இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உங்கள் பணிச்செயல்முறையை ஒழுங்குபடுத்துதல்

செயலிகளுக்கு இடையே விரைவாக மாறுதல், உங்கள் திரையில் பல செயலிச் சாளரங்களின் அளவை மாற்றி ஒழுங்குபடுத்துதல், மெனு பாரைப் பயன்படுத்துதல் மற்றும் பலவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட பல செயலிகளை “செயலி மாற்றி” காட்டுகிறது.

iPadஇல் செயலிகளுக்கு இடையே மாறுதல்

உங்கள் திறந்திருக்கும் சாளரங்கள் மற்றும் செயலிகள் அனைத்தையும் பார்க்க, திரையின் கீழே இருந்து மேலே ஸ்வைப் செய்து, நடுவில் இடைநிறுத்தவும். ஒரு சாளரத்தைத் தட்டி அதை முன்புறமாகக் கொண்டு வரவும். இல்லையெனில், திரையின் கீழே இருந்து Dockஐ வெளியே கொண்டு வரும் வகையில் போதிய தூரம் மேல்நோக்கி ஸ்வைப் செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தட்டவும்.

திறந்திருக்கும் செயலிகளுக்கு இடையே விரைவாக மாற, திரையின் கீழ் விளிம்பில் இடதுபுறமாக அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

iPad திரையில் மூன்று செயலிகள் திறக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த சாளர லே-அவுட்டில் மூன்று பகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டு திரையில் காட்டப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் பல செயலிகளைப் பயன்படுத்துதல்

முதலில் அமைப்புகள் செயலிக்குச் சென்று, “மல்டிடாஸ்க்கிங் & சைகைகள்” என்பதைத் தட்டி, “சாளரப் பயன்முறையில் செயலிகள்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

செயலியின் சாளரத்தின் அளவை மாற்ற, கீழ் மூலைகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து இழுக்கவும். இல்லையெனில், மல்டிடாஸ்க்கிங் மெனு-ஐத் தொட்டுப் பிடித்து, சாளர லே-அவுட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். மற்றொரு செயலிச் சாளரத்தைத் திறக்க, Dockஐப் பயன்படுத்தவும். இல்லையெனில், திரையின் கீழிருந்து மேலே ஸ்வைப் செய்து திறந்திருக்கும் சாளரங்களைப் பக்கவாட்டில் நகர்த்தவும். இதன் மூலம் நீங்கள் முகப்புத் திரையை அணுகலாம்.

Pages செயலி திறக்கப்பட்டு, திரையின் மேற்புறத்தில் மெனு பார் காட்டப்பட்டுள்ளது. மெனு பட்டியில் உள்ள “திருத்து” மெனு திறக்கப்பட்டுள்ளது. அதில் “அனைத்தையும் தேர்ந்தெடு”, “கண்டுபிடி”, “பிரதியெடு” போன்ற நீங்கள் செய்யக்கூடிய செயல்களின் பட்டியல் காட்டப்பட்டுள்ளது.

மெனு பாரில் கட்டளைகளைக் கண்டறிதல்

iPadஇல், செயலிகளில் மெனு பார் இருக்கும். அதைப் பயன்படுத்தி விரைவாகச் செயல்களைச் செய்யலாம். மெனு பாரைப் பார்க்க, திறந்த செயலியில் உள்ள சாளரத்தைத் தட்டி, iPad திரையின் மேல் விளிம்பில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

iPad முகப்புத் திரையில், Dockஇல் இருந்து திறக்கக்கூடிய கோப்புகள் காட்டப்பட்டுள்ளன.

Dockஇல் இருந்தே உங்கள் கோப்புறைகளை அணுகுதல்

நீங்கள் அடிக்கடி அணுகும் கோப்புறைகளை Dockஇல் சேர்ப்பதன் மூலம் அவற்றை எளிதாகக் கண்டறியலாம் மற்றும் திறக்கலாம். கோப்புகள் செயலியில், நீங்கள் நகர்த்த விரும்பும் கோப்புறையைத் தொட்டுப் பிடிக்கவும். மெனு திறக்கும்போது, “இதில் சேர்” என்பதைத் தேர்வுசெய்து, “Dock” என்பதைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

அனைத்து அம்சங்களும் எல்லா iPad மாடல்களுக்கும் கிடைக்காது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.