இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

iPadஇல் “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி, தொலைந்துபோன சாதனங்களைக் கண்டறியலாம், AirTags மூலம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கண்டறியலாம் மற்றும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் கண்காணிக்கலாம்.

“இடம் அறி” திரையில் ஒரு iPad காட்டப்பட்டுள்ளது.

“இடம் அறி” செயலியில் உங்கள் iPadஐச் சேர்த்தல்

தொலைந்துபோன சாதனத்தை “இடம் அறி” செயலியைப் பயன்படுத்திக் கண்டறிவதற்கு முன்பு, நீங்கள் சாதனத்தை “இடம் அறி” செயலியில் முதலில் சேர்த்திருக்க வேண்டும். அமைப்புகள் செயலிக்குச் சென்று, உங்கள் பெயரைத் தட்டி, “எனது iPadஐக் கண்டறி” என்பதைத் தட்டி, அந்த அம்சத்தை ஆன் செய்யவும். இதேபோன்று உங்கள் மற்ற சாதனங்களையும் “இடம் அறி” செயலியில் சேர்ப்பதன் மூலம் இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

“இடம் அறி” திரையில் பல சாதனங்கள் அவற்றின் இருப்பிடத்தைப் பகிர்வது போன்று காட்டப்பட்டுள்ளது

தொலைந்துபோன Apple சாதனத்தைக் கண்டறிதல்

இடம் அறி செயலிக்குச் சென்று, “சாதனங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் தேடும் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். “இடம் அறி” செயலியில் சாதனம் சேர்க்கப்பட்டிருந்தால், அதை நீங்கள் மேப்பில் காணலாம், தேடுவதை எளிதாக்கும் வகையில் அதை ஒலிக்கச் செய்யலாம்.

“இடம் அறி” செயலியின் திரையில் இருப்பிடத்தைப் பகிரும் ஏர்டேக்குகள் காட்டப்பட்டுள்ளது.

AirTagஐச் சேர்த்தல்

ஜிம் பை, முதுகுப்பை, லக்கேஜ் ஆகியவை தொலைந்துபோக வாய்ப்பிருந்தால் AirTagஐ “இடம் அறி” செயலியில் சேர்த்து, அதை குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் செருகலாம். “இடம் அறி” செயலிக்குச் சென்று, “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, [add button] என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். “இடம் அறி” செயலியில் ஒரு AirTagஐ (மற்றும் பிற இணக்கமான ஆக்சஸரிகள்) சேர்த்த பிறகு, அவற்றின் இருப்பிடத்தைக் காட்டும் வகையில் அவை ஐட்டங்கள் பட்டியலில் காட்டப்படும்.

“இடம் அறி” செயலியின் திரையில் நண்பரின் இருப்பிடம் காட்டப்பட்டுள்ளது

நண்பர்களைக் கண்டறிதல்

நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்கள் இருப்பிடங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும்போது, “இடம் அறி” செயலியில் ஒருவரை ஒருவர் பார்க்கலாம். முதலில், “இடம் அறி” செயலிக்குச் சென்று, “நபர்கள்” என்பதைத் தட்டவும். “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “எனது இருப்பிடத்தைப் பகிர்” என்பதைத் தட்டி தொடர்பைத் தேர்வுசெய்யவும். தங்கள் இருப்பிடத்தை உங்களுடன் பகிர்ந்த நண்பர்கள் நபர்கள் பட்டியலில் காட்டப்படுகின்றனர்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.