள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பவில்லை என்றால், “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஆஃப் செய்யலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “மெசேஜஸ்” என்பதைத் தட்டவும்.

  3. “படித்ததற்கான உறுதிப்படுத்தலை அனுப்பு” என்பதை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை நீங்கள் இதுவரை தனித்தனியே ஆன் செய்யாத தொடர்புகளின் உரையாடல்களில் மட்டுமே அம்சம் ஆஃப் செய்யப்படும். (கீழே உள்ள “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆஃப் செய்தல் என்பதைப் பார்க்கவும்.)

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆன் செய்தல்

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை நீங்கள் பொதுவாக ஆஃப் செய்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பெறுநரிடமிருந்து வரும் மெசேஜ்களுக்கு மட்டுமே “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை அந்த உரையாடலில் ஆன் செய்து அவரின் மெசேஜ்களைப் படித்துவிட்டதை அவர் தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலைத் தட்டி, உரையாடலின் மேல்பகுதியில் உள்ள தொடர்பின் ஐகானைத் தட்டவும்.

  3. “படித்ததற்கான உறுதிப்படுத்தலை அனுப்பு” என்பதை ஆன் செய்யவும்.

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆஃப் செய்தல்

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் ஆன் செய்திருக்கும் பட்சத்தில், “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை இனி அவர் பார்க்க வேண்டாம் என்று விரும்பினால், அந்த ஒரு தொடர்புக்கான அமைப்பை நீங்கள் ஆஃப் செய்யலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலைத் தட்டி, உரையாடலின் மேல்பகுதியில் உள்ள தொடர்பின் ஐகானைத் தட்டவும்.

  3. “படித்ததற்கான உறுதிப்படுத்தலை அனுப்பு” என்பதை ஆஃப் செய்யவும்.

உங்கள் மெசேஜ்களை வேறொருவர் பார்க்கும்போது, படித்ததற்கான உறுதிப்படுத்தலைப் பெறுதல்

“படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை உங்களைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் ஆன் செய்ய முடியாது. உங்கள் மெசேஜ்களைத் திறக்கும்போது படித்ததற்கான உறுதிப்படுத்தலைப் பெற, அந்த அம்சத்தை ஆன் செய்யும்படி பெறுநரிடம் கேட்டுக்கொள்ளவும். மேலே உள்ள “படித்ததற்கான உறுதிப்படுத்தல்” அம்சத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆன் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.