இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மெசேஜ்களை வடிவமைத்தல் மற்றும் அனிமேட் செய்தல்

நீங்கள் அனுப்பும் மெசேஜ், மெசேஜ் பபுள் அல்லது முழுத் திரையிலும் உள்ள உரையை வடிவமைப்பது அல்லது அனிமேட் செய்வதன் மூலம் உங்களை வெளிப்படுத்தலாம்.

குறிப்பு: உரை வடிவமைப்பு அல்லது உரை எஃபெக்ட்களுடன் மெசேஜ்களை அனுப்பவும் பெறவும், நீங்களும் உங்கள் மெசேஜ் பெறுநர்களும் iMessageஐப் பயன்படுத்த வேண்டும். பழைய அல்லது பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் சாதனங்களுக்கு மெசேஜ்களை அனுப்பும்போது அவை எளிய உரையாகக் காட்டப்படும்.

மெசேஜ்களுக்குள் உள்ள உரையை வடிவமைத்தல் அல்லது அனிமேட் செய்தல்

iMessage மூலம் அனுப்பப்படும் உங்கள் மெசேஜ்களில் உள்ள எழுத்துகளைத் தடிமனாக, சாய்வெழுத்துகளாக, அடிக்கோடிட்டு வடிவமைக்கலாம், எந்தவொரு எழுத்து, சொல் அல்லது வாக்கியத்திலும் வெடித்தல், குலுங்குதல் போன்ற விளையாட்டுத்தனமான, அனிமேஷன் எஃபெக்ட்களைச் சேர்க்கலாம் (இமோஜியிலும் இப்படிச் செய்யமுடியும்).

உரைப் புலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தையுடன் கூடிய மெசேஜஸ் உரையாடல் மற்றும் அதற்குக் மேலே காட்டப்பட்டுள்ள வடிவமைத்தல் மற்றும் எஃபெக்ட்கள் விருப்பங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உரை எஃபெக்ட்டின் முன்னோட்டத்துடன் தோன்றும்.
  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலில் மெசேஜை உள்ளிட்டு, நீங்கள் வடிவமைக்க அல்லது அனிமேட் செய்ய விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும்.

    உங்கள் மெசேஜை உள்ளிடும்போதே பொருத்தமான எஃபெக்ட்களை மெசேஜஸ் செயலி பரிந்துரைக்கலாம்.

  3. கீபோர்டுக்கு மேலே உள்ள “உரை வடிவமைப்பு” பட்டன்-ஐத் தட்டி, உங்களுக்கு விருப்பமான வடிவமைப்பையோ (தடிமன், சாய்வெழுத்து, அடிக்கோடு அல்லது குறுக்குக்கோடு) அனிமேஷன் எஃபெக்ட்டையோ (பெரியது, சிறியது, குலுங்குதல், அசைவு, வெடிப்பு, ரிப்பிள், ப்ளூம் அல்லது ஜிட்டர்) தேர்ந்தெடுக்கவும்.

    உங்கள் மெசேஜை உள்ளிடும்போதே பொருத்தமான எஃபெக்ட்களை மெசேஜஸ் செயலி பரிந்துரைக்கலாம்.

  4. “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

ஒரு சொல், இமோஜி, ஒரு சொல், இமோஜி, வாக்கியம் அல்லது முழு மெசேஜை நீங்கள் வடிவமைக்கலாம் அல்லது எஃபெக்ட்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் வடிவமைக்கவோ எஃபெக்ட்களைப் பயன்படுத்தவோ விரும்பும் உரையை உள்ளிடுவதற்கு முன்பு, “உரை வடிவமைப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

மெசேஜ் பபுளை அனிமேட் செய்தல்

மெசேஜ் பபுளை அனிமேட் செய்ய எஃபெக்ட்களைப் பயன்படுத்துதல்: நீங்கள் ஸ்லாம் அல்லது லவுட் எஃபெக்ட் உடன் மெசேஜை அனுப்பலாம், இதனால் அது அவர்களுக்கு பாப்-அவுட் ஆகும் அல்லது ஜென்டில் எஃபெக்ட்டைப் பயன்படுத்தினால் அது அமைதியாக அறிவிக்கப்படும். நீங்கள் இன்விசிபில் இங்க் எஃபெக்ட்டை கொண்ட தனிப்பட்ட மெசேஜையும் அனுப்பலாம், பெறுநர் அதை வெளிப்படுத்த ஸ்வைப் செய்யும் வரை அது மங்கலாக இருக்கும்.

“மெசேஜஸ்” செயலியில் உள்ள உரையாடலில், ஒரு மெசேஜும், “இன்விசிபிள் இங்க்” எஃபெக்ட்டுடன் அனுப்பப்பட்ட ஒரு புகைப்படமும் காட்டப்பட்டுள்ளன.
  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலில், மெசேஜை உள்ளிடவும் அல்லது படம் அல்லது இணைப்பைச் செருகவும்.

  3. “அனுப்பு” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, பபுள் எஃபெக்ட்டை முன்னோட்டமிட பழுப்பு நிறப் புள்ளியைத் தட்டவும்.

  4. எஃபெக்ட் உடன் மெசேஜை அனுப்ப “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும் அல்லது எஃபெக்ட்டை ரத்துசெய்துவிட்டு உங்கள் மெசேஜுக்குச் செல்ல “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

முழு திரையில் எஃபெக்ட்களை அனிமேட் செய்தல்

உங்கள் பெறுநருக்கு உங்கள் மெசேஜ் கிடைக்கும்போது லைவ் லேசர்கள், நகரும் ஸ்பாட்லைட் அல்லது எக்கோயிங் பபுள்கள் போன்ற முழு திரை எஃபெக்ட்களைக் கொண்ட மெசேஜ்களை நீங்கள் அனுப்பலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலில், மெசேஜை உள்ளிடவும் அல்லது புகைப்படம் அல்லது Memojiஐச் செருகவும்.

  3. “அனுப்பு” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, திரை மீது தட்டவும்.

  4. வெவ்வேறு ஸ்கிரீன் எஃபெக்ட்களை முன்னோட்டமிட இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  5. மெசேஜை அனுப்ப “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும் அல்லது எஃபெக்ட்டை ரத்துசெய்துவிட்டு மெசேஜுக்குச் செல்ல “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

குறிப்பிட்ட உரை ஸ்ட்ரிங்குகளுக்கு மெசேஜஸ் தானாக பின்வரும் திரை எஃபெக்ட்களைப் பயன்படுத்தும்:

  • “பிறந்தநாள் வாழ்த்து” என்ற வார்த்தைகளுக்கு பலூன்கள்

  • “பாராட்டுக்கள்” என்ற வார்த்தைகளுக்கு கான்ஃபெட்டி

  • “புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்ற வார்த்தைகளுக்குப் பட்டாசு

முழுத்திரை எஃபெக்ட் உங்களுக்குக் காட்டப்படவில்லை என்றால் அல்லது நீங்கள் பெறும் மெசேஜ்களில் உள்ள எஃபெக்ட்களை ஆஃப் செய்ய விரும்பினால், திரையில் உள்ள நகர்வை நிறுத்துதல் அல்லது குறைத்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.