இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் Image Playground மூலம் அசல் படங்களை உருவாக்குதல்

Image Playground செயலியில் Apple Intelligence* மூலம், யோசனைகள், விளக்கங்கள், உங்கள் புகைப்பட லைப்ரரியில் உள்ள நபர்களின் படங்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து சில விநாடிகளிலேயே படங்களை உருவாக்கலாம். மெசேஜஸ், Freeform மற்றும் பல செயலிகளில் படங்களை உருவாக்குவதற்கும் Image Playgroundஐப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

Image Playground செயலியின் சாளரத்தில் சூப்பர் ஹீரோ போல உடையணிந்த ஒருவரின் படம் உருவாக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

படத்தை உருவாக்குதல் அல்லது திருத்துதல்

  1. iPadஇல் உள்ள Image Playground செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • புதிய படத்தை உருவாக்குதல்: “புதிய படம்” என்பதைத் தட்டவும்.

    • ஏற்கெனவே உள்ள படத்தைத் திருத்துதல்: ஒரு படத்தைத் தட்டி, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. உங்கள் படத்தில் நீங்கள் விரும்புவதைச் சேர்க்கவும். ஏழு கூறுகள் வரை ஒன்றிணைத்து நீங்கள் அசல் படங்களை உருவாக்கலாம்.

    • கருத்தாக்கங்கள்: இடதுபுறம் ஸ்வைப் செய்து தீம்கள், உணர்வு வெளிப்பாடுகள், ஆடைகள், ஆக்சஸரிகள் அல்லது இடங்களைப் பார்த்து, அதில் ஒரு விருப்பத்தைத் தட்டவும்.

    • விளக்கம்: “படத்தை விவரி” என்பதைத் தட்டி, விவரிப்பை உள்ளிட்டு, “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • நபர்: “நபர்” என்பதைத் தட்டி, உங்கள் புகைப்பட லைப்ரரியிலிருந்து ஒரு நபரைத் தேர்வுசெய்து, தொடக்கப் புள்ளியைத் தேர்வுசெய்யவும்.

      ஃபோட்டோஸில் இருந்து ஒரு நபரைச் சேர்க்க வேண்டுமெனில், ஃபோட்டோஸ் செயலியில் நீங்கள் அவருக்குப் பெயரிட்டிருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு நபரைச் சேர்த்து, அவரின் தோற்றத்தை மாற்ற விரும்பினால், “நபரைத் தேர்வுசெய்” பட்டன்-ஐத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டி, புதிய தொடக்கப் புள்ளியைத் தேர்வுசெய்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும். ஒரு நபரின் தோற்றத்தைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

      நீங்கள் பயன்படுத்தும் படத்தில் இருந்து வேறுபட்ட விவரிப்பை நீங்கள் வழங்கினால் (எடுத்துக்காட்டாக, ஃபோட்டோஸ் செயலியில் உள்ள பெயருடன் உங்கள் விவரிப்பில் உள்ள பெயர் பொருந்தாமல் இருப்பது), உரை விவரிப்பிற்குப் பதிலாக நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படத்தின் அடிப்படையில் உங்கள் படம் தனிப்பயனாக்கப்படும்.

      உதவிக்குறிப்பு: உங்கள் லைப்ரரியில் இருந்து புகைப்படத்தைப் பயன்படுத்தாமலும் ஒரு நபரின் படத்தை உருவாக்கலாம். “நபர்” என்பதைத் தட்டி, “தோற்றம்” என்பதைத் தட்டி, ஸ்கின் டோன் மற்றும் தோற்றத்தைத் தேர்வுசெய்து “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • செல்லப்பிராணி, இயற்கை, உணவு போன்ற ஏதேனும் ஒன்றின் படம்: “புகைப்பட உலாவி” பட்டன்-ஐத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

  4. “ஸ்டைல்” என்பதைத் தட்டி, ஒரு ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கவும்.

    • Apple Intelligence ஸ்டைல்கள்: அனிமேஷன், விளக்கப்படம் அல்லது ஸ்கெட்ச் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Genmojiஐ உருவாக்கவும். நீங்கள் Genmojiஐ உருவாக்கும்போது, அவை உங்கள் ஸ்டிக்கர்களுடன் சேமிக்கப்படும்.

    • ChatGPT ஸ்டைல்கள்:*** ChatGPT என்பதைத் தட்டி, ஏதேனுமொரு ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்கள் விரும்பும் ஸ்டைலை விவரிக்க ஒரு ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணத்திற்கு, சீமந்த விழாவிற்கான அழைப்பிதழை உருவாக்க, “ஒரு கொக்கின் தத்ரூபமான படம்” என்று நீங்கள் உள்ளிடலாம்.

    குறிப்பு: படத்தின் ஸ்டைலை மாற்றுவது புதிய முன்னோட்டங்களின் தொகுப்பை உருவாக்கும்.

  5. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்து உங்கள் படத்தை மேம்படுத்தலாம்:

    • மாறுபாடுகளைப் பார்த்தல்: முன்னோட்டம் பபுளைத் தட்டி இடதுபுறமாகவோ வலதுபுறமாகவோ ஸ்வைப் செய்யவும்.

    • கருத்துருவை அகற்றுதல்: “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

  6. உருவாக்கிய படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதை உங்கள் கேலரியில் சேமிக்க மேல் வலது மூலையில் உள்ள “சேமி” என்பதைத் தட்டவும். நீங்கள் Genmojiஐ உருவாக்கினால், அதை உங்கள் ஸ்டிக்கர்களுடன் சேர்க்க “இமோஜியைச் சேர்” என்பதைத் தட்டவும்.

    ஏற்கெனவே சேமித்த படத்தைத் திருத்த, “முடிந்தது” என்பதைத் தட்டவும். படத்தைப் புதுப்பிக்க வேண்டுமா அல்லது புதிய படமாகச் சேமிக்க வேண்டுமா என்று உங்களிடம் கேட்கப்படும்.

படத்தை உங்கள் கேலரியில் பார்க்க, “வெளியேறு” பட்டன்-ஐத் தட்டவும்.

Image Playground செயலி மட்டுமல்லாமல், Freeform, மெசேஜஸ் போன்ற செயலிகளில் அசல் படங்களை உருவாக்க Image Playground அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். மெசேஜஸில் அசல் படங்களை உருவாக்கி அனுப்புதல் மற்றும் Freeformஇல் அசல் படங்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

ஒரு நபரின் தோற்றத்தைப் பிரத்தியேகமாக்குதல்

உங்கள் புகைப்பட லைப்ரரியில் உள்ள ஒரு நபரைக் கொண்டு படத்தை உருவாக்கும்போது, தொடக்கப் புள்ளியாகப் புதிய புகைப்படத்தைத் தேர்வுசெய்தோ ஹேர்ஸ்டைல், முகத்தில் உள்ள முடி, மூக்குக்கண்ணாடி போன்ற தனிப்பட்ட பண்புகளை மாற்றியோ அவரின் தோற்றத்தை மாற்றலாம்.

  1. iPadஇல் உள்ள Image Playground செயலிக்குச் செல்லவும்.

  2. “புதிய படம்” என்பதைத் தட்டவும் அல்லது ஒரு படத்தைத் தட்டி, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • வேறொரு புகைப்படத்தைத் தேர்வுசெய்ய: “வேறு புகைப்படத்தைத் தேர்வுசெய்” என்பதைத் தட்டி, ஒரு புகைப்படத்தைத் தட்டித் தேர்வுசெய்யவும்.

    • ஹேர்ஸ்டைல், முகத்தில் உள்ள முடி அல்லது மூக்குக்கண்ணாடியைத் தேர்வுசெய்தல்: “தோற்றத்தைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டி, பாப்-அப் மெனுக்களில் இருந்து விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

      உதவிக்குறிப்பு: தொடக்கப் புள்ளி இன்னும் சரியாக இல்லையென்றால், “கூடுதல் விவரங்கள்” புலத்தில் ஒரு விளக்கத்தை உள்ளிட்டு முயலவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் பரிந்துரைச் சீட்டு மூக்குக்கண்ணாடியைச் சேர்த்திருந்து, அவை தவறான நிறத்தில் இருந்தால், “நீல நிற மூக்குக்கண்ணாடி” அல்லது “மஞ்சள் நிற மூக்குக்கண்ணாடியாக மாற்று” என நீங்கள் உள்ளிடலாம்.

    • அசல் தொடக்கப் புள்ளிக்குச் செல்லுதல்: “தோற்றத்தை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

  4. தொடக்கப் புள்ளி உங்களுக்குப் பிடித்திருந்தால், “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

படத்தை நகலெடுத்தல், பகிர்தல் அல்லது சேமித்தல்

  1. iPadஇல் உள்ள Image Playground செயலிக்குச் செல்லவும்.

  2. படத்தைத் தொட்டுப் பிடித்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • படத்தை நகலெடுத்தல் அல்லது பிரதியெடுத்தல்: “நகலெடு” அல்லது “பிரதியெடு” என்பதைத் தட்டவும்.

    • படத்தில் கேப்ஷனைச் சேர்த்தல்: “கேப்ஷனைச் சேர்” என்பதைத் தட்டி, படத்தின் விவரிப்பை உள்ளிட்டு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    • படத்தைப் பகிர்தல்: “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு பகிர்வு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • புகைப்பட லைப்ரரியில் உங்கள் படத்தைச் சேமித்தல்: “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, “படத்தைச் சேமி” என்பதைத் தட்டவும்.

படத்தை நீக்குதல்

குறிப்பு: Image Playgroundஇல் இருந்து ஒரு படத்தை நீக்கினால், அதே Apple கணக்கில் உள்நுழைந்திருக்கும் உங்கள் அனைத்துச் சாதனங்களில் இருந்தும் அந்தப் படம் நீக்கப்படும்.

  1. iPadஇல் உள்ள Image Playground செயலிக்குச் செல்லவும்.

  2. கேலரியில் படத்தைத் தட்டி, “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

மெசேஜஸில் அசல் படங்களை உருவாக்கி அனுப்புதல்

Image Playground மூலம் நேரடியாக மெசேஜஸ் செயலியில் படங்களை உருவாக்கி அனுப்பலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புதிய மெசேஜைத் தொடங்கவும் அல்லது உரையாடலைத் திறக்கவும்.

  3. “செயலிகள்” பட்டன்-ஐத் தட்டி, Image Playgroundஐத் தட்டவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • ஏற்கெனவே உருவாக்கிய படத்தைத் தேர்ந்தெடுத்தல்: மேல்பகுதியில் உள்ள “கேலரி” என்பதைத் தட்டி, உங்கள் படத்தைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • புதிய படத்தை உருவாக்குதல்: மேலே உள்ள “உருவாக்கு” என்பதைத் தட்டி, ஒரு படத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. உங்கள் படம் அனுப்பத் தயாரானதும், “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

Freeformஇல் அசல் படங்களை உருவாக்குதல்

Image Playground மூலம் நேரடியாக Freeform செயலியில் படங்களை உருவாக்கலாம்.

  1. iPadஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு போர்டைத் திறக்கவும் அல்லது புதிதாகத் தொடங்க, “புதிய போர்டு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • புதிய படத்தை உருவாக்குதல்: டூல்பாரில் “மீடியாவைச் சேர்” பட்டன்-ஐத் தட்டி, Image Playgroundஐத் தட்டி, படத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    • உங்கள் போர்டில் உள்ளவற்றைப் பயன்படுத்துதல்: நீங்கள் பயன்படுத்த விரும்பும் படங்கள், வரைபடங்கள், உரைப் பெட்டிகள், ஸ்டிக்கிகள் அல்லது வடிவங்களைத் தட்டித் தேர்ந்தெடுத்து (அதிகபட்சம் ஆறு எண்ணிக்கை வரை), “Playgroundஇல் சேர்” என்பதைத் தட்டவும்.

    • Image Playgroundஇல் உருவாக்கப்பட்ட படத்தின் மூலம் ஏற்கனவே உள்ள படத்தை மாற்றுதல்: படத்தைச் சேர்த்து, படத்தைத் தேர்ந்தெடுத்து, “படத்தைத் திருத்து” பட்டன்-ஐத் தட்டி, “மாற்று” என்பதைத் தட்டி, Image Playground என்பதைத் தட்டவும். பிறகு படத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  4. படத்தை உங்கள் போர்டில் சேர்க்க “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

Keynote, Pages, Apple Invites போன்ற பிற செயலிகளிலும் ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்புச் செயலிகளிலும்கூட நீங்கள் Image Playground அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

“ஸ்கிரீன் டைம்” அமைப்புகளில் Image Playground போன்ற பட உருவாக்க அம்சங்களுக்கான அணுகலைத் தடுக்கலாம். பட உருவாக்க அம்சங்களுக்கான அணுகலைத் தடுத்தல் என்பதைப் பார்க்கவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கவும்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
***ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்தும்போது, ChatGPTக்கு என்ன உள்ளடக்கத்தை அனுப்புவது என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் கோரிக்கை மற்றும் இணைப்புகள், கோரிக்கையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில தரவுகள் (உதாரணமாக, தற்போதைய நேர மண்டலம், நாடு, சாதன வகை, மொழி, கோரிக்கை அனுப்பும்போது பயன்படுத்தப்பட்ட அம்சம்) போன்றவை உங்கள் கோரிக்கைக்குப் பதிலளிக்கவும், துல்லியமான மற்றும் பொருத்தமான முடிவுகளை வழங்க ChatGPTஐச் செயல்படுத்தவும் ChatGPTக்கு அனுப்பப்படும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.