இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மெசேஜ்களை ஸ்கிரீன் செய்தல் மற்றும் ஃபில்டர் செய்தல்

தெரியாத அனுப்புநர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை ஸ்கிரீன் செய்வது, ஃபில்டர் செய்வது மற்றும் வணிக விழிப்பூட்டல்களை ஆஃப் செய்வதன் மூலம், நீங்கள் பெறும் தேவையற்ற மெசேஜ்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

“மெசேஜஸ்” செயலியில் உரையாடல் பட்டியல் காட்டப்பட்டுள்ளது. ஃபில்டர் மெனுவில் எந்த ஃபில்டரும் தேர்ந்தெடுக்கப்படாததால், அனைத்து மெசேஜ்களும் காட்டப்பட்டுள்ளன.

தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் மெசேஜ்களை ஸ்கிரீன் செய்தல் மற்றும் ஃபில்டர் செய்தல்

தெரியாத அனுப்புநர்கள் உங்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்புவதை நீங்கள் தடுக்கலாம். அவர்களின் மெசேஜ்கள் பிற கோப்புறைகளில் ஃபில்டர் செய்யப்படுவதுடன், நீங்கள் விரும்பினால் மட்டுமே அவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடல் பட்டியலின் மேல் வலதுபுறம் உள்ள “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, “ஃபில்டர் செய்வதை நிர்வகிக்கவும்” என்பதைத் தட்டவும்.

  3. “தெரியாத அனுப்புநர்களை ஸ்கிரீனிங் செய்தல்” என்பதை ஆன் செய்யவும்.

  4. குறிப்பிட்ட சில தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளை அனுமதிக்க விரும்பினால், “அறிவிப்புகளை அனுமதி” என்பதைத் தட்டி, குறிப்பிட்ட வகைகளை ஆன் அல்லது ஆஃப் செய்யவும். (நாடு மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து விருப்பங்கள் மாறுபடும்.)

    எடுத்துக்காட்டாக, சரிபார்ப்புக் குறியீடுகள் போன்ற நேர வரையறைக்குட்பட்ட மெசேஜ்களுக்கான அறிவிப்புகளை நீங்கள் அனுமதிக்கலாம்.

தெரியாத SMS, MMS மற்றும் RCS மெசேஜ்களுக்குக் கூடுதல் ஸ்பேம் ஃபில்டரிங் மற்றும் ஸ்கிரீனிங்கை அமைக்கலாம். iPhone பயனர் வழிகாட்டியில் மெசேஜ்களை ஸ்கிரீன் செய்தல் மற்றும் ஃபில்டர் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

குறிப்பு: விளம்பரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளில் (iPhoneஇல் கிடைக்கக்கூடிய அல்லது உங்கள் மூன்றாம் தரப்பு மெசேஜ் ஃபில்டரிங் நீட்டிப்பு வழங்கக்கூடியவற்றில் பயன்படுத்தப்படும்) ஃபில்டர்கள் பயன்படுத்தப்படும். 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை பதிலளித்துள்ள அனுப்புநர்களுக்கு “மெசேஜ் ஃபில்டரிங்” அம்சம் பயன்படுத்தப்படாது. அந்த அனுப்புநர்களைத் தடுக்க அல்லது புகாரளிக்க முயலவும்.

தெரியாத அனுப்புநர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களைச் சரிபார்த்து, தெரிந்த அனுப்புநர்களாக அவர்களைக் குறித்தல்

தெரிந்த அனுப்புநர் என்பவர், நீங்கள் “தெரிந்தவர்” எனக் குறித்த அல்லது தொடர்புகள் செயலியில் நீங்கள் சேர்த்தவராக இருக்கலாம். தெரியாத அனுப்புநர்கள் பிரிவில் உள்ள ஒருவர் அனுப்பும் மெசேஜ்கள் உங்கள் உரையாடல் பட்டியலில் காட்டப்பட வேண்டும் என்றாலோ தெரியாத அனுப்புநர் அனுப்பிய இணைப்பை உங்களால் திறக்க முடியவில்லை என்றாலோ, அவர்களைத் தெரிந்த அனுப்புநராக மாற்றவும்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடல் பட்டியலின் மேல் வலதுபுறம் உள்ள “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, “தெரியாத அனுப்புநர்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் உரையாடல் பட்டியலில் நீங்கள் பார்க்க விரும்பும் அனுப்புநரின் மெசேஜைத் தட்டி “தெரிந்தவர் எனக் குறி” என்பதைத் தட்டவும்.

    • உரையாடலின் மேல்பகுதியில் உள்ள அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணைத் தட்டி, பிறகு “புதிய தொடர்பை உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

தெரிந்தவர் என்று அனுப்புநரைக் குறிக்கும் வரை அல்லது ஒரு தொடர்பாக அவரைச் சேர்க்கும் வரை, எதிர்காலத்தில் பெறப்படும் மெசேஜ்கள் ஃபில்டர் செய்யப்பட்டு “தெரியாத அனுப்புநர்” கோப்புறையில் வைக்கப்படும்.

வணிக விழிப்பூட்டல்களை ஆஃப் செய்தல்

உங்கள் ஆர்டர்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகள் குறித்த விழிப்பூட்டல்களையும் அறிவிப்புகளையும் சில வணிகங்கள் உங்களுக்கு அனுப்பும். இவற்றை நீங்கள் ஆஃப் செய்துகொள்ளலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “மெசேஜஸ்” என்பதைத் தட்டவும்.

  3. Apple Messages for Businessஐ ஆஃப் செய்ய, “வணிக மெசேஜ்கள்” என்பதைத் தட்டி, “வணிக அறிவிப்புகள்” என்பதை ஆஃப் செய்யவும்.

நீங்கள் ஸ்பேம் மெசேஜ்களைப் பெறும்போது புகாரளிக்கலாம்.

Apple Messages for Business & தனியுரிமை என்பதைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: தேவையற்ற மெசேஜ்களைத் தவிர்ப்பதற்கான மற்றொரு வழி, ஸ்கிரீன் டைம் மூலம் உங்கள் தொடர்புகளிலிருந்து வரும் மெசேஜ்களை மட்டும் அனுமதிப்பது.

அறிவிப்புகள் காட்டப்படும் விதத்தையும் மற்றும் பலவற்றையும் மாற்ற, உங்கள் அறிவிப்பு விருப்பங்களை அமைக்கலாம்.

மெசேஜஸ் செயலியில் இருந்து வரும் அறிவிப்புகளை இடைநிறுத்த, தொந்தரவு செய்ய வேண்டாம் அல்லது வேறொரு ஃபோகஸ் பயன்முறையை ஆன் செய்யவும்.

தேவையற்ற மெசேஜ்களைப் புகாரளிப்பதற்கும் தடுப்பதற்குமான பிற வழிகளைத் தெரிந்துகொள்ள, ஃபிஷிங் மெசேஜ்கள், மோசடி அழைப்புகள் மற்றும் பிற மோசடிகளைக் கண்டறிந்து தவிர்த்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.