இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadக்கான முக்கியமான கையாளுதல் தகவல்கள்

சுத்தம் செய்தல்.  அழுக்கு அல்லது மணல், மை, மேக்-அப், சோப், சலவைப் பொருட்கள், அமிலம் அல்லது அமிலம் நிறைந்த உணவுகள், லோஷன்கள் போன்ற கறைகளையோ அல்லது பிற சேதங்களையோ ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் ஒன்று iPadஇல் பட்டால் உடனடியாக அதைச் சுத்தம் செய்யவும். சுத்தம் செய்ய:

  • அனைத்து கேபிள்களையும் இணைப்புநீக்கிவிட்டு, iPadஐ ஆஃப் செய்ய பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • முகப்பு பட்டன் உள்ள iPadஇல்: ஸ்லைடர் காட்டப்படும் வரை மேல் பட்டனை அழுத்திப் பிடித்து, ஸ்லைடரை இழுக்கவும்.

    • மற்ற iPad மாடல்களில்: பவர் ஆஃப் செய்ய, ஸ்லைடர்கள் காட்டப்படும் வரை மேல் பட்டனையும் ஒலியளவு பட்டன்களில் ஏதேனும் ஒன்றையும் ஒரே நேரத்தில் அழுத்திப் பிடித்து “மேல்” ஸ்லைடரை இழுக்கவும்.

    • அனைத்து மாடல்களும்: அமைப்புகள்  > பொது அமைப்புகள் > ஷட் டவுன் என்பதற்குச் சென்று ஸ்லைடரை இழுக்கவும்.

  • லென்ஸ் துடைக்கும் துணி போன்ற மென்மையான, சிறிது ஈரமான, லின்ட் அல்லாத துணியைப் பயன்படுத்தவும்.

  • திறந்திருக்கும் பகுதிகள் ஈரப்பதமாவதைத் தவிர்க்கவும்.

  • சுத்தம் செய்யும் பொருட்கள் அல்லது அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

கைரேகை பதிவதைத் தடுக்கும் ஒலியோஃபோபிக் (எண்ணெய்த் தடுப்புப் பொருள்) மேற்பூச்சு iPadஇன் முன்பக்கத்தில் உள்ளது. இந்த மேற்பூச்சு வழக்கமான பயன்பாட்டின் காரணமாக காலப்போக்கில் தேய்மானம் அடையும். சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் சிராய்ப்பான பொருட்கள் மேற்பூச்சை இன்னும் குறைப்பதுடன், கண்ணாடியில் கீறல்களை ஏற்படுத்தலாம்.

கனெக்டர்கள், போர்ட்டுகள், பட்டன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது:  கனெக்டரை போர்ட்டிற்குள் வலுக்கட்டாயமாக செருகவோ பட்டனை அதிக அழுத்தத்துடன் அழுத்தவோ கூடாது, ஏனெனில் உத்தரவாதத்தில் அடங்காத சேதத்தை இது ஏற்படுத்தக்கூடும். கனெக்டரும் போர்ட்டும் சரியாகச் சேரவில்லை எனில், அவை பொருத்தமற்றவையாக இருக்கலாம். இடையூறுகள் ஏதும் உள்ளனவா எனப் பார்த்து, கனெக்டர் போர்ட்டுடன் பொருந்துகிறதா என்பதையும், போர்ட்டை நோக்கி கனெக்டரைச் சரியாக வைத்துள்ளீர்கள் என்பதையும் உறுதிசெய்யவும்.

Lightning ஒரு பக்கம் USB கேபிள் மறுபக்கம்.  (Lightning கனெக்டர் உள்ள மாடல்கள்) வழக்கமான பயன்பாட்டிற்குப் பிறகு Lightning கனெக்டர் நிறமாற்றம் அடைவது இயல்பான ஒன்றாகும். அழுக்கு, குப்பைகள், ஈரப்பதத்தின் வெளிப்பாடு ஆகியவை நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். பயன்பாட்டின் போது உங்கள் Lightning கேபிள் அல்லது கனெக்டர் சூடானாலோ, உங்கள் iPad சார்ஜ் ஆகவில்லை அல்லது ஒத்திசைக்கப்படவில்லை என்றாலோ, அதை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது பவர் அடாப்டரில் இருந்து இணைப்புநீக்கிவிட்டு, Lightning கனெக்டரை மென்மையான, உலர்ந்த லின்ட் இல்லாத துணியால் சுத்தம் செய்யவும். Lightning கனெக்டரைச் சுத்தம் செய்யும்போது திரவப் பொருட்களையோ சுத்தம் செய்யும் பொருட்களையோ பயன்படுத்த வேண்டாம்.

Lightning ஒரு பக்கம் USB கேபிள் அல்லது USB-C சார்ஜ் கேபிள் மறுபக்கம்.  (மாடலைப் பொறுத்து) சில பயன்பாட்டு முறைகள் கேபிள்கள் இற்றுப்போவதற்கு அல்லது துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். மற்ற உலோக வயர் அல்லது கேபிளைப் போலவே தயாரிப்புடன் வழங்கப்படும் கேபிளும், ஒரே இடத்தில் அடிக்கடி வளைவு ஏற்பட்டால் வலுவற்றதாகக்கூடும் அல்லது எளிதில் முறியக்கூடியதாக மாறக்கூடும். மோசமான வளைவுகளுக்குப் பதிலாக லேசான வளைவுகள் உள்ளனவா என்று பார்க்கவும். கேபிள் அல்லது கனெக்டரில் முறிவுகள், துண்டிப்புகள், வளைவுகள் அல்லது பிற பாதிப்புகள் ஏதேனும் உள்ளனவா என அவ்வப்போது பரிசோதிக்கவும். அப்படி ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால், கேபிளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்.

இயக்க வெப்பநிலை.  32° மற்றும் 95° F (0° மற்றும் 35° C) இடையேயான சுற்றுப்புற வெப்பநிலையில் செயல்படும் வகையிலும் -4° மற்றும் 113° F (-20° மற்றும் 45° C) இடையேயான வெப்பநிலையில் வைத்துக்கொள்ளப்படும் வகையிலும் iPad வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை வரம்புகளைத் தாண்டி இருக்கும் இடங்களில் iPad வைக்கப்பட்டாலோ இயக்கப்பட்டாலோ அது சேதமடையலாம் மற்றும் பேட்டரியின் ஆயுள் குறையலாம். வெப்பநிலை அல்லது ஈரப்பதத்தில் அதிக அளவில் மாற்றம் ஏற்படும் சூழல்களில் iPadஐப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நீங்கள் iPadஐப் பயன்படுத்தும்போதோ பேட்டரியை சார்ஜ் செய்யும்போதோ, iPad வெப்பமடைவது இயல்பானது.

iPadஇன் உட்புற வெப்பநிலை இயல்பான இயக்க வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால் (எடுத்துக்காட்டாக, வெப்பம் அதிகமாக இருக்கும் காரில் இருப்பது அல்லது நீண்டநேரம் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பது), அதன் வெப்பநிலையை அது கட்டுப்படுத்த முயலும்போது பின்வருபவை நடக்கலாம்:

  • iPad சார்ஜ் ஆவது நிறுத்தப்படுதல்.

  • திரை மங்கலாக்கப்படுதல்.

  • வெப்பநிலை குறித்த எச்சரிக்கைத் திரையில் காட்டப்படுதல்.

  • சில செயலிகள் மூடப்படலாம்.

முக்கியம்: வெப்பநிலை குறித்த எச்சரிக்கைத் திரை காட்டப்படும்போது உங்களால் iPadஐப் பயன்படுத்த முடியாமல் போகலாம். iPadஆல் அதன் உள்ளே நிலவும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், வெப்பம் தனியும் வரை அது ஆழ்ந்த உறக்கப் பயன்முறைக்குச் செல்லும். நேரடி சூரிய ஒளிபடாத வகையில் குளிர்ச்சியான இடத்துக்கு iPadஐ நகர்த்தி, சில நிமிடங்கள் காத்திருந்து பின்னர் iPadஐப் பயன்படுத்தவும்.

iPhone அல்லது iPadஇன் வெப்பநிலை மிகவும் அதிகரித்தல் அல்லது மிகவும் குறைதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.