இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “இடம் அறி” செயலியில் AirTag அல்லது ஐட்டத்தைப் பகிர்தல்

AirTag உடன் இணைக்கப்பட்ட ஐட்டத்தை (அல்லது “இடம் அறி” அம்சத்திற்கான ஆதரவைக் கொண்ட மூன்றாம் தரப்பு ஐட்டத்தை) பகிர விரும்பினால், “இடம் அறி” செயலியில் அதைப் பகிரலாம். இதன்மூலம் பெறுநர்களால் அதை மேப்பில் பார்க்கவும் கண்டறியவும் முடியும். அது அருகில் இருந்தால், “இடம் அறி” செயலி மூலம் அதில் ஓர் ஒலியைப் பிளே செய்யலாம். நீங்கள் ஐட்டங்களைப் பகிரும் நபர்களுடன் அவை நகரும்போது, அவர்களுக்கு டிராக்கிங் அறிவிப்புகள் காட்டப்படாது.

பின்வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரையில், நீங்கள் ஒரு AirTag அல்லது ஐட்டத்தை உங்களைத் தவிர்த்து ஐந்து பெறுநர்களுடன், அதாவது ஓர் ஐட்டத்தை மொத்தம் ஆறு நபர்களுடன் பகிரலாம்:

  • உங்கள் Apple கணக்கிற்கான இரு-காரணி அங்கீகாரம் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  • நீங்கள் பகிரும் நபருக்கு Apple கணக்கு இருக்க வேண்டும், அதில் அவர் உள்நுழைந்திருக்க வேண்டும். அவர்களும் iCloudஐப் பயன்படுத்த வேண்டும். பிள்ளை கணக்குடன் உங்களால் பகிர முடியாது.

  • உரிமையாளரும் பெறுநர்களும் iCloud கீசெயினை ஆன் செய்திருக்க வேண்டும்.

  • உரிமையாளரும் பெறுநர்களும் iOS 17, iPadOS 17, macOS 14 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: நீங்கள் AirTagஐப் பகிரும் அதே வழிமுறையில் மூன்றாம் தரப்பு ஐட்டத்தையும் பகிரலாம்.

AirTagஐப் பகிர்தல்

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் பகிர விரும்பும் AirTagஇன் பெயரைத் தட்டி, “இந்த AirTagஐப் பகிர்” (அல்லது “இந்த ஐட்டத்தைப் பகிர்”) என்பதற்குக் கீழே “நபரைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் Apple கணக்குத் தகவலை உள்ளிடவும்.

    கூடுதல் நபர்களைச் சேர்க்க, “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. நீங்கள் பகிர விரும்பும் நபரின் பெயரைத் தட்டி, அவரின் Apple கணக்கைத் தட்டவும்.

    நீங்கள் சேர்க்க விரும்பும் ஒவ்வொரு நபருக்கும், படி 3 மற்றும் 4இல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை மீண்டும் செய்யவும்.

  5. பெறுநர்களைச் சேர்த்த பிறகு, மேல் வலது மூலையில் உள்ள “பகிர்” என்பதைத் தட்டவும்.

    ஐட்டத்தின் முதன்மைத் திரையில், நீங்கள் அழைத்த அனைத்து நபர்களின் பட்டியலும் அவர்களின் அழைப்பு நிலையும் காட்டப்படும்.

    ஒருவர் அழைப்பை ஏற்றுக்கொண்டால், “இடம் அறி” செயலியில் “ஐட்டங்கள்” என்பதன் கீழே பகிர்ந்த AirTag காட்டப்படும். ஓர் ஐட்டம் பெறுநருடன் பகிரப்பட்டுள்ளது என்று அவருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். ஒருவர் அழைப்பை நிராகரிக்கிறார் என்றால், அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும், அதை உங்களால் இனி பார்க்க முடியாது.

“இடம் அறி” செயலியில் AirTagஐப் பகிருமாறு அதன் உரிமையாளரைக் கேட்டல்

AirTag உரிமையாளர் “இடம் அறி” செயலி மூலம் பகிராமல் பிற வழிகளில் அதை உங்களுடன் பகிர்ந்தால், “தெரியாத AirTag அறிவிப்பு” மற்றும் டிராக்கிங் அறிவிப்புகளை நீங்கள் பெறுவீர்கள். ஒரு AirTagக்கான டிராக்கிங் அறிவிப்புகளைப் பெறுவதை நிறுத்த, “இடம் அறி” செயலி மூலம் அதைப் பகிருமாறு உரிமையாளரைக் கேளுங்கள்.

குறிப்பு: நீங்கள் ஒரே குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால் மட்டுமே AirTagஐப் பகிருமாறு உரிமையாளரைக் கேட்க முடியும். குடும்பப் பகிர்வுக் குழுவில் உறுப்பினரைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

  1. நீங்கள் பெறும் டிராக்கிங் அறிவிப்பில், “AirTagஐப் பகிருமாறு உரிமையாளரைக் கேள்” என்பதைத் தட்டவும்.

  2. “உரிமையாளரைக் கேட்கவும்” என்பதைத் தட்டவும்.

    உரிமையாளர் உங்களைப் பெறுநராகச் சேர்க்க விரும்பினால், AirTagஐப் பகிர்வதற்கான அழைப்பை அவர் உங்களுக்கு அனுப்புவார்.

பகிர்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல்

AirTagஐப் பகிர நீங்கள் அழைக்கப்பட்டால், அதற்கான அறிவிப்பைப் பெறுவீர்கள்.

“இடம் அறி” செயலியில் அறிவிப்பைப் பார்க்க, “ஐட்டங்கள்” என்பதைத் தட்டவும். பிறகு பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • அழைப்பை ஏற்றுக்கொள்ள: “சேர்” என்பதைத் தட்டவும்.

    அந்த AirTag உங்கள் ஐட்டங்களின் பட்டியலில், [பகிர்ந்தவர்]இன் ஐட்டங்கள் என்பதற்குக் கீழே காட்டப்படும். அந்த AirTagஇன் பெறுநராக நீங்கள் இருக்கும் வரையில் டிராக்கிங் அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள்.

  • அழைப்பை நிராகரிக்க: “சேர்க்காதே” என்பதைத் தட்டவும்.

AirTagஐப் பகிர்வதை நிறுத்துதல்

நீங்கள் AirTagஇன் உரிமையாளராக இருந்து, அதை இனிமேல் பகிர விரும்பவில்லை என்றால், “இடம் அறி” செயலியில் அதைப் பகிர்வதை நிறுத்தலாம்.

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் பகிரும் ஐட்டத்தின் பெயரைத் தட்டி, அதைப் பகிர்ந்துகொள்ளும் நபரின் பெயரைத் தட்டவும்.

  3. “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டி, “பகிர்வதை நிறுத்து” என்பதை மீண்டும் தட்டவும்.

    அந்த நபரால் இனி AirTag இருப்பிடத்தைப் பார்க்க முடியாது, ஆனால் AirTag அவருடன் நகரும்போது டிராக்கிங் அறிவிப்புகளை அவர் பெறக்கூடும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.