இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

திரையில் உள்ள டிராக்பேடை (அளவை மாற்றக்கூடிய) iPadஇல் பயன்படுத்துதல்

iPadஇல் உள்ள விர்ச்சுவல் டிராக்பேடு மூலம், திரையின் ஒரு சிறு பகுதியை அளவை மாற்றக்கூடிய டிராக்பேடாக மாற்றி, அதைப் பயன்படுத்தி திரையில் உள்ள பாயின்டரை நகர்த்தலாம் கிளிக் செய்யலாம்.

திரையின் மூலையில் விர்ச்சுவல் டிராக்பேடு இருப்பதை iPad காட்டுகிறது. அத்துடன் AssistiveTouch மெனுவும் (டிராக்பேடைத் திறக்கப் பயன்படும் மெனு), பாயின்டரும் (டிராக்பேடால் கட்டுப்படுத்தப்படுவது) திரையில் உள்ளன.

விர்ச்சுவல் டிராக்பேடை அமைத்தல்

விர்ச்சுவல் டிராக்பேடைப் பயன்படுத்துவதற்கு முன், அதை AssistiveTouchஇல் சேர்க்க வேண்டும்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • AssistiveTouch மெனுவில் விர்ச்சுவல் டிராக்பேடைச் சேர்த்தல்: “மேல் நிலை மெனுவைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டி, “அதிகரி" பட்டன்-ஐத் தட்டிய பிறகு தோன்றும் “சேர்” பட்டனைத் தட்டி விர்ச்சுவல் டிராக்பேடைத் தேர்வுசெய்யவும்.

    • விர்ச்சுவல் டிராக்பேடைத் திறக்க பிரத்தியேகச் செயலை அமைத்தல்: “பிரத்தியேகச் செயல்கள்” என்பதற்குக் கீழ் உள்ள ஒரு செயலை (“இருமுறை தட்டுதல்”, “நீண்டநேரம் அழுத்துதல்” போன்றவை) தட்டி, விர்ச்சுவல் டிராக்பேடைத் தேர்வுசெய்யவும்.

விர்ச்சுவல் டிராக்பேடைப் பயன்படுத்துதல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch என்பதற்குச் செல்லவும்.

  2. AssistiveTouchஐ ஆன் செய்யவும்.

  3. விர்ச்சுவல் டிராக்பேடை அமைக்கும் விதத்தைப் பொறுத்து, அதைத் திறக்க பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • AssistiveTouch மெனுவைப் பயன்படுத்துதல்: AssistiveTouch மெனு பட்டனை தட்டி, “விர்ச்சுவல் டிராக்பேடு” என்பதைத் தட்டவும்.

    • நீங்கள் அமைத்த பிரத்தியேகச் செயலைப் பயன்படுத்துதல்: AssistiveTouch மெனு பட்டனை தட்டவும், இருமுறை தட்டவும் அல்லது நீண்டநேரம் அழுத்தவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • டிராக்பேடில் விரலால் இழுத்து பாயின்டரை நகர்த்தவும்.

    • டிராக்பேடைத் தட்டி பாயின்டர் இருக்குமிடத்தில் கிளிக் செய்தல்.

    • டிராக்பேடின் மேல் இடது மூலையில் உள்ள அம்புக்குறிகளை இழுத்து அதன் அளவை மாற்றுதல்.

    • டிராக்பேடின் பார்டரை இழுத்து அதை நகர்த்துதல்.

  5. விர்ச்சுவல் டிராக்பேடைத் திறக்க நீங்கள் பயன்படுத்தும் அதே செயலை மீண்டும் செய்து அதை மூடலாம்.

விர்ச்சுவல் டிராக்பேடு அமைப்புகளை மாற்றுதல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch என்பதற்குச் செல்லவும்.

  2. “விர்ச்சுவல் டிராக்பேடு” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றை மாற்றவும்:

    • நகர்வு: பாயின்டர் நகரும் வேகத்தை மாற்றவும்.

    • ஸ்க்ராலிங்: ஸ்க்ராலிங் ஆகும் வேகத்தை மாற்றவும். இல்லையெனில், “நேச்சுரல் ஸ்க்ராலிங்கை” ஆன் அல்லது ஆஃப் செய்யவும். இதை ஆன் செய்தால் உங்கள் விரல் நகரும் திசையிலேயே உள்ளடக்கம் நகரும்.

    • தோற்றம்: டிராக்பேடு தோற்றத்தை மாற்றலாம், முழுத் திரையில் காட்டப்படும் வகையில் அதை அமைக்கலாம் அல்லது டிராக்பேடைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு அது மங்கலாவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தை மாற்றலாம்.

நீங்கள் பாயின்டரின் தோற்றத்தையும் மாற்றலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.