இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad பூட்டுத் திரையில் இருந்து அம்சங்களை அணுகுதல்

நீங்கள் முதலில் iPadஐ ஆன் செய்யும்போது அல்லது வேக் செய்யும்போது தற்போதைய நேரம் மற்றும் தேதி, சமீபத்திய அறிவிப்புகள் போன்றவை பூட்டுத் திரையில் காட்டப்படும். பூட்டுத் திரையில் இருந்தே, நீங்கள் அறிவிப்புகளைப் பார்க்கலாம், கேமரா மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கலாம், உங்களுக்குப் பிடித்த செயலிகளில் இருந்து தகவல்களை ஒரே பார்வையில் பெறலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

வால்பேப்பரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பிடித்த புகைப்படத்தைக் காட்சிப்படுத்துவதன் மூலம், நேரத்தின் எழுத்துருவை மாற்றுவதன் மூலம், விட்ஜெட்களைச் சேர்ப்பதன் மூலம் மற்றும் பலவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் பூட்டுத் திரையைப் பிரத்தியேகமாக்கலாம். பிரத்தியேக iPad பூட்டுத் திரையை உருவாக்குதல் பிரிவைப் பார்க்கவும்.

iPad பூட்டுத் திரையில் நேரமும் தேதியும் காட்டப்பட்டுள்ளன.

பூட்டுத் திரையில் அம்சங்களையும் தகவல்களையும் அணுகுதல்

iPad லாக் செய்யப்பட்டிருந்தாலும் கூட, உங்களுக்கு மிகவும் தேவையான அம்சங்களையும் தகவல்களையும் பூட்டுத் திரையில் இருந்து விரைவாக அணுகலாம்.

பூட்டுத் திரையில் இருந்து நீங்கள் அணுகக்கூடியவற்றைத் தேர்வுசெய்ய, iPadஇல் பூட்டுத் திரை அம்சங்களை ஆன் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

பூட்டுத் திரையில் அறிவிப்புகளின் முன்னோட்டங்களைப் பார்த்தல்

  1. அமைப்புகள்  > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. “முன்னோட்டங்களைக் காட்டு” என்பதைத் தட்டி “எப்போதும்” என்பதைத் தட்டவும்.

மெசேஜஸ் செயலியில் பெறும் மெசேஜ்கள், Mail மின்னஞ்சல்களில் உள்ள வரிகள், கேலண்டர் அழைப்புகள் பற்றிய விவரங்கள் போன்றவை அறிவிப்பு முன்னோட்டங்களில் அடங்கும். iPadஇல் உள்ள அறிவிப்புகளைப் பார்த்தல் மற்றும் அவற்றுக்குப் பதிலளித்தல் பிரிவைப் பார்க்கவும்.

பூட்டுத் திரையில் நேரலைச் செயல்பாடுகளைப் பார்த்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்

செயலியின் நேரலைச் செயல்பாடுகள் பூட்டுத் திரையில் காட்டப்படும் என்பதால் அவற்றின் செயல்நிலையை நீங்கள் எளிதாகப் பின்தொடரலாம். மேப்ஸ் காட்டும் வழிகள், Apple TV செயலி காட்டும் நேரலை விளையாட்டு அறிவிப்புகள், உணவு டெலிவரி செயலிகள் காட்டும் ஆர்டர் அறிவிப்புகள் போன்றவை இதற்கான சில உதாரணங்கள்.

உங்கள் iPadஇல் இசை, திரைப்படம் அல்லது பிற மீடியாவை பிளே செய்யும்போது, பூட்டுத் திரையில் உள்ள பிளேபேக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி இந்த நேரலைச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம், பிளே செய்யலாம், இடைநிறுத்தலாம், ரீவைண்ட் செய்யலாம், ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்யலாம். iPad பூட்டுத் திரையில் இருந்தே ரிமோட் சாதனத்தில் (Apple TV 4K, HomePod போன்றவை) மீடியா பிளேபேக்கையும் கட்டுப்படுத்தலாம்.

உங்கள் நேரலைச் செயல்பாடு அமைப்புகளை மாற்ற, அமைப்புகள்  செயலிக்குச் சென்று, செயலிகள் என்பதைத் தட்டி, நீங்கள் மாற்ற விரும்பும் அமைப்புகளைக் கொண்ட செயலியைத் தட்டி, நேரலைச் செயல்பாடுகள் என்பதைத் தட்டவும்.

குறிப்பு: ஒரு சில செயலிகளுக்கு நேரலைச் செயல்பாடுகள் அமைப்பு இல்லை.

பின்னணிப் பணிகளைக் கண்காணித்தல்

iPadஇல் நீங்கள் நீட்டிக்கப்பட்ட பின்னணிப் பணியைத் தொடங்கலாம் (எடுத்துக்காட்டாக, Safariஇல் ஒரு கோப்பைப் பதிவிறக்குதல்), அது முடிந்ததும் மற்றொரு பணிக்கு மாறலாம். பணிகள் முடிவடையும் வரை அவை பின்னணியில் தொடர்ந்து இயங்கும், அந்த நேரத்தில் நீங்கள் வேறு ஏதாவது செய்யலாம்.

தற்போது பின்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பணிகள் உங்கள் முகப்புத் திரையிலும் பூட்டுத் திரையிலும் “நேரலைச் செயல்பாடுகள்” எனக் காட்டப்படும். இதன் மூலம், அவை செயல்பாட்டில் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதுடன் அவற்றின் முன்னேற்றத்தையும் நீங்கள் கண்காணிக்கலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.