இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் Spotlightஐப் பயன்படுத்தித் தேடுதல்

iPadஇல் உள்ள “நேரலை உரை” அம்சத்தைப் பயன்படுத்தி செயலிகள், தொடர்புகள், Mail, மெசேஜஸ் போன்ற செயலிகளில் உள்ள உள்ளடக்கம், புகைப்படங்களில் உள்ள உரை ஆகியவற்றை நீங்கள் தேடலாம். பங்கு மற்றும் நாணயத் தகவல்களைச் சரிபார்க்கலாம், உங்கள் புகைப்பட லைப்ரரியிலும், சிஸ்டத்திலும், இணையத்திலும் இணையப் பக்கங்கள், செயலிகள் மற்றும் படங்களைக் கண்டறிந்து திறக்கலாம்.

நீங்கள் ஒரு செயலியைத் தேடும்போது, நீங்கள் அதற்கு அடுத்து செய்ய அதிகம் வாய்ப்புள்ள செயலுக்கான செயலிச் சுருக்கவழிகள் முதன்மை முடிவுகளில் காட்டப்படும். (எடுத்துக்காட்டாக, நீங்கள் ஃபோட்டோஸ் செயலியைத் தேடும்போது “பிடித்தவை” ஆல்பத்திற்கான சுருக்கவழி காட்டப்படும்.)

iPadஇல் பூட்டுத் திரை உட்பட எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் தேடலாம், தேடல் முடிவுகளில் எந்தச் செயலிகளைச் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் செயலியைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் “தேடல்” செயலி பரிந்துரைகளை வழங்கும், அத்துடன் நீங்கள் டைப் செய்வதற்கு ஏற்றபடி முடிவுகளைப் புதுப்பிக்கும்.

தேடலில் சேர்க்க வேண்டிய செயலிகள் மற்றும் உள்ளடக்கத்தைத் தேர்வுசெய்தல்

  1. அமைப்புகள்  > தேடல் என்பதற்குச் செல்லவும்.

  2. கீழே ஸ்க்ரால் செய்து, ஒரு செயலியைத் தட்டி, “தேடல் அம்சத்தில் செயலியைக் காட்டு” அல்லது “தேடல் அம்சத்தில் உள்ளடக்கத்தைக் காட்டு” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

iPad மூலம் தேடுதல்

  1. முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரைக்குச் செல்லவும்.

  2. திரையின் மையத்தில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  3. தேடல் புலத்தில் நீங்கள் தேடுவதை உள்ளிடவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தேடலைத் தொடங்குதல்: “செல்” அல்லது “தேடு” என்பதைத் தட்டவும்.

    • பரிந்துரைக்கப்படும் செயலியைத் திறத்தல்: செயலியைத் தட்டவும்.

    • விரைவுச் செயலைச் செய்தல்: டைமரைத் தொடங்கலாம், ஃபோகஸை ஆன் செய்யலாம், Shazam மூலம் ஒரு பாடலின் பெயரைக் கண்டறியலாம், ஏதேனும் சுருக்கவழியை இயக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். ஒரு செயலிக்கு சுருக்கவழி உள்ளதா என்று பார்க்க அந்தச் செயலியின் பெயரைத் தேடலாம் அல்லது “சுருக்கவழிகள்” செயலியைப் பயன்படுத்தி நீங்களே ஒரு சுருக்கவழியை உருவாக்கலாம்.

    • பரிந்துரைக்கப்படும் இணையதளத்தைச் சரிபார்த்தல்: அதைத் தட்டவும்.

    • தேடல் பரிந்துரை பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுதல்: அதைத் தட்டி முடிவுகளில் ஒன்றைத் திறக்க அதைத் தட்டவும்.

    • புதிய தேடலைத் தொடங்குதல்: தேடல் புலத்தில் உள்ள “வார்த்தையை அழி” பட்டன்-ஐத் தட்டவும்.

இருப்பிடம் சார்ந்த பரிந்துரைகளை ஆஃப் செய்தல்

  1. அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. “சிஸ்டம் சேவைகள்” என்பதைத் தட்டி “பரிந்துரைகள் & தேடல்” என்பதை ஆஃப் செய்யவும்.

செயலிகளில் தேடுதல்

பல செயலிகளில் தேடல் புலம் அல்லது தேடல் பட்டன் இருக்கும் என்பதால் செயலிக்குள் நீங்கள் எதையேனும் தேடிக் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, மேப்ஸ் செயலியில் குறிப்பிட்ட இருப்பிடத்தைத் தேடலாம்.

  1. ஒரு செயலியில், தேடல் புலம் அல்லது “தேடல்” பட்டன்-ஐத் தட்டவும் (இருந்தால்).

    தேடல் புலம் அல்லது பட்டன் காட்டப்படவில்லை எனில், மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  2. உங்கள் தேடல் வார்த்தையை டைப் செய்தபிறகு “தேடு” என்பதைத் தட்டவும்.

அகராதியைச் சேர்த்தல்

iPadஇல் அகராதிகளைச் சேர்த்து தேடலின்போது அவற்றைப் பயன்படுத்தலாம்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > அகராதி என்பதற்குச் செல்லவும்.

  2. அகராதியைத் தேர்ந்தெடுக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.