இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

தொலைந்துபோன ஐட்டத்தின் இருப்பிடத்தை iPadஇல் உள்ள “இடம் அறி” செயலியில் பகிர்தல்

உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலியில், தொலைந்துபோன AirTag அல்லது பிற ஐட்டத்தின் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு தற்காலிக வலைப்பக்கத்தை நீங்கள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, தவறாகக் கையாளப்படும் பேக்கைக் கண்காணிக்க உதவும் வகையில் ஒரு விமான நிறுவனத்துடன் வலைப்பக்கத்தைப் பகிரலாம்.

நீங்கள் ஓர் ஐட்டத்தைத் தொடர்புடன் பகிர விரும்பினால், AirTagஐப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

குறிப்பு: ஓர் ஐட்டம் உங்கள் இருப்பிடத்தைப் பகிரும் சாதனத்திற்கு அருகில் இருந்தால், அதன் இருப்பிடத்தைப் பகிர முடியாது.

இருப்பிடப் புதுப்பிப்புகளுக்கான வலைப்பக்கத்தை உருவாக்குதல் மற்றும் பகிர்தல்

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, இருப்பிடப் புதுப்பிப்புகளைப் பகிர விரும்பும் ஐட்டத்தைத் தட்டி, “ஐட்டத்தின் இருப்பிடத்தைப் பகிர்” என்பதைத் தட்டவும்.

  3. தற்காலிக வலைப்பக்கத்தை உருவாக்கி, பகிர்ந்து கொள்ள திரையில் உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

    குறிப்பு: புதுப்பிக்கப்பட்ட இருப்பிடங்களை வழங்க, உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்துள்ள Apple சாதனங்களில் ஒன்றாவது ஆன்லைனில் இருக்க வேண்டும்.

  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

பகிரப்பட்ட ஐட்டத்தின் இருப்பிடத்தைப் பார்த்தல் மற்றும் நிர்வகித்தல்

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, பகிரப்பட்ட வலைப்பக்கத்துடன் கூடிய ஐட்டத்தைத் தட்டி, “ஐட்டத்தின் இருப்பிடத்தைப் பகிர்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • URLஐ நகலெடுக்க: மேலே உள்ள புலத்தைத் தட்டவும்.

    • விவரங்களைக் காட்ட: “பார்வையிட்டவர்கள்” மற்றும் “காலாவதி” வரிசைகளைப் பார்க்கவும்.

    • கூடுதல் நபர்களுடன் வலைப்பக்கத்தைப் பகிர: “இருப்பிடத்தின் இணைப்பைப் பகிர்” என்பதைத் தட்டி, பகிர்தல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும் (AirDrop அல்லது Mail போன்றவை).

இருப்பிடப் புதுப்பிப்புகளைப் பகிர்வதை நிறுத்துதல்

நீங்கள் ஐட்டத்துடன் மீண்டும் இணைந்ததும், 7 நாட்களுக்குப் பிறகோ நீங்கள் அதைக் கைமுறையாக நிறுத்தும்போதோ பகிர்வு நிறுத்தப்படும்.

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, பகிரப்பட்ட வலைப்பக்கத்துடன் கூடிய ஐட்டத்தைத் தட்டி, “ஐட்டத்தின் இருப்பிடத்தைப் பகிர்” என்பதைத் தட்டவும்.

  3. “ஐட்டத்தின் இருப்பிடத்தைப் பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.