இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் VoiceOverஇல் உங்கள் விரலால் எழுதுதல்

VoiceOverஇல் உள்ள கையெழுத்துப் பயன்முறை மூலம் உங்கள் விரலால் திரையில் எழுத்துகளை எழுதி வார்த்தையை நீங்கள் உள்ளிடலாம். டைப்பிங் அல்லது டிக்டேஷனைத் தவிர, கையெழுத்துப் பயன்முறையைப் பயன்படுத்தியும் உங்கள் iPad பாஸ்கோடை அமைதியாக உள்ளிடலாம் அல்லது முகப்புத் திரையில் செயலிகளைத் திறக்கலாம்.

கையெழுத்துப் பயன்முறையைப் பயன்படுத்துதல்

  1. ரோட்டரை கையெழுத்துப் பயன்முறையில் அமைக்கவும்.

    ரோட்டரில் “கையெழுத்து” இல்லையெனில், அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > ரோட்டார் என்பதற்குச் சென்று அதைச் சேர்க்கவும்.

  2. எழுத்து வகையை (சிற்றெழுத்து, எண்கள், பேரெழுத்து அல்லது நிறுத்தற்குறி) தேர்வுசெய்ய, மூன்று விரல்களால் மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    தேர்ந்தெடுக்கப்படும் எழுத்து வகையைக் கேட்க, மூன்று விரல்களால் தட்டவும்.

  3. உங்கள் விரலால் திரையில் ஒரு எழுத்தை வரையவும்.

    பின்வருவனவற்றில் ஏதேனுமொன்றை நீங்கள் செய்யலாம்:

    • மாற்று எழுத்தை உள்ளிடவும் (உதாரணத்திற்கு, மேற்குறியிடப்பட்ட எழுத்து): எழுத்தை எழுதிய பிறகு, நீங்கள் விரும்பும் எழுத்து வாசிக்கப்படும் வரை இரண்டு விரல்களால் மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    • இடைவெளியை உள்ளிட: இரண்டு விரல்களால் வலதுபுறம் ஸ்வைப் செய்யவும்.

    • புதிய வரிக்குச் செல்ல: மூன்று விரல்களால் வலதுபுறம் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    • முந்தைய எழுத்தை நீக்க: இரண்டு விரல்களால் இடதுபுறம் ஸ்வைப் செய்யவும்.

  4. கையெழுத்துப் பயன்முறையிலிருந்து வெளியேற, இரண்டு விரல்களால் ஸ்க்ரப் செய்யவும், அதாவது இரண்டு விரல்களை முன்னும் பின்னுமாக மூன்று முறை நகர்த்தி “z” வடிவத்தை உருவாக்குங்கள் அல்லது ரோட்டரை வேறு அமைப்புக்கு மாற்றவும்.

கையெழுத்துப் பயன்முறை மூலம் உங்கள் பாஸ்கோடை அமைதியாக உள்ளிடுதல்

  1. பாஸ்கோடு திரையில், ரோட்டரைக் கையெழுத்துப் பயன்முறையில் அமைக்கவும்.

  2. உங்கள் பாஸ்கோடில் உள்ள எழுத்துகளை உங்கள் விரலால் எழுதவும்.

முகப்புத் திரையில் உள்ளதைத் தேர்ந்தெடுத்தல்

  1. முகப்புத் திரையில், ரோட்டரைக் கையெழுத்துப் பயன்முறையில் அமைக்கவும்.

  2. ஐட்டத்தின் பெயரை உங்கள் விரலால் எழுதத் தொடங்கவும்.

    பல பொருத்தங்கள் காட்டப்பட்டால், பெயர் தனித்துவமாக மாறும் வரை தொடர்ந்து ஒவ்வொரு எழுத்தாக எழுதவும் அல்லது தற்போது பொருந்தக்கூடியவற்றில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்ய இரண்டு விரல்களால் மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

நீளமான பட்டியலில் விரைவாக நகர்தல்

  1. பட்டியலின் வலதுபுறம் உள்ள அட்டவணையைத் தேர்ந்தெடுக்கவும் (உதாரணத்திற்கு, உங்கள் தொடர்புப் பட்டியல் அல்லது VoiceOver ஐட்டங்களுக்கான தேர்விக்கு அடுத்து உள்ளது).

  2. ரோட்டரைக் கையெழுத்துப் பயன்முறையில் அமைத்து, உங்கள் விரலைப் பயன்படுத்தி, நீங்கள் பார்க்க விரும்பும் எழுத்தை எழுதவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.