iPadஇல் உள்ள சுருக்கவழிகள் செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்

Apple Intelligence மூலம் முன்னெப்போதும் இருப்பதைவிட அதிகச் செயல்திறன்மிக்க சுருக்கவழிகளை நீங்கள் உருவாக்கலாம். * சுருக்கவழிகளில் நுண்ணறிவுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி உரையின் சுருக்கவிவரத்தைப் பெறலாம், படங்களை உருவாக்கலாம், Apple Intelligence அல்லது நீட்டிப்பு மாடல்களை நேரடியாகப் பயன்படுத்தி கிடைக்கும் பதில்களை உங்கள் சுருக்கவழிகளில் உள்ளிடலாம்.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

Apple Intelligence சுருக்கவழிகளைக் கண்டறிதல்

உங்கள் சேகரிப்பில் சேர்ப்பதற்காகப் புதிய சுருக்கவழிகளைத் தேடுகிறீர்கள் என்றாலோ Apple Intelligence மூலம் என்னென்ன செய்யலாம் மற்றும் குறிப்பிட்ட சுருக்கவழிகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று அறிய விரும்பினாலோ, சுருக்கவழிகள் கேலரியில் உள்ள Apple Intelligence வகைப்பிரிவைப் பார்க்கவும்.

  1. iPadஇல் சுருக்கவழிகள் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் உள்ள “கேலரி” என்பதைத் தட்டவும்.

  3. Apple Intelligence வகைப்பிரிவில் உள்ள சுருக்கவழியில் “சுருக்கவழியை உருவாக்கு” பட்டன்-ஐத் தட்டி அதை உங்கள் சேகரிப்பில் சேர்க்கவும்.

பிரத்தியேகச் சுருக்கவழிகளை உருவாக்க மாடலைப் பயன்படுத்துதல்

Apple Intelligence மாடல் (சாதனத்தில் உள்ள அல்லது பிரைவேட் கிளவுடு கம்ப்யூட் மாடல்) அல்லது ChatGPTஐப் பயன்படுத்தும் உங்கள் சொந்த பிரத்தியேகச் சுருக்கவழிகளை உருவாக்கி, உங்கள் சுருக்கவழிகளில் எளிய அல்லது சிக்கலான கோரிக்கைகளைக் கையாளலாம். செயலுக்கு உள்ளீட்டை வழங்கவும், செயலின் வெளியீட்டைப் பிரிக்கவும், இன்னும் பலவற்றிற்கும் நீங்கள் ஒரு மாடலைப் பயன்படுத்தலாம்.

மூன்று மாடல்களில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்:

  • சாதனத்திலுள்ள மாடல்: எளிய கோரிக்கைகளைக் கையாள நெட்வொர்க் இணைப்பைப் பயன்படுத்தாமல் சாதனத்திலுள்ள Apple Intelligence மாடலைப் பயன்படுத்தும்.

  • பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்: உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும்போது சிக்கலான கோரிக்கைகளைச் செயல்படுத்த Appleஇன் பிரைவேட் கிளவுடு கம்ப்யூட்டைப் பயன்படுத்தும்.

  • நீட்டிப்பு மாடல்: உங்கள் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க ChatGPTஐப் பயன்படுத்தும்.

தொடங்குவதற்கு, பின்வருவன போன்ற எதையேனும் செய்து பாருங்கள்:

  1. iPadஇல் சுருக்கவழிகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “சுருக்கவழிகள்” டூல்பாரில் “சுருக்கவழியை உருவாக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: Apple Intelligence வகையைத் தட்டி, குறிப்பிட்ட அறிவார்ந்த செயல்பாட்டைத் தேர்வுசெய்யவும்.

  3. ஒரு செயலைத் தேடி, அதைத் தட்டி, உங்கள் சுருக்கவழியில் சேர்க்கவும்.

    எடுத்துக்காட்டாக, “தற்போதைய வானிலையைப் பெறு” என்பதைத் தேடி, அதைத் தட்டவும். உங்கள் இருப்பிடத்திற்கான அணுகலைக் கோரும் அறிவிப்பைச் சுருக்கவழிகள் காட்டினால், “அணுகலை அனுமதி” என்பதைத் தட்டவும்.

  4. “மாடலைப் பயன்படுத்து” செயலைத் தேடி, பின்னர் ஒரு மாடலைத் தேர்ந்தெடுக்கவும்.

    உதாரணமாக, “சாதனத்திலேயே” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. “மாடலைப் பயன்படுத்து” என்பதற்குக் கீழே உள்ள உரைப் புலத்தில், உங்கள் ப்ராம்ப்ட்டை உள்ளிடவும்.

    எடுத்துக்காட்டாக, “இன்றைய வானிலையைச் சுருக்கமாகவும் வேடிக்கையாகவும் இமோஜியுடன் விவரி” என்று உள்ளிடவும்.

    உங்கள் கோரிக்கையை மேலும் மேம்படுத்துவதற்காக மாடலுடன் உரையாட விரும்பினால், “மாடலைப் பயன்படுத்து” என்பதற்கு அடுத்துள்ள அம்புக்குறியைத் தட்டி, “பின்தொடர்தல்” செக்பாக்ஸைத் தட்டவும்.

  6. மற்றொரு செயலைச் சேர்க்க, அதைத் தேடி, அதைத் தட்டிச் சேர்க்கவும்.

    எடுத்துக்காட்டாக, “உள்ளடக்கத்தைக் காட்டு” என்பதைத் தேடி, அதைத் தட்டி, “பதில்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. உங்கள் புதிய சுருக்கவழியைச் சோதனை செய்து பார்க்க “பிளே செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

உங்கள் சுருக்கவழி தானாகவே சேமிக்கப்படும். உங்கள் சுருக்கவழியை இயக்கக்கூடிய பல்வேறு வழிகளைப் பற்றி அறிய, iPhone அல்லது iPadஇல் உள்ள மற்றொரு செயலியில் இருந்து சுருக்கவழியைத் தொடங்குதல் என்பதைப் பார்க்கவும்.

உள்ளீடு, பின்தொடர்தல், வெளியீடு பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

“மாடலைப் பயன்படுத்து” செயலைப் பயன்படுத்துவது பற்றிய சில விவரங்கள்:

  • மாடல்களில் உள்ளிடப்படும் உரைகளில் வேரியபிள்கள், முந்தைய செயல்பாடுகளில் இருந்து முடிவுகள், கேலண்டர் நிகழ்வுகள், நினைவூட்டல்கள், புகைப்படங்கள் போன்றவை உள்ளடங்கும்.

  • “பின்தொடர்தல்” என்பதைத் தேர்ந்தெடுத்தால், சுருக்கவழியை இயக்கும்போது, மாடலின் பதிலை அது உங்களுக்குக் காட்டும் மற்றும் அடுத்த செயலுக்கு இறுதிப் பதிலை நகர்த்தும் முன் உங்கள் உள்ளீட்டை மேம்படுத்த அனுமதிக்கும். உதாரணமாக, நீங்கள் கூடுதல் கோரிக்கைகளைச் செய்யலாம் அல்லது கூடுதல் தகவல்களை வழங்கலாம்.

  • செயல்களுக்கு ஏற்ப வெளியீட்டுப் பதில்கள் தானாகவே உகந்ததாக்கப்படும். பதிலின் வெளியீட்டு முறையையும் நீங்கள் குறிப்பிடலாம்: “மாடலைப் பயன்படுத்து” செயலைச் சேர்க்கும்போது, “வெளியீடு” பாப்-அப் மெனுவைத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கவும்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.