இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone பேட்டரியின் ஆயுள் மற்றும் பயன்பாட்டைச் சரிபார்த்தல்

உங்கள் iPhone பேட்டரி ஆயுளைப் பற்றிய தகவல்களைப் பார்த்து, உங்கள் iPhone பயன்பாடு பேட்டரியின் அளவை எப்படிப் பாதிக்கிறது என்பதை அறியலாம்.

உங்கள் iPhone பேட்டரி ஆயுளை மதிப்பாய்வு செய்தல்

அமைப்புகள்  > பேட்டரி என்பதற்குச் சென்று பேட்டரி ஆயுள் & சார்ஜிங் என்பதைத் தட்டவும்.

உங்கள் பேட்டரியின் திறன், உச்சக்கட்ட செயல்திறன் மற்றும் உங்கள் பேட்டரியைப் பழுதுபார்க்க வேண்டுமா என்பது பற்றிய தகவல்களை iPhone காட்டுகிறது.

உங்கள் பேட்டரி பயன்பாட்டுத் தகவல்களைப் பார்த்தல்

அமைப்புகள்  > பேட்டரி என்பதற்குச் செல்லவும்.

கடந்த 24 மணிநேரத்திற்கான மற்றும் கடந்த 10 நாட்கள் வரையிலான உங்கள் பேட்டரி பயன்பாடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்கள் காட்டப்படும்.

  • புள்ளிவிவரங்கள் மற்றும் பரிந்துரைகள்: iPhone ஆற்றலைப் பயன்படுத்துவதற்குக் காரணமான நிலைமைகள் அல்லது பயன்பாட்டு முறைகள் பற்றிய புள்ளிவிவரங்களை நீங்கள் காணலாம். ஆற்றல் நுகர்வைக் குறைப்பதற்கான பரிந்துரைகளும் உங்களுக்குக் காட்டப்படும். ஒரு பரிந்துரை காட்டப்பட்டால், அதைத் தட்டி தொடர்புடைய அமைப்பிற்குச் செல்லவும்.

  • கடைசியாக சார்ஜ் செய்யப்பட்டது: பேட்டரி கடைசியாக எவ்வளவு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டது மற்றும் அது சார்ஜில் இருந்து துண்டிக்கப்பட்ட நேரத்தைக் குறிக்கிறது.

  • பேட்டரி அளவு கிராஃப் (கடந்த 24 மணிநேரத்தில்): iPhone குறைந்த ஆற்றல் பயன்முறையில் இருந்தபோது அல்லது பேட்டரி சார்ஜ் மிகக் குறைவாக இருந்தபோது இருந்த பேட்டரி அளவு, சார்ஜிங் இடைவெளிகள் மற்றும் காலஅளவுகளைக் காட்டுகிறது.

  • பேட்டரி பயன்பாட்டு கிராஃப் (கடந்த 10 நாட்களில்): ஒவ்வொரு நாளும் பயன்படுத்திய பேட்டரியின் சதவீதத்தைக் காட்டுகிறது.

  • செயல்பாட்டு கிரா:ப்: திரை ஆன் அல்லது ஆஃப் செய்யப்பட்டிருந்ததா என்பதன் அடிப்படையில் இதுவரையான செயல்பாட்டைக் காட்டுகிறது.

  • திரை ஆன் மற்றும் திரை ஆ:ப் செயல்பாடு: தேர்ந்தெடுக்கப்பட்ட நேர இடைவெளியில் திரை ஆனில் இருந்த நேரம் மற்றும் ஆஃப் செய்யப்பட்டிருந்த நேரத்திற்கான மொத்த செயல்பாட்டைக் காட்டுகிறது. கடந்த 10 நாட்களுக்கான விவரக்காட்சி ஒரு நாளுக்கான சராசரியைக் காட்டுகிறது.

  • செயலி வாரியான பேட்டரி பயன்பாடு: தேர்ந்தெடுக்கப்பட்ட நேர இடைவெளியில் ஒவ்வொரு செயலியும் பயன்படுத்திய பேட்டரி அளவின் விகிதாச்சாரத்தைக் காட்டுகிறது.

  • செயலி வாரியான செயல்பாடு: தேர்ந்தெடுக்கப்பட்ட நேர இடைவெளியில் ஒவ்வொரு செயலியும் பயன்படுத்தப்பட்ட நேரத்தைக் காட்டுகிறது.

குறிப்பு: ஒரு குறிப்பிட்ட மணிநேரம் அல்லது நாளுக்கான பேட்டரி தகவல்களைப் பார்க்க, கிராஃபில் அந்த நேர இடைவெளியைத் தட்டவும். அதைத் தேர்வுநீக்க, கிராஃபிற்கு வெளியே தட்டவும்.

பயன்பாடு மற்றும் அமைப்புகளைப் பொறுத்து பேட்டரியின் ஆயுள் மற்றும் சார்ஜ் சுழற்சிகள் மாறுபடும். உங்கள் பேட்டரியின் செயல்திறனையும் ஆயுளையும் எப்படி அதிகரிப்பது என்பதை அறிய, iPhone பேட்டரி மற்றும் செயல்திறன் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Apple அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரால் iPhone பேட்டரி பழுதுபார்க்கப்பட வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். பேட்டரி பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி தொடர்பான இணையதளத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.