இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்

Apple Intelligence* மூலம், நீங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களில் உள்ள எதையும் கண்டறியலாம், நீங்கள் பார்க்க விரும்பும் கதைகளின் நினைவுத் திரைப்படங்களை உருவாக்கலாம், கவனத்தைத் திசைதிருப்பும் ஆப்ஜெக்ட்களை அகற்றி உங்கள் புகைப்படங்களின் மிக முக்கியப் பகுதிகளில் ஃபோகஸ் செய்யலாம்.

ஒரு iPadஇன் ஃபோட்டோஸ் செயலியில் உள்ள புகைப்படங்கள் காட்டப்பட்டுள்ளன. திரையின் மேல் வலதுபுறத்தில் விளக்கத்துடன் கூடிய தேடல் பார் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

Apple Intelligence மூலம் குறிப்பிட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தேடுதல்

Apple Intelligence மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தை அல்லது வீடியோவில் உள்ள முக்கியத் தருணத்தை மிக எளிதில் கண்டறியலாம், நீங்கள் கண்டறிய விரும்புவதை விவரித்தால் மட்டுமே போதுமானது.

  1. உங்கள் iPadஇல் ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “தேடு” பட்டன்-ஐத் தட்டி, இயல்பான மொழியில் அதை விவரிக்கவும், உதாரணங்கள்: “Maya skateboarding in a tie-dye shirt”, “Sadie cartwheeling on the grass”.

    குறிப்பு: புகைப்படங்களில் உள்ள நபர்களையும் செல்லப்பிராணிகளையும் பெயர் குறிப்பிடுவது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, ஃபோட்டோஸ் செயலியில் நபர்களையும் செல்லப்பிராணிகளையும் கண்டறிந்து பெயரிடுதல் என்பதைப் பார்க்கவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தேடல் முடிவுகள் அனைத்தையும் பார்த்தல்: “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டவும்.

    • குறிப்பிட்ட தேடல் முடிவுகளைத் தேர்ந்தெடுத்தல்: “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, நீங்கள் பகிர அல்லது ஆல்பத்தில் சேர்க்க விரும்பும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தேர்ந்தெடுக்கவும்.

    • தேடல் முடிவுகளை வகைப்படுத்துதல்: “வரிசைப்படுத்து மற்றும் ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, “சமீபத்தில் சேர்த்ததன்படி வகைப்படுத்து” அல்லது “படமெடுத்த தேதியின்படி வகைப்படுத்து” என்பதைத் தட்டவும்.

    • தேடல் முடிவுகளை வடிகட்டுதல்: “வரிசைப்படுத்து மற்றும் ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, “ஃபில்டர்” என்பதைத் தட்டி, பிடித்தவை அல்லது திருத்தப்பட்டவை போன்ற ஒரு விருப்பத்தைத் தட்டவும்.

  4. நீங்கள் நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

நினைவுத் திரைப்படத்தை உருவாக்குதல்

நீங்கள் பார்க்க விரும்பும் கதையின் பிரத்தியேக நினைவுத் திரைப்படத்தை ஃபோட்டோஸ் செயலியிலேயே உருவாக்கலாம். அதை விவரித்து டைப் செய்தால் மட்டும் போதும், Apple Intelligence சிறந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிந்து, தனித்துவமான அத்தியாயங்களும் வர்ணிப்பும் கொண்ட கதையாக அவற்றைத் தொகுத்து, அதற்கு இசையையும் சேர்க்கும்.

  1. உங்கள் iPadஇல் ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி, “நினைவுகள்” என்பதைத் தட்டி, “உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் லைப்ரரியில் இருந்து நீங்கள் உருவாக்க விரும்பும் திரைப்படத்தை விவரித்து உள்ளிட்டு,“மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

புகைப்படங்களில் இருந்து கவனச்சிதறல்களை அகற்றுதல்

கிளீன்-அப் கருவியைப் பயன்படுத்தி புகைப்படத்தின் பின்னணியில் உள்ள கவனத்தைத் திசைதிருப்பும் ஆப்ஜெக்ட்களை அகற்றலாம்.

குறிப்பு: சில மொழிகளிலும் வட்டாரங்களிலும் கிளீன்-அப் அம்சம் கிடைப்பதில்லை. மேலும் தகவல்களுக்கு, ஃபோட்டோஸ் செயலியில் கிளீன்-அப் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கான தேவைகள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

  1. உங்கள் iPadஇல் ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு புகைப்படத்தைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டி, “கிளீன்-அப்” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: “கிளீன்-அப்” என்பதைத் தட்டியதும், சில ஐட்டங்கள் தானாகவே ஹைலைட் செய்யப்படும், நீங்கள் அவற்றைத் தட்டி விரைவாக அகற்றலாம்.

  3. நீங்கள் அகற்ற விரும்புபவற்றின் மீது தட்டவும், பிரஷ் செய்யவும் அல்லது வட்டமிடவும்.

    படத்தைப் பெரிதாக்க அல்லது விரிவாக்க இரண்டு விரல் பின்ச்சைப் பயன்படுத்தவும்.

    குறிப்பு: ஒரு நபரின் முகத்தின் மீது பிரஷ் செய்தால், முகம் பிக்சலேட் செய்யப்பட்டு மங்கலாக்கப்படும்.

  4. நீங்கள் நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கவும்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.