iPadஇல் உள்ள ஹோம் செயலி பற்றிய அறிமுகம்

லைட்கள், லாக்குகள் மற்றும் தெர்மோஸ்டாட்கள் போன்ற HomeKit மற்றும் Matter-செயல்படுத்தப்பட்ட ஆக்சஸரிகளைப் பாதுகாப்பாகச் சேர்க்கவும், கட்டுப்படுத்தவும், தானியக்கமாக்கவும் ஹோம் செயலியைப் பயன்படுத்தலாம். ”HomeKit பாதுகாப்பான வீடியோ” அம்சத்தை ஆதரிக்கும் பாதுகாப்பு கேமராக்களை அமைத்திருந்தால், கேமரா ஒருவரை அடையாளம் காணும்போதோ வாசலில் ஒரு பேக்கேஜ் டெலிவரி செய்யப்படும்போதோ நீங்கள் வீடியோ பதிவுசெய்யலாம், அறிவிப்பைப் பெறலாம். பல ஸ்பீக்கர்களைக் குழுவாக்கி ஒரே ஆடியோவை பிளே செய்யலாம், ஆதரிக்கப்படும் சாதனங்களில் இன்டர்காம் மெசேஜ்களை அனுப்பலாம், பெறலாம்.

குறிப்பிட்ட நேரங்களில் இயங்கும் வகையில் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆக்சஸரியைச் செயல்படுத்தும்போது (எடுத்துக்காட்டாக, முன் கதவை அன்லாக் செய்யும்போது) இயங்கும் வகையில் ஆட்டோமேஷன்களை உருவாக்கலாம். Apple TV 4K (4ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தையவை), HomePod ஸ்பீக்கர்கள் போன்ற ஹோம் ஹப் சாதனத்தின் உதவியுடன் உங்கள் வீட்டைத் தொலைவில் இருந்தே நீங்கள் கட்டுப்படுத்தலாம். நீங்கள் வெளியே இருக்கும்போது, நீங்களும் நீங்கள் அழைத்த மற்றவர்களும் உங்கள் வீட்டைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்த இது அனுமதிக்கும்.

குறிப்பு: Matter தொழில்நுட்பத்தைக் கொண்ட ஆக்சஸரிகளுக்கு HomePod ஸ்பீக்கர், Apple TV 4K போன்ற ஹோம் ஹப் சாதனங்கள் அவசியம். Thread தொழில்நுட்பத்தைக் கொண்ட ஆக்சஸரிகளுக்கு Apple TV 4K (3ஆம் தலைமுறை) Wi-Fi + Ethernet, HomePod mini, ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்பு பார்டர் ரௌட்டர் போன்ற Thread தொழில்நுட்படத்தைக் கொண்ட ஹோம் ஹப் சாதனம் அல்லது Thread இணைப்பை ஆதரிக்கும் சாதனம் அவசியம்.

ஹோம் கண்ணோட்டம்

ஹோம் செயலி உங்கள் ஆக்சஸரிகளை எளிதாக அணுகவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஹோம் செயலியில் உள்ள சைடுபாரில் “ஹோம்” என்பதைத் தட்டி பின்வரும் பிரிவுகளைப் பார்க்கலாம்:

  • பிரிவுகள்: அறை வாரியாக ஒழுங்கமைத்து, தொடர்புடைய அனைத்து ஆக்சஸரிகளையும் ஒரே திரையில் காட்ட லைட்கள், பாதுகாப்பு, காலநிலை, ஸ்பீக்கர்கள், தண்ணீர் போன்ற ஏதேனும் ஒரு வகையைத் தட்டவும்.

  • கேமராக்கள்: நான்கு கேமராக்கள் வரையிலான வீடியோக்கள் “கேமராக்கள்” அம்சத்தின் கீழே தோன்றும். மேலும் கேமராக்களைப் பார்க்க இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  • காட்சிகள்: ஒரே தட்டுதலில் அல்லது Siri கோரிக்கையின் மூலம் பல ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்த காட்சிகளை உருவாக்கலாம்—எடுத்துக்காட்டாக, மாலையில் பிளைண்டுகளை மூடிவிட்டு லைட்களை ஆன் செய்ய ஒரு காட்சியைத் தட்டவும்.

  • பிடித்தவை: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆக்சஸரிகளை விரைவாகக் கட்டுப்படுத்த “பிடித்தவையில் சேர்” அம்சத்தைப் பயன்படுத்தவும்.

  • ரூம்கள்: ஆக்சஸரிகள் அறை வாரியாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் என்பதால், உங்களுக்குத் தேவையான ஆக்சஸரியை எளிதில் கண்டறியலாம்.

ஹோம் செயலியில் இடதுபுற சைடுபார் திறக்கப்பட்டு, அதில் மேல் இடதுபுறத்தில் ஹோம், ஆட்டோமேஷன் மற்றும் கண்டறி தாவல்கள் காட்டப்பட்டுள்ளன. அதற்குக் கீழே ஹோம் செயலியில் உள்ள வகைகள், அறைகள் காட்டப்பட்டுள்ளன. சைடுபாரின் வலதுபுறத்திற்கு மேற்புறம் இன்டர்காம், சேர், கூடுதல் விருப்பங்கள் ஆகிய பட்டன்கள் உள்ளன. வகை பட்டன்கள் மேற்புறம் காட்டப்பட்டுள்ளன. அதற்குக் கீழே காட்சிகள், கேமரா படங்கள், ஆக்சஸரிகளுடன் கூடிய ஓர் அறை ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

ஹோம் செயலியைத் திருத்துதல்

உங்களுக்கு ஏற்ற வகையில் ஹோம் செயலியை ஒழுங்கமைக்கலாம்.

சைடுபாரில் “ஹோம்” என்பதைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்.

  • ஐட்டங்களை மறுசீரமைக்கவும்: “ஹோம் காட்சியைத் திருத்து” என்பதைத் தேர்ந்தெடுத்து டைல்களை வேறு இடத்திற்கு இழுக்கவும். முடித்ததும் “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

  • பிரிவுகளை மறுவரிசைப்படுத்தவும்: “ஹோம்” திரையில் பிரிவுகள் வரிசைப்படுத்தப்படும் விதத்தை மாற்ற, “பிரிவுகளை மறுவரிசைப்படுத்து” என்பதைத் தேர்வுசெய்து, பிரிவுக்கு அருகில் உள்ள "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐ இழுத்து புதிய இடத்தில் வைக்கவும். நீங்கள் முடித்ததும், “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

  • ஐகான்களின் அளவை மாற்றவும்: “வீட்டுக் காட்சியைத் திருத்து” என்பதைத் தேர்ந்தெடுத்து டைலைத் தட்டி, “அளவை மாற்று” பட்டன்-ஐத் தட்டவும், பின்னர் “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

Apple சாதனங்களின் மூலம் ஸ்மார்ட் ஹோம்களை உருவாக்குவதும் ஆக்சஸரிகளைச் சேர்ப்பதும் எப்படி என்று மேலும் அறிய, சைடுபாரில் உள்ள “கண்டறி” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.