இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலியில் வழிகளை அறிவிப்பதற்கான அமைப்புகளை மாற்றுதல்

“வழி அறிவிப்புகள்” அம்சத்தை நீங்கள் ஆஃப் செய்யலாம், அதன் ஒலியளவைச் சரிசெய்யலாம், அதன் குரல் அல்லது மொழியை மாற்றலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

குறிப்பு: குறிப்பிட்ட நாடுகள் அல்லது வட்டாரங்களில் மட்டுமே படிப்படியான வழி அறிவிப்புகள் அம்சம் கிடைக்கிறது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும். Wi-Fi + Cellular மாடல்களுக்கான அம்சங்களுக்கு மொபைல் டேட்டா திட்டம் தேவை, அமைப்புகள்  > செயலிகள் > மேப்ஸ் என்பதில் மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். உங்கள் மொபைல் டேட்டா கணக்கைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

“வழி அறிவிப்புகள்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

குறிப்பிட்ட சில வழிகளைப் பின்தொடரத் தொடங்கிய பிறகு “வழி அறிவிப்புகள்” அம்சத்தை நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. திசைகளைப் பெற்று, அவற்றைப் பின்தொடரத் தொடங்க “செல்” பட்டனைத் தட்டவும்.

  3. மேப்பில் உள்ள ஆடியோ கட்டுப்பாட்டு பட்டனைத் தட்டிய பிறகு (எடுத்துக்காட்டாக, “ஒலி இயக்கப்பட்டது” பட்டன்) ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

பட்டன்

விளக்கம்

“ஒலி இயக்கப்பட்டது” பட்டன்.

அனைத்து வழிகளும் அறிவிக்கப்படும்.

“ஆடியோ விழிப்பூட்டல்கள் மட்டும்” பட்டன்.

டிரைவிங் விழிப்பூட்டல்கள் மட்டும் அறிவிக்கப்படும்.

“ஒலிமுடக்கு” பட்டன்.

எந்த வழிகளும் அறிவிக்கப்படாது.

“அதிகம்” பட்டன்.

வழிகளைச் சொல்லும் குரலின் ஒலியளவு அதிகமாக உள்ளது.

“இயல்பு” பட்டன்.

வழிகளைச் சொல்லும் குரலின் ஒலியளவு இயல்பாக உள்ளது.

“குறைவு” பட்டன்.

வழிகளைச் சொல்லும் குரலின் ஒலியளவு குறைவாக உள்ளது.

குறிப்பு: “எனது இருப்பிடம்” என்பதைத் தவிர வேறு ஏதேனும் இடத்தில் இருந்து நீங்கள் தொடங்கினால் “செல்” என்பதற்குப் பதிலாக “வழிகள்” பட்டன் காட்டப்படும், வழிகள் எதுவும் அறிவிக்கப்படாது. அமைப்புகள்  > செயலிகள் > மேப்ஸ் என்பதிலும் இயல்புநிலை ஒலியளவை நீங்கள் மாற்றலாம். “வழி அறிவிப்புகள்” என்பதைத் தட்டிய பிறகு “குரல் ஒலியளவு” என்பதற்குக் கீழே ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

வழி அறிப்புகளை வேறொரு மொழி அல்லது குரலில் கேட்டல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. Apple Intelligence & Siri என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றவும்:

    • மொழி: “மொழி” என்பதைத் தட்டிய பிறகு, முதன்மை Siri மொழியாக அமைக்கப்பட வேண்டிய மொழியைத் தட்டவும்.

    • குரல்: “குரல்” என்பதைத் தட்டிய பிறகு, குரல் விருப்பங்களைக் கேட்டுப் பார்த்து அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

iPadஇல் Siriஐ ஆன் செய்தல் மற்றும் செயல்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

வழி அறிவிப்புகளுக்கான பிற அமைப்புகளை மாற்றுதல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “மேப்ஸ்” என்பதைத் தட்டவும்.

  3. “வழி அறிவிப்புகள்” என்பதைத் தட்டிய பிறகு, பின்வரும் விருப்பங்களை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்:

    • ஆடியோவை இடைநிறுத்தி அறிவிக்கப்படும் வழிகள்: வழி அறிவிப்புகள் சொல்லப்படும்போது பாட்காஸ்ட்டுகள், ஆடியோ புத்தகங்கள் போன்ற உள்ளடக்கங்களை இடைநிறுத்த இந்த அமைப்பை ஆன் செய்யவும்.

    • சாதனத் திரையில் காட்டப்படும் வழிகள்: டிரைவிங் அல்லது சைக்கிள் ஓட்டுவதற்கான வழிகளைப் பின்தொடரும்போது வழி அறிவிப்புகளைப் பெற்றால், iPad டிஸ்ப்ளேவைச் செயல்படுத்த இந்த அமைப்பை ஆன் செய்யவும்.

    • ரேடியோவில் வழி அறிவிப்புகள்: ஆதரிக்கப்படும் கார்களில், ரேடியோ பிளே செய்யப்படும்போது வழி அறிவிப்புகளைக் கேட்க இந்த அமைப்பை ஆன் செய்யவும்.

படிப்படியான வழி அறிவிப்புகளைப் பயன்படுத்த, உங்கள் iPad இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் இருப்பிடச் சேவைகள் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். மொபைல் டேட்டா விலைகள் பொருந்தக்கூடும். உங்கள் மொபைல் டேட்டா கணக்கைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.