இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் வீடியோ நீளத்தை டிரிம் செய்தல், வேகத்தைச் சரிசெய்தல், ஆடியோவைத் திருத்துதல்

ஃபோட்டோஸ் செயலியில், உங்கள் iPadஇல் பதிவுசெய்த வீடியோவை டிரிம் செய்து அதன் தொடங்குமிடம் மற்றும் நிறுத்துமிடத்தை மாற்றலாம். ஸ்லோ-மோட் பயன்முறையில் பதிவுசெய்யும்போது பிளேபேக் வேகத்தை சரிசெய்து, மெதுவான இயக்கத்தில் தோன்றும் வீடியோவின் பகுதியையும் மாற்றலாம்.

iPhone 16 அல்லது அதற்குப் பிந்தைய எந்தவொரு மாடல்களில் (iPhone16e தவிர) வீடியோவைப் பதிவுசெய்யும்போதும், ஃபோட்டோஸ் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோவைத் திருத்தலாம்.

மையத்தில் பிளே ஆகும் வீடியோவைக் கொண்ட ஃபோட்டோஸ் செயலியில் உள்ள “திருத்து” திரை. வீடியோவின் ஃபிரேம் வியூவர் வீடியோவின் கீழ்ப்பகுதியில் உள்ளது, டிரிம் செய்த வீடியோவில் சேர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரேம்களைச் சுற்றி மஞ்சள் நிற அவுட்லைன் காட்டப்பட்டுள்ளது. திரையின் இடதுபுறத்தில் “வீடியோ”, “சரிசெய்”, “ஃபில்டர்கள்”, “கிராப் செய்” ஆகிய பட்டன்கள் உள்ளன. அவற்றில் “வீடியோ” பட்டன் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவை டிரிம் செய்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. வீடியோவைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. தொடக்க மற்றும் நிறுத்த நேரத்தைச் சரிசெய்ய ஃபிரேம் வியூவரின் ஒரு முனையை இழுத்து, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

  4. டிரிம் செய்த வீடியோவை மட்டுமே சேமிக்க “வீடியோவைச் சேமி” என்பதைத் தட்டவும் அல்லது வீடியோவின் இரு பதிப்புகளையும் சேமிக்க புதிய கிளிப்பாக வீடியோவைச் சேமிக்கவும்.

நீங்கள் சேமித்த பிறகு ட்ரிம் செய்ததைச் செயல்தவிர்க்க, வீடியோவைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டி, “ரிவெர்ட் செய்” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: புதிய கிளிப்பாக சேமிக்கும் வீடியோவை அசல் நிலைக்குத் திருப்ப முடியாது.

வீடியோவின் பிளேபேக் வேகத்தைத் திருத்துதல்

டிரமாட்டிக் எஃபெக்ட்டுக்காக அதிக ஃபிரேம் விகிதத்தில் பதிவுசெய்த வீடியோக்களை மெதுவாக பிளே செய்ய முடியும்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. வீடியோவைத் திறந்து “திருத்து” பட்டன்-ஐத் தட்டிய பிறகு, வீடியோ என்பதைத் தட்டவும்.

  3. பிளேபேக் வேக பட்டன்-ஐத் தட்டி, பிளேபேக் வேகத்தைத் தட்டவும்.

    குறிப்பு: நீங்கள் படமெடுத்த வீடியோவின் ஃபார்மெட்டைப் பொறுத்து பிளேபேக் விருப்பங்கள் உள்ளன. நீங்கள் படம்பிடிக்கும் ஃபார்மெட் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமான விருப்பங்கள் கிடைக்கும்.

ஸ்லோ-மோ பயன்முறையில் எடுக்கப்பட்ட வீடியோவின் ஸ்லோமோஷன் பகுதிகளைத் திருத்துதல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஸ்லோ-மோட் பயன்முறையில் வீடியோ ஷாட்டைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. எந்த இடத்தில் வீடியோ ஸ்லோ மோஷனில் பிளே செய்யப்பட வேண்டும் என்பதை அமைக்க, ஃபிரேம் வியூவருக்குக் கீழே உள்ள வெள்ளை நிற செங்குத்து பார்களை இழுக்கவும்.

  4. உங்கள் திருத்தங்களைச் சேமிக்க “முடிந்தது” என்பதைத் தட்டவும் அல்லது நீங்கள் செய்த மாற்றங்கள் பிடிக்கவில்லை என்றால், “ரத்துசெய்” என்பதைத் தட்டவும்.

ஆடியோ மிக்ஸ் மூலம் ஒலியைத் திருத்துதல்

iPhone 16 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில் (iPhone 16e தவிர) வீடியோவைப் பதிவுசெய்யும்போது, கூடுதல் ஆடியோ பிரத்தியேகமாக்கலை அனுமதிக்கும் வகையில் ஸ்பேஷியல் ஆடியோ, ஸ்டீரியோ போன்ற பல வடிவங்களில் வீடியோ பதிவுசெய்யப்படுகிறது. ஸ்பேஷியல் ஆடியோவை ஆன் செய்து வீடியோவைப் பதிவுசெய்திருந்தால், உங்கள் iPadஇல் வீடியோவின் ஒலியைப் பிறகு எப்போது வேண்டுமானாலும் திருத்த முடியும். உதாரணமாக, பேசும் நபரின் மீது கவனம்செலுத்தும் வகையில் பின்னணி இரைச்சலைக் குறைக்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

    ஃபோட்டோஸ் செயலியில் ஒரு வீடியோ திறக்கப்பட்டுள்ளது. திரையின் இடது பக்கத்தில் “வீடியோ”, “ஆடியோ மிக்ஸ்”, “சரிசெய்”, “ஃபில்டர்கள்”, “கிராப் செய்” ஆகியவற்றிற்கான எடிட்டிங் பட்டன்கள் காட்டப்பட்டுள்ளன. “ஆடியோ மிக்ஸ்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திரையின் வலதுபுறம் “ஸ்டாண்டர்டு”, “இன்-ஃபிரேம்”, “ஸ்டூடியோ” மற்றும் “சினிமேட்டிக்” போன்ற ஒலிக்கான விருப்பங்களை மாற்றுவதற்கான பட்டன்கள் காட்டப்பட்டுள்ளன. “ஸ்டுடியோ” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  2. வீடியோவைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “ஆடியோ மிக்ஸ்” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • ஸ்டாண்டர்டு: நீங்கள் பதிவுசெய்த அசல் ஆடியோவை பிளே செய்யவும்.

    • இன்-ஃபிரேம்: வீடியோ ஃபிரேம்களில் காணப்படாத மூலங்களிலிருந்து வரும் ஒலிகளையும் குரல் ஒலிகளையும் குறைக்கவும்.

    • ஸ்டுடியோ: நீங்கள் ஒரு தொழில்முறை ஸ்டுடியோவில் பதிவுசெய்ததைப் போல ஒலி இருக்க, பின்னணி ஒலிகள் மற்றும் ரிவர்பைக் குறைக்கவும்.

    • சினிமேட்டிக்: அனைத்துக் குரல் ஒலிகளையும் முன்புறப் டிராக்கில் வைத்து, திரைப்படங்களில் உள்ள ஆடியோவைப் போல சூழல் இரைச்சல் ஒலிகளை அகற்றவும்.

  4. எஃபெக்ட் மற்றும் பின்னணி இரைச்சல் அளவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க, மிக்ஸ் விருப்பங்களை அடுத்துள்ள ஸ்லைடரை இழுக்கவும்.

  5. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.