iPad சாதனத்தில் இசையைப் பெறுதல்

iPad சாதனத்தில் சேமித்த இசையையும், இணையத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட இசையையும் கேட்டு ரசியுங்கள். உங்கள் பாடல்கள் மற்றும் ஆல்பங்களின் தொகுப்பான இசை லைப்ரரியை பல வழிகளில் உருவாக்கலாம்.

குறிப்பு: சேவைகள் மற்றும் அம்சங்கள் அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. மேலும் அம்சங்கள் வட்டாரத்திற்கு ஏற்ப மாறுபடலாம். மொபைல் நெட்வொர்க் இணைப்பைப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

Apple Musicக்குச் சந்தா சேருதல்

நீங்கள் Apple Music சந்தா சேரும்போது, Apple Music கேட்டலாக்கில் உள்ள மில்லியன் கணக்கான பாடல்களை உடனடியாகக் கேட்கத் தொடங்கலாம். உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உங்கள் இசை லைப்ரரியை அணுக, அமைப்புகள்  > செயலிகள் > இசை என்பதற்குச் சென்று லைப்ரரி ஒத்திசைவை ஆன் செய்யவும். அதன்பிறகு நீங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடித்தவற்றை பிளே செய்ய, பாடல்களை சேர்க்கலாம் மற்றும் பதிவிறக்கலாம்.

உதவிக்குறிப்பு: Apple Music குடும்ப சந்தாவை வாங்குங்கள். இதன்மூலம் உங்கள் குடும்பப் பகிர்வு குழுவில் உள்ள அனைவரும் Apple Music சந்தாவைப் பகிரலாம்.

பிற இசைச் சேவைகளில் இருந்து ஏற்கெனவே உள்ள இசையை இடமாற்றுதல்

சந்தா சேர்ந்ததும், பிற இசைச் சேவைகளில் இருந்து உங்கள் இசையை Apple Musicக்கு எளிதாகக் கொண்டு வரலாம். சைடுபாரின் கீழ் இடது மூலையில் உள்ள உங்கள் சுயவிவர ஐகானைத் தட்டி, பிறகு பிற சேவைகளிலிருந்து இசையை மாற்றுதல் என்பதைத் தட்டவும். ஏற்கெனவே உள்ள லைப்ரரி அல்லது பிளேலிஸ்ட்களை இடமாற்ற, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

iTunes Storeஇல் இருந்து இசையை வாங்குதல்

நீங்கள் Apple Music சந்தா சேராமலேயே உங்களுக்கு பிடித்த பாடல்களையோ ஆல்பங்களையோ சேர்க்க விரும்பினால் iTunes Storeஇல் இருந்து இசையை வாங்கலாம் மற்றும் பதிவிறக்கலாம். மேலும், iTunes ஸ்டோரில் இருந்து ஆடியோக்களை முன்பே வாங்கியிருந்தால், உங்கள் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் சாதனங்களில் (மொத்தம் 10 சாதனங்கள் வரை) அவற்றைப் பதிவிறக்கலாம்.

இசையை உங்கள் Mac அல்லது Windows சாதனத்திலிருந்து இடமாற்றுதல்

உங்கள் iPad மற்றும் உங்கள் சாதனத்திற்கு இடையில் இசையை இடமாற்றவும் புதுப்பிக்கவும் Mac அல்லது Windows சாதனத்தை இணைக்கவும். ஆதரிக்கப்படும் உள்ளடக்கத்தை ஒத்திசைக்க, இசை (macOS 10.15 அல்லது அதற்குப் பிந்தையது) அல்லது iTunes (macOS 10.14 அல்லது அதற்கு முந்தையது மற்றும் Windows சாதனங்கள்) செயலியைப் பயன்படுத்தவும்.

திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இசை, இசை வீடியோக்கள், இ-புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் அல்லது Appleஇல் இருந்து ரிங்டோன்களை வாங்கும்போது, இணக்கமான iPhone, iPad, Mac அல்லது PCஇல் இவற்றை நிரந்தரமாகப் பதிவிறக்கும் விருப்பமும் உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் பதிவிறக்கிய உள்ளடக்கத்தை Appleஆல் திரும்பப் பெற முடியாது, பதிவிறக்கிய உள்ளடக்கத்தை இணைய இணைப்பு இல்லாமல் நீங்கள் எப்போதும் அணுகலாம்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.