இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் பிறர் பகிர்ந்துள்ள தரவைப் பார்வையிடுதல்

உடல்நலம் செயலியில் உங்கள் அன்புக்குரியவரின் உடல்நலம் குறித்த அறிவிப்புகளைப் பெறலாம், மேலும் அவர்களின் செயல்பாடு, நகர்வுநிலை, இதயத்துடிப்பு, உடல்நல நிலவரம் குறித்த தரவுகளைப் பார்க்கலாம்.

உடல்நலத் தரவைப் பகிர ஒருவரை அழைத்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “பகிர்தல்” என்பதைத் தட்டி “பிறரிடம் பகிரும்படி கேள்” என்பதைத் தட்டவும்.

  3. பகிர்தல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நபர் ஓர் அழைப்பைப் பெறுவார். பிறகு எந்த உடல்நலத் தகவலைப் பகிர வேண்டும் என்பதையும் அந்த நபரே தேர்வுசெய்யலாம். அழைப்பாளருக்கு, அவர்களின் தொடர்புகளில் உங்களைச் சேர்ப்பது அவசியம் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

மற்றொரு நபரின் உடல்நலத் தரவைப் பார்க்க அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல்

  1. அழைப்ப வந்த பிறகு, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “பூட்டுத் திரை” அல்லது “அறிவிப்பு மையம்” என்பதில் உள்ள “அழைப்பு” என்பதைத் தட்டவும்.

    • உடல்நலம் செயலியில், “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, “பகிர்தல்” என்பதைத் தட்டி, திரையின் மேலே உள்ள “அழைப்பில் காட்டு” என்பதைத் தட்டவும்.

  2. “ஏற்கிறேன்” என்பதைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

பகிரப்பட்ட தரவைப் பார்வையிடுதல் மற்றும் அதற்கு விரைவாகப் பதிலளித்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “பகிர்தல்” என்பதைத் தட்டி, “உங்களுடன் பகிரப்படுபவை” என்பதற்குக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கார்டைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றை நீங்கள் செய்யலாம்:

    • விரைவாகப் பதிலளிக்க: மெசேஜ், அழைப்பு அல்லது FaceTime என்பதைத் தட்டவும்.

    • மேலும் விவரங்களைப் பார்க்க: திரையில் உள்ள ஐட்டத்தைத் தட்டவும்.

      விவரங்களில் விளக்கப்படத் தரவுகள் இருந்தால், மெசேஜைத் தட்டுவதன் மூலம் அது குறித்த உரையாடலைத் தொடங்கலாம். உங்கள் மெசேஜில் வரைபடம் சேர்க்கப்பட்டுள்ளது.

மற்றொருவரிடம் அவரது உடல்நலத் தரவை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டல்

ஒருவர் உங்களுடன் அவரது உடல்நலத் தரவைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனில் அவரிடம் iOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடன் கூடிய iPhone அல்லது iPadOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடன் கூடிய iPad ஆகிய சாதனங்கள் இருக்க வேண்டும். எந்தத் தரவைப் பகிர்வது, பகிர்வதை எப்போது நிறுத்துவது என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியும்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “பகிர்தல்” என்பதைத் தட்டி, “பிறரிடம் பகிரும்படி கேள்” என்பதைத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

  3. உடல்நலத் தரவை உங்களுடன் பகிர, நீங்கள் அவர்களின் தொடர்புகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், உதவி தேவைப்பட்டால் பிறருடன் உடல்நலத் தரவைப் பகிர்தல் என்ற இணைப்பில் பகிர்தல் குறித்த வழிமுறைகள் கிடைக்கும் என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்தவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.