இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள நினைவூட்டல்களில் டெம்ப்ளேட்களைக் கொண்டு வேலை செய்தல்

“நினைவூட்டல்கள்” செயலியில், வழக்கங்கள், பேக்கிங் பட்டியல்கள் மற்றும் பலவற்றுக்குப் பட்டியலை மீண்டும் பயன்படுத்த டெம்ப்ளேட்டாகச் சேமிக்கலாம். மற்றவர்களுடன் டெம்ப்ளேட்டைப் பகிரவும் வெளியிடவும் இணைப்பை உருவாக்கவும் அல்லது மற்றவர்கள் பகிர்ந்த டெம்ப்ளேட்டுகளைப் பதிவிறக்கவும்.

பட்டியலை டெம்ப்ளேட்டாகச் சேமித்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. பட்டியலுக்கு மேலே, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “டெம்ப்ளேட்டாகச் சேமி” என்பதைத் தட்டவும்.

  3. டெம்ப்ளேட்டுக்கான பெயரை உள்ளிடவும்.

  4. “முடிந்த நினைவூட்டல்களைச் சேர்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

நீங்கள் ஒரு பட்டியலிலிருந்து டெம்ப்ளேட்டை உருவாக்கிய பிறகு, அந்தப் பட்டியலில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் டெம்ப்ளேட்டைப் எந்த விதத்திலும் பாதிக்காது.

டெம்ப்ளேட்டிலிருந்து புதிய பட்டியலை உருவாக்குதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் பட்டியல்களுக்கு மேலே, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “டெம்ப்ளேட்கள்” என்பதைத் தட்டி, பிறகு டெம்ப்ளேட்டின் பெயரைத் தட்டவும்.

  3. பட்டியலுக்கான பெயரை உள்ளிட்டு, பிறகு “உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

டெம்ப்ளேட்டைத் திருத்துதல் அல்லது நீக்குதல்

டெம்ப்ளேட்டில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் டெம்ப்ளேட்டிலிருந்து ஏற்கெனவே உருவாக்கப்பட்ட பட்டியல்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

  1. உங்கள் iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் பட்டியல்களுக்கு மேலே, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “டெம்ப்ளேட்கள்” என்பதைத் தட்டி, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்ய:

    • டெம்ப்ளேட்டைத் திருத்த: டெம்ப்ளேட்டில் உள்ள எந்தவொரு ஐட்டத்தையும் சேர்க்கலாம், திருத்தலாம் அல்லது நீக்கலாம். டெம்ப்ளேட்டுக்கான பெயர், வண்ணம் மற்றும் ஐகானையும் நீங்கள் மாற்றலாம்.

    • டெம்ப்ளேட்டை நீக்க: டெம்ப்ளேட்டை அகற்றவும்.

டெம்ப்ளேட்டைப் பகிர்தல்

நீங்கள் ஒரு டெம்ப்ளேட்டைப் பகிரும்போது, Apple சேவையகங்களுக்கு அணுகல் உள்ளது, இதன்மூலம் இணைப்பு உள்ள எவரும் iOS 16, iPadOS 16, macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்தி டெம்ப்ளேட்டின் நகலை சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் பகிரப்பட்ட டெம்ப்ளேட்டில் ஏதேனும் தேதிகள், குறிச்சொற்கள் அல்லது இருப்பிடங்களை வைத்திருக்க வேண்டுமா என்பதை தேர்வுசெய்யலாம்; படங்கள் அகற்றப்பட்டன.

  1. உங்கள் iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் பட்டியல்களுக்கு மேலே, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “டெம்ப்ளேட்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் பகிர விரும்பும் டெம்ப்ளேட்டிற்கு அடுத்துள்ள “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “டெம்ப்ளேட்டைப ப்கிர்” என்பதைத் தட்டி, பிறகு பகிர்வுக்கான முறையைத் தேர்வுசெய்யவும்.

பகிர்ந்த டெம்ப்ளேட்டை நிர்வகிக்க, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “டெம்ப்ளேட்டுகள்” என்பதைத் தட்டவும், “திருத்து” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “இணைப்பை நிர்வகி” என்பதைத் தட்டவும்.

பகிர்வுக்குப் பிறகு டெம்ப்ளேட்டில் நீங்கள் மாற்றங்களைச் செய்தால், பகிரப்பட்ட பதிப்பைப் புதுப்பிக்கலாம். முந்தைய பதிப்பைப் பதிவிறக்கிய எந்த நபரும் புதுப்பிப்புகளைப் பெற, டெம்ப்ளேட்டை மீண்டும் பதிவிறக்க வேண்டும்.

நீங்கள் டெம்ப்ளேட் பகிர்வை நிறுத்தினால், ஏற்கனவே டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கிய எவரையும் இது எந்த விதத்திலும் பாதிக்காது.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.