இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் ஃபோகஸை அமைத்தல்

ஃபோகஸ் என்பது கவனச்சிதறல்களைக் குறைப்பதன் மூலம் ஒரு பணியில் கவனம் செலுத்த உதவும் ஓர் அம்சமாகும். குறிப்பிட்ட செயல்பாட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்பினால் வழங்கப்பட்ட ஃபோகஸ் விருப்பங்களில் ஒன்றை நீங்கள் பிரத்தியேகப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக பணி, தனிப்பட்டது அல்லது உறக்கம் போன்றவை. இல்லையெனில் நீங்கள் பிரத்தியேக ஃபோகஸை உருவாக்கலாம். அனைத்து அறிவிப்புகளையும் தற்காலிகமாக அமைதியாக்குவதற்கோ உங்கள் பணிக்கு உதவக்கூடிய குறிப்பிட்ட அறிவிப்புகளை மட்டும் அனுமதிப்பதற்கோ (எடுத்துக்காட்டாக, நீங்கள் பிஸியாக இருப்பதை மற்ற நபர்களுக்கும் செயலிகளுக்கும் தெரிவித்தல்) ஃபோகஸை நீங்கள் பயன்படுத்தலாம்.

Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருந்தால், மிக முக்கியமான அறிவிப்புகளை மட்டுமே உங்களுக்குக் காட்ட Apple Intelligenceஐப் பயன்படுத்தும் “குறுக்கீடுகளைக் குறைத்தல்” ஃபோகஸையும் நீங்கள் பயன்படுத்தலாம். “குறுக்கீடுகளைக் குறைத்தல்” ஃபோகஸைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: அனைத்து அறிவிப்புகளையும் விரைவாக அமைதியாக்க, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து “ஃபோகஸ்” என்பதைத் தட்டி, “தொந்தரவு செய்ய வேண்டாம்” என்பதை ஆன் செய்யவும்.

ஃபோகஸை அமைத்தல்

  1. அமைப்புகள்  > ஃபோகஸ் என்பதற்குச் சென்று ஃபோகஸைத் தட்டவும். எடுத்துக்காட்டாக, தொந்தரவு செய்ய வேண்டாம், தனிப்பட்ட வேலை அல்லது பணி.

    உங்கள் ஃபோகஸிற்கு, கீழே உள்ள படிநிலைகளில் விவரிக்கப்பட்டுள்ள விருப்பங்களை நீங்கள் அமைக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    வழங்கப்பட்ட ஆறு ஃபோகஸ் விருப்பங்களைக் காட்டும் திரை. “தொந்தரவு செய்ய வேண்டாம்”, “டிரைவிங்”, “அழைப்புகளின்போது மெசேஜ்களைப் பெற வேண்டாம்”, “உறக்கம்”, “தனிப்பட்டவை”, “பணி” போன்றவை. உங்களின் அனைத்து Apple சாதனங்களிலும் அதே ஃபோகஸ் அமைப்புகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் “அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” பட்டன் ஆன் செய்யப்பட்டுள்ளது.
  2. ஃபோகஸின் போது எந்தெந்த நபர்கள் மற்றும் செயலிகளின் அறிவிப்புகளை அனுமதிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவும்:

    • நபர்கள்: “நபர்கள்” என்பதைத் தட்டி, “இவர்களிடம் இருந்து வரும் அறிவிப்புகளை அனுமதி” என்பதைத் தட்டவும். “நபர்களைச் சேர்” பட்டன்-ஐத் தட்டி, தொடர்புகளைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” என்பதை தட்டி, திரையின் மேற்புறத்தில் உள்ள “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும். “இவர்களிடம் இருந்து வரும் அறிவிப்புகளை அமைதியாக்கு” என்பதைத் தட்டுவதன் மூலமாகவும் குறிப்பிட்ட நபர்களை அமைதியாக்கலாம்.

    • செயலிகள்: “செயலிகள்” என்பதைத் தட்டி, “இவற்றின் அறிவிப்புகளை அனுமதி” என்பதைத் தட்டவும். “செயலிகளைச் சேர்” பட்டன்-ஐத் தட்டி, செயலிகளைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” என்பதை தட்டி, திரையின் மேற்புறத்தில் உள்ள “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும். “இவற்றின் அறிவிப்புகளை அமைதியாக்கு” என்பதைத் தட்டுவதன் மூலமாகவும் குறிப்பிட்ட செயலிகளை அமைதியாக்கலாம்.

  3. “விருப்பங்கள்” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • பூட்டுத் திரைக்குப் பதிலாக அறிவிப்பு மையத்தில் அமைதியாக்கப்பட்ட அறிவிப்புகளைக் காட்டு: “பூட்டுத் திரையில் காட்டு” அமைப்பை ஆஃப் செய்யவும்.

    • இந்த ஃபோகஸின்போது பூட்டுத் திரை வெளிச்சத்தைக் குறைக்க: “பூட்டுத் திரை வெளிச்சத்தைக் குறை” அமைப்பை ஆன் செய்யவும்.

    • முகப்புத் திரைச் செயலிகளில் அறிவிப்பு பேட்ஜ்களை மறைக்க: “அறிவிப்பு பேட்ஜ்களை மறை” அமைப்பை ஆன் செய்யவும்.

    • இந்த ஃபோகஸின் போது பூட்டுத் திரையின் வெளிச்சத்தைக் குறை: “பூட்டுத் திரை வெளிச்சத்தைக் குறை” அமைப்பை ஆன் செய்யவும்.

    • முக்கியமான அறிவிப்புகள் புத்திசாலித்தனமாக உங்கள் பணியில் குறுக்கிட அனுமதிக்க: Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், "அறிவார்ந்த கண்டறிதல் & அமைதியாக்குதல்” என்பதை ஆன் செய்யவும். பிரத்தியேகமாக அனுமதிக்கப்பட்ட அல்லது அமைதியாக்கப்பட்ட அறிவிப்புகள் எப்போதுமே அனுமதிக்கப்படும் அல்லது அமைதியாக்கப்படும்.

  4. விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து முடித்ததும் திரையின் மேற்புறத்தில் உள்ள “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. பூட்டுத் திரை மற்றும் முகப்புத் திரை விருப்பங்களைக் குறிப்பிடவும்:

    • இந்த ஃபோகஸிற்கான பூட்டுத் திரையைத் தேர்வுசெய்யவும்: “பூட்டுத் திரையைத் தேர்வுசெய்” என்பதற்குக் கீழே உள்ள “பூட்டுத் திரை” முன்னோட்டத்தைத் தட்டி, பூட்டுத் திரையைத் தேர்ந்தெடுத்து “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • இந்த ஃபோகஸிற்கான முகப்புத் திரையைத் தேர்வுசெய்யவும்: “முகப்புத் திரைப் பக்கத்தைத் தேர்வுசெய்யவும்” என்பதற்குக் கீழே உள்ள முகப்புத் திரை முன்னோட்டத்தைத் தட்டி, முகப்புத் திரைப் பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” என்பதைத் தட்டி, திரையின் மேற்புறத்தில் உள்ள “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

      குறிப்பு: உங்கள் ஃபோக்கஸிற்காக முகப்புத் திரையை இன்னும் பிரத்தியேகப்படுத்துவதற்கான மாற்றங்களைச் செய்ய, முகப்புத் திரையில் செயலிகளையும் விட்ஜெட்களையும் நகர்த்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

உங்கள் ஃபோகஸை அமைத்த பிறகு அமைப்புகள் > ஃபோகஸ் என்பதற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று மேலே உள்ள விருப்பங்களில் நீங்கள் தேர்வுசெய்ததை மாற்றலாம்.

ஃபோகஸ் ஃபில்டர்களைச் சேர்த்தல்

நீங்கள் ஃபோகஸை அமைக்கும்போது, ஃபோகஸின்போது என்னென்ன தகவல்களைச் செயலிகள் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் செயலி ஃபில்டர்களைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, ஃபோகஸின் போது எந்த மெயில் கணக்கு அல்லது எந்த கேலண்டரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. அமைப்புகள் > ஃபோகஸ் என்பதற்குச் சென்று, நீங்கள் ஃபில்டர்களைச் சேர்க்க விரும்பும் ஃபோகஸைத் தட்டவும்.

  2. “ஃபோகஸைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டி, ஃபோகஸ் ஃபில்டர்கள் என்பதற்குக் கீழே உள்ள “ஃபில்டரைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. போகஸின்போது நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தட்டி, “தேர்வுசெய்” என்பதைத் தட்டிய பிறகு அந்தச் செயலியில் இருந்து தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும்:

    • கேலண்டர்: ஃபோகஸின்போது நீங்கள் பார்க்க விரும்பும் கேலண்டர்களைத் தேர்வுசெய்யவும்.

    • Mail: ஃபோகஸின் போது நீங்கள் எந்த மெயில் கணக்குகளைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • மெசேஜஸ்: ஃபோகஸின் போது நீங்கள் எந்த மெசேஜ் உரையாடல்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். எடுத்துக்காட்டாக, இந்த ஃபோகஸின் போது நீங்கள் அறிவிப்புகளை அனுமதித்த நபர்களின் உரையாடல்கள் மட்டும்.

    • Safari: ஃபோகஸின் போது நீங்கள் பயன்படுத்த விரும்பும் தாவல் குழுவைத் தேர்வுசெய்யவும்.

  4. ஃபோகஸில் ஃபில்டரைச் சேர்க்க, “சேர்” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: அமைப்புகள் > ஃபோகஸ் என்பதில் அனைத்துச் சாதனங்களிலும் பகிர் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது ஃபோகஸ் ஃபில்டர்கள் அனைத்துச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படாது.

பிரத்தியேக ஃபோகஸை உருவாக்குதல்

வழங்கப்பட்ட ஃபோகஸ் விருப்பங்களிலிருந்து வேறுபட்ட ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்த விரும்பினால், நீங்கள் ஒரு பிரத்தியேக ஃபோகஸை உருவாக்கலாம்.

  1. அமைப்புகள்  > ஃபோகஸ் என்பதற்குச் செல்லவும்.

  2. மேல் வலதுபுறத்தில் உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி “பிரத்தியேகம்” என்பதைத் தட்டவும்.

    பிரத்தியேகம், டிரைவிங், ஃபிட்னஸ், கேமிங், மைண்ட்ஃபுல்னஸ், வாசிப்பு உள்ளிட்ட கூடுதலாக வழங்கப்பட்ட ஃபோகஸ் விருப்பங்களுக்கான ஃபோகஸ் அமைவுத் திரை.
  3. உங்கள் ஃபோகஸிற்கான பெயரை உள்ளிட்டு, ரிட்டர்ன் பட்டனைத் தட்டவும்.

  4. உங்கள் ஃபோகஸைக் காட்சிப்படுத்த நிறத்தையும் ஐகானையும் தேர்வுசெய்து, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  5. “ஃபோகஸைப் பிரத்தியேகப்படுத்து” என்பதைத் தட்டி, ஃபோகஸை அமைத்தல் கட்டுரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்களின் பிரத்தியேக ஃபோகஸிற்கான விருப்பங்களை அமைக்கவும்.

அனைத்து Apple சாதனங்களிலும் உங்கள் ஃபோகஸ் அமைப்புகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருத்தல்

ஒரே Apple கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ள அனைத்து Apple சாதனங்களிலும் ஒரே ஃபோகஸ் அமைப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

  1. அமைப்புகள்  > ஃபோகஸ் என்பதற்குச் செல்லவும்.

  2. “அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” அம்சத்தை ஆன் செய்யவும்.

    குறிப்பு: நீங்கள் “அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” என்பதை ஆன் செய்து, “ஃபோகஸ் நிலையைப் பகிர்” என்பதை ஆன் செய்தால், உங்கள் ஃபோகஸ் அம்சத்தால் நீங்கள் அறிவிப்புகளை அமைதிப்படுத்தியிருப்பதைக் காட்ட முடியும். எடுத்துக்காட்டாக, ஃபோகஸை அமைக்கும்போது அறிவிப்புகளை அமைதிப்படுத்தினால், நீங்கள் அமைதிப்படுத்தியுள்ளீர்கள் என்பதை உங்களுக்கு மெசேஜ் அனுப்பும் நபர்கள் பார்க்க முடியும். குறிப்பிட்ட நபர்களின் தொடர்பு கார்டில் அவர்களுக்கான இந்த அமைப்பை மாற்றலாம்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.