இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் புகைப்படப் பின்னணியில் இருந்து ஒரு பொருளை லிஃப்ட் செய்தல்

ஒரு புகைப்படம் அல்லது வீடியோ ஃபிரேமின் சப்ஜெக்ட்டை அதன் பின்னணியிலிருந்து தனிப்படுத்தி, பிற ஆவணங்களிலும் செயலிகளிலும் நீங்கள் நகலெடுக்கலாம் அல்லது பகிரலாம்.

ஃபோட்டோஸ், Safari, விரைவுப் பார்வை மற்றும் பலவற்றில் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: இந்த அம்சம் iPad (8ஆம் தலைமுறை) சாதனத்தில் ஆதரிக்கப்படவில்லை.

“ஃபோட்டோஸ்” செயலியின் லைப்ரரியில் புகைப்படம் திறக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மையத்தில் உள்ள நபர் அவுட்லைன் செய்து காட்டப்பட்டுள்ளார், அதற்கு மேலே “நகலெடு”, “ஸ்டிக்கரைச் சேர்”, “பகிர்” ஆகிய பட்டன்கள் காட்டப்படுகிறது.
  1. ஒரு புகைப்படத்தை முழு திரையில் திறக்கவும் அல்லது எந்த ஃபிரேமிலும் வீடியோவை இடைநிறுத்தவும்.

  2. பொருளைத் தொட்டுப் பிடிக்கவும். பொருளைச் சுற்றி ஒரு அவுட்லைன் தோன்றும்போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்ய:

    • பொருளைத் தொடுவதைத் தொடரவும், பின்றகு அதை வேறு ஆவணத்திற்கு இழுக்கவும்.

    • “நகலெடு” அல்லது “பொருளை நகலெடு” என்பதைத் தட்டி, பிறகு அந்தப் பொருளை ஒரு மின்னஞ்சல், உரை மெசேஜ் அல்லது குறிப்பில் ஒட்டவும்.

    • பொருள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள ’கண்டுபிடி’ என்பதைத் தட்டவும்.

    • “ஸ்டிக்கரைச் சேர்” என்பதைத் தட்டி, பிறகு புகைப்படங்கள், மின்னஞ்சல், உரை மெசேஜ்கள் மற்றும் பலவற்றில் பயன்படுத்த ஸ்டிக்கரைச் சேமிக்கவும்.

    • “பகிர்” என்பதைத் தட்டி, AirDrop, மெசேஜஸ், அல்லது Mail போன்ற பகிர்தல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.