iPadஇல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்வையிடுதல்

ஃபோட்டோஸ் செயலியைப் பயன்படுத்தி iPadஇல் உள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கலாம்.

ஃபோட்டோஸ் செயலியில் திறந்துள்ள புகைப்படம் திரையின் நடுப்பகுதியில் காட்டப்பட்டுள்ளது.

புகைப்படங்களைப் பார்த்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படத்தை முழு திரையில் பார்க்க, அதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: 3D எஃபெக்ட் உள்ள புகைப்படத்தைப் பார்க்க, “ஸ்பேஷியல் காட்சி” பட்டன்-ஐத் தட்டி கையால் அங்குமிங்கும் உங்கள் iPadஐ நகர்த்தவும். இந்த அம்சம் iPad Pro (M4 மற்றும் M5), iPad Pro 12.9 அங்குலம் (5ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை), iPad Pro 11 அங்குலம் (3ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை), iPad Air (M2, M3 மற்றும் M4), iPad Air (5ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை), iPad (A16), iPad mini (A17 Pro), iPad mini (6ஆம் தலைமுறை) ஆகியவற்றில் கிடைக்கிறது.

  3. தொடர்ந்து பார்க்க, புகைப்படத்தின் மீது இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும் அல்லது விரைவாக முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்ல புகைப்படத்திற்குக் கீழே உள்ள சிறுபடங்களை ஸ்வைப் செய்யவும்.

  4. புகைப்படத்தை மூடி, லைப்ரரி அல்லது சேகரிப்புக்குச் செல்ல, “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஃபோகஸ் செய்ய விரும்பினால், அதைத் தட்டி திரையில் உள்ள கட்டுப்பாடுகளை மறைக்கவும். கட்டுப்பாடுகளைக் காட்ட அதை மீண்டும் தட்டவும்.

வீடியோக்களை பிளே செய்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. வீடியோவை பிளே செய்ய, அதைத் தட்டவும்.

    வீடியோ பிளே செய்யப்படும்போது நீங்கள் அதை இடைநிறுத்தலாம் அல்லது வெள்ளைப் பட்டியை இழுத்து வீடியோவில் முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்லலாம்.

  3. வீடியோவை மூடி, லைப்ரரி அல்லது சேகரிப்புக்குச் செல்ல, “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.