இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad முகப்புத் திரையில் உள்ள செயலிகளையும் விட்ஜெட்களையும் நகர்த்துதல்

உங்கள் முகப்புத் திரையின் லே-அவுட்டை நீங்கள் மாற்றலாம்-உங்கள் வால்பேப்பரை ஃப்ரேம் செய்வதற்குச் செயலிகளையும் விட்ஜெட்களையும் திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம் அல்லது அவற்றை மற்ற முகப்புத் திரைப் பக்கங்களுக்கு இழுக்கலாம். உங்களிடம் பல முகப்புத் திரைப் பக்கங்கள் இருந்தால், ஒவ்வொன்றும் தனித்துவமான லே-அவுட்டைக் கொண்டிருக்கலாம். நீங்கள் தற்காலிகமாக முகப்புத் திரைப் பக்கங்களை மறைக்கலாம், புதிய செயலிகள் பதிவிறக்கப்படும் இடத்தையும் மாற்றலாம், மேலும் பலவற்றையும் செய்யலாம்.

உதவிக்குறிப்பு: குறிப்பிட்ட ஃபோகஸுடன் (எடுத்துக்காட்டாக, உங்கள் வொர்க் ஃபோகஸ்) தொடர்புடைய அனைத்துச் செயலிகளையும் விட்ஜெட்களையும் ஒரு முகப்புத் திரைப் பக்கத்திற்கு நகர்த்தி, அந்த ஃபோகஸின்போது அந்தப் பக்கத்தை அணுகக்கூடியதாக நீங்கள் மாற்றலாம்.

உங்கள் முகப்புத் திரையில் செயலிகளையும் விட்ஜெட்களையும் நகர்த்துதல்

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. ஐட்டங்கள் ஜிகிள் ஆகத் தொடங்கும் வரை முகப்புத் திரையின் பின்னணியைத் தொட்டு பிடிக்கவும்.

  3. பின்வரும் இடங்களில் ஒன்றிற்குச் செயலி அல்லது விட்ஜெட்டை இழுக்கவும்:

    • அதே பக்கத்தில் உள்ள மற்றொரு இடம்-திரையின் மேல், கீழ் அல்லது பக்கவாட்டுப் பகுதி உட்பட

    • மற்றொரு முகப்புத் திரைப் பக்கம்

      செயலி அல்லது விட்ஜெட்டை திரையின் வலதுபுற விளிம்பிற்கு இழுக்கவும். இந்தப் புதிய பக்கம் காட்டப்படும் வரை நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கலாம். Dockக்கு மேலே உள்ள புள்ளிகள், உங்களிடம் எத்தனை பக்கங்கள் உள்ளன, எந்தப் பக்கத்தைப் பார்க்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றன.

      ஒரு செயலி அடுத்த பக்கத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டும் அம்புக்குறியுடன் முகப்புத் திரையில் ஜிகிள் ஆகும் செயலிகள்.

      உதவிக்குறிப்பு: திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள Dockக்கும் நீங்கள் செயலியை இழுக்கலாம்.

  4. முடித்த பிறகு, மேல் வலதுபுறத்தில் உள்ள “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

முகப்புத் திரையில் இருந்து விட்ஜெட்டை அகற்றுதல்

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. விரைவுச் செயல்கள் மெனுவைத் திறக்க விட்ஜெட்டைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • விட்ஜெட்டை அகற்ற: “விட்ஜெட்டை அகற்று” என்பதைத் தட்டவும்.

    • ஸ்மார்ட் ஸ்டேக்கை அகற்ற: “ஸ்டேக்கை அகற்று” என்பதைத் தட்டவும்.

முகப்புத் திரையையும் செயலிகளையும் அவற்றின் அசல் லே-அவுட்டிற்கு மீட்டமைத்தல்

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > “iPad தரவை இடமாற்றுதல் அல்லது மீட்டமைத்தல்” என்பதற்குச் செல்லவும்.

  2. “மீட்டமை” என்பதைத் தட்டி “முகப்புத் திரை லே-அவுட்டை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

    நீங்கள் உருவாக்கிய கோப்புறைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, நீங்கள் பதிவிறக்கிய செயலிகள் உங்கள் iPad உடன் வந்த செயலிகளுக்குப் பிறகு அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.