iPadஇல் உள்ள Apple Games செயலியில் உங்கள் கேம் லைப்ரரியைப் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்

Apple Games செயலியில், Apple Arcadeஇல் உள்ள கேம் தலைப்புகளைப் பார்க்கலாம், நீங்கள் பதிவிறக்கிய கேம்களைப் பார்க்கலாம், கேம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்க்கலாம், சாதனைகளை உங்கள் லைப்ரரியில் கண்காணிக்கலாம். நீங்கள் தேடுவதை விரைவாகக் கண்டறிய உங்கள் கேம்களை வகைப்படுத்தலாம் மற்றும் ஃபில்டர் செய்யலாம்.

குறிப்பு: Apple Arcade மற்றும் Apple One குறிப்பிட்ட சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைக்காது.

உங்கள் கேம்களைப் பார்த்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்

  1. iPadஇல் Apple Games செயலிக்குச் செல்லவும்.

  2. “லைப்ரரி” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் கேம்களைப் பார்த்தல்: “உங்கள் கேம்கள்” என்பதற்குக் கீழ், கேம்களின் பட்டியலை ஸ்க்ரால் செய்து பார்க்கவும்.

    • உங்கள் கேம்களை வரிசைப்படுத்துதல்: “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, வகைப்படுத்துவதற்கான ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும் (சமீபத்திய கேம்கள், பெயர் அல்லது அளவு).

    • கேம்களை ஃபில்டர் செய்தல்: குறிப்பிட்ட கேம்களைப் பார்க்க (இந்த iPadஇல், Apple Arcade, நண்பர்கள் விளையாடுவது, கன்ட்ரோலர் உதவி, சவால் உதவி அல்லது வகைகள்) “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு ஃபில்டரைத் தேர்வுசெய்யவும். ஃபில்டரை அழிக்க, “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, “ஃபில்டரை அழி” என்பதைத் தட்டவும்.

      உதவிக்குறிப்பு: உங்கள் iPadஇல் தற்போது நிறுவப்பட்டுள்ள கேம்களை மட்டும் பார்க்க, “இந்த iPadஇல்” ஃபில்டரைத் தேர்ந்தெடுக்கவும்.

கேமிற்குள் உள்ள நிகழ்வுகள் அல்லது சமீபத்திய அறிவிப்புகளைப் பார்த்தல்

  1. iPadஇல் Apple Games செயலிக்குச் செல்லவும்.

  2. லைப்ரரியைத் தட்டி “நிகழ்வுகள்” என்பதைத் தட்டவும்.

  3. கேமிற்குள் உள்ள நிகழ்வுகள் அல்லது சமீபத்திய அறிவிப்புகளைப் பார்க்க விரும்பும் கேமைத் தேர்ந்தெடுக்கவும்.

முகப்பு அல்லது தேடல் தாவலில் கேமைத் தேடும்போது அல்லது அதன் கேம் பக்கத்தைத் திறக்கும்போதும்கூட நிகழ்வுகளையும் அறிவிப்புகளையும் நீங்கள் பார்க்கலாம்.

கேமில் உங்கள் சாதனைகளைப் பார்த்தல்

ஆதரிக்கப்படும் கேம்களுக்கு உங்கள் Game Center சாதனைகளைக் கண்காணிக்கலாம். உங்கள் செயல்நிலையையும், நீங்கள் நிறைவுசெய்த இலக்குகளையும் பார்க்கலாம்.

  1. iPadஇல் Apple Games செயலிக்குச் செல்லவும்.

  2. லைப்ரரியைத் தட்டி “சாதனைகள்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் சாதனைகளை ஒழுங்கமைக்க, “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

  4. எந்த கேமிற்கான சாதனைகளைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.

Apple Arcade கேம்களைத் தேடிக் கண்டறிதல்

நீங்கள் Apple Arcade அல்லது Apple Oneக்குச் சந்தா சேர்ந்தால், Apple Arcade கேம்களை உங்கள் லைப்ரரியிலும் பார்க்கலாம்.

  1. iPadஇல் Apple Games செயலிக்குச் செல்லவும்.

  2. லைப்ரரியைத் தட்டி Apple Arcade என்பதைத் தட்டவும்.

  3. “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “முன்னோட்டங்களைக் காட்டு” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

    • வெளியீட்டுத் தேதி, கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது, பெயர் அல்லது வகை வாரியாக கேம்களை வகைப்படுத்தலாம்.

    • கன்ட்ரோலர் உதவி, மல்டிபிளேயர், வயது மதிப்பீடுகள் போன்றவற்றின் அடிப்படையில் கேம்களை ஃபில்டர் செய்யலாம்.

கேமை நீக்குதல்

Apple Games செயலியிலேயே நேரடியாக கேம்களை நீக்குவதன் மூலம் உங்கள் iPadஇல் இடத்தைச் சேமிக்கலாம்.

  1. iPadஇல் Apple Games செயலிக்குச் செல்லவும்.

  2. “லைப்ரரி” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் நீக்க விரும்பும் கேமைத் தொட்டுப் பிடித்து, “கேமை நீக்கு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.