iPadஇல் சூழல்சார் வெப்பநிலை மற்றும் பசுமை ஆற்றல் தொடர்பான வழிகாட்டுதலைப் பயன்படுத்துதல்

ஹோம் செயலி மற்றும் இணக்கமான உங்கள் Matter தெர்மோஸ்டாட்டைப் பயன்படுத்தி, வசதி மற்றும் பசுமை ஆற்றல் தொடர்பான வழிகாட்டுதலுக்காகத் தானியங்குச் சரிசெய்தல்களை ஆன் செய்யலாம்.

சூழல்சார் வெப்பநிலை

  1. iPadஇல் ஹோம் செயலிக்கு செல்லவும்.

  2. “ஹோம்” தாவலைத் தட்டி, உங்கள் தெர்மோஸ்டாட்டைத் தட்டி, அமைப்புகள் பட்டன்-ஐத் தட்டி, “சூழல்சார் வெப்பநிலை” என்பதைத் தட்டவும்.

  3. “சூழல்சார் வெப்பநிலை” அம்சத்தை ஆன் செய்து, வீட்டில் இருக்கும்போது, இரவில், வெளியே இருக்கும்போது, நீண்ட நேரம் வெளியே இருக்கும்போது போன்ற சூழல்களின்போதான அமைப்புகள் மற்றும் வெப்பநிலை வரம்புகளைத் தேர்வுசெய்யலாம்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றை ஆன் செய்யவும்:

    • தெர்மோஸ்டாட் பயன்முறைகளை மாற்றுதல்: இதை இயக்கினால், உங்கள் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் ஹீட், கூல், தானியங்கு, ஆஃப் ஆகிய பயன்முறைகளுக்கு இடையே உங்கள் தெர்மோஸ்டாட் மாறும். இதை முடக்கினால், தற்போதைய பயன்முறையிலேயே உங்கள் தெர்மோஸ்டாட் தொடர்ந்து செயல்படும்.

    • ஆக்யுபன்சியைக் கண்டறிதல்: இணக்கமான ஆக்யுபன்சி சென்சார்களைப் பயன்படுத்தி அறையில் உள்ளவர்களைப் பொறுத்து “சூழல்சார் வெப்பநிலை” அம்சம் வெப்பநிலையை மாற்ற முடியும்.

    • வருகையைக் கணித்தல்: அன்றாட வழக்கங்கள், Apple மேப்ஸ், கேலண்டர் மேலும் பலவற்றைப் பயன்படுத்தி வருகையைக் கணித்து நீங்கள் முன்கூட்டியே தேர்வுசெய்துள்ள வீட்டின் வெப்பநிலை வரம்பிற்குத் தானாகவே மாறும்.

    • செயல்பாட்டு வரலாறு: சூழல்சார் வெப்பநிலை மாற்றங்கள் செயல்பாட்டு வரலாற்றில் பதிவுசெய்யப்படும்.

“சூழல்சார் வெப்பநிலை” அம்சத்தை ஆஃப் செய்தல்

  1. iPadஇல் ஹோம் செயலிக்கு செல்லவும்.

  2. “ஹோம்” தாவலைத் தட்டி, உங்கள் தெர்மோஸ்டாட்டைத் தட்டி, அமைப்புகள் பட்டன்-ஐத் தட்டி, “சூழல்சார் வெப்பநிலை” என்பதைத் தட்டவும்.

  3. “சூழல்சார் வெப்பநிலை” அம்சத்தை ஆஃப் செய்யவும்.

பசுமை ஆற்றல் தொடர்பான வழிகாட்டுதல்

பசுமையில்லா ஆற்றல் பயன்படுத்தப்படும்போது உங்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க உதவும் வகையில், தெர்மோஸ்டாட் வெப்பநிலையை ஹோம் சற்று சரிசெய்யும்.

  1. iPadஇல் ஹோம் செயலிக்கு செல்லவும்.

  2. முகப்பு தாவலைத் தட்டி, உங்கள் தெர்மோஸ்டாட்டைத் தட்டிய பிறகு அமைப்புகள் பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “பசுமை ஆற்றலுக்காக உகந்ததாக்கு” அம்சத்தை ஆன் செய்யவும்.

பசுமை ஆற்றல் தொடர்பான வழிகாட்டுதலை ஆஃப் செய்தல்

  1. iPadஇல் ஹோம் செயலிக்கு செல்லவும்.

  2. முகப்பு தாவலைத் தட்டி, உங்கள் தெர்மோஸ்டாட்டைத் தட்டிய பிறகு அமைப்புகள் பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “பசுமை ஆற்றலுக்காக உகந்ததாக்கு” அம்சத்தை ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.