இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் ஒரு செயலியில் பல சாளரங்களைத் திறத்தல் மற்றும் பார்த்தல்

செயலியில் புதிய சாளரத்தைத் திறத்தல்

  1. பல சாளரங்களை ஆதரிக்கும் செயலியின் ஐகானை (எடுத்துக்காட்டாக Mail, குறிப்புகள், Safari, கோப்புகள் மற்றும் பிற செயலிகள்) மெனு காட்டப்படும் வரை தொட்டுப் பிடிக்கவும்.

  2. மெனுவிற்குச் சென்று “புதிய சாளரம்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    iPad முகப்புத் திரையில் Freeform செயலி மெனு திறக்கப்பட்டு, நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய செயல்களின் பட்டியல் காட்டப்பட்டுள்ளது. செயலியில் புதிய சாளரத்தைத் திறப்பது, புதிய போர்டை உருவாக்குவது, செயலியின் திறந்திருக்கும் சாளரங்கள் அனைத்தையும் காட்டுவது மற்றும் பல செயல்கள் இதில் அடங்கும்.

குறிப்பு: மாற்றாக, செயலியில் புதிய சாளரத்தைத் திறக்க, Dockஇல் இருந்து செயலி ஐகானை அதே செயலியின் மற்றொரு சாளரத்தின் மீது இழுக்கலாம் அல்லது உள்ளடக்கத்தை (எடுத்துக்காட்டாக, குறிப்பு அல்லது Mail மெசேஜ்) செயலிச் சாளரத்திற்கு வெளியே அல்லது iPadஇன் விளிம்புகளுக்கு இழுத்து அந்த உள்ளடக்கத்திற்காக மட்டும் ஒரு சாளரத்தைத் திறக்கலாம்.

செயலியின் திறந்துள்ள சாளரங்களைப் பார்த்தல்

ஒரு செயலியில் பல சாளரங்கள் திறந்திருந்தால், செயலி Exposé மூலம் குறிப்பிட்ட செயலியின் திறந்திருக்கும் சாளரங்கள் அனைத்தையும் நீங்கள் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

  1. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • Dockஐ வெளிப்படுத்த திரையின் கீழ் விளிம்பிலிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    • முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. முகப்புத் திரையில் அல்லது Dockஇல், சாளரங்களைப் பார்க்க செயலியைத் தொட்டுப் பிடித்து, “அனைத்துச் சாளரங்களையும் காட்டு” என்பதைத் தட்டவும் அல்லது “திறந்திருக்கும் சாளரங்கள்” என்பதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சாளரங்களில் ஒன்றைத் தட்டவும்.

    குறிப்பு: முகப்புத் திரையில் ஒரு செயலியை நீண்ட நேரம் தொட்டுப் பிடித்தால், அனைத்துச் செயலிகளும் ஜிகிள் ஆகும். மேல் வலதுபுறத்தில் உள்ள “முடிந்தது” என்பதைத் தட்டி மீண்டும் முயற்சிக்கவும்.

    iPad திரையில் Mail செயலிக்கான சாளரங்கள் திறக்கப்பட்டு, அந்தச் சாளரங்களில் ஒன்றில் செயலிக்கான செயலி மெனு காட்டப்பட்டுள்ளது.

    உதவிக்குறிப்பு: ஒரு செயலியின் திறந்துள்ள சாளரங்களைப் பார்ப்பதற்கான மற்றொரு வழி: திரையின் கீழிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து, நடுவில் நிறுத்தி Exposéஐத் திறந்து, செயலி ஐகான்களில் ஒன்றைத் தட்டி அந்தச் செயலிக்கான Exposéஐத் திறக்கலாம்.

iPadஇல் செயலிகளுக்கு இடையே மாறுதல் என்பதைப் பார்க்கவும்.

செயலியின் மறைக்கப்பட்ட சாளரங்களைப் பார்த்தல்

சுருக்கப்பட்ட, முழுத் திரையில் இருக்கும் அல்லது மற்றொரு செயலிக்குப் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட சாளரங்களைக் கொண்ட செயலிக்கு மாறும்போது, அந்தச் செயலியில் திறந்திருக்கும் அனைத்துச் சாளரங்களையும் பார்க்க மாத்திரை வடிவ பட்டனைத் தட்டவும்.

இரண்டு செயலிகள் திறந்திருக்கும் iPad திரை காட்டப்பட்டுள்ளது. அதில் அனைத்துச் சாளரங்களையும் காட்டும் மாத்திரை வடிவ பட்டன் உள்ளது. அதைத் தட்டும்போது இலக்குச் செயலியில் திறந்திருக்கும் அனைத்துச் சாளரங்களும் காட்டப்படுகிறது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.