இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் Freeform போர்டுகளைப் பகிர்ந்து கூட்டுப்பணியாற்றுதல்

iCloudஇல் உள்ள Freeform போர்டில் கூட்டுப்பணியாற்ற மற்றவர்களை நீங்கள் அழைக்கலாம். அவர்கள் ஆன்லைனில் இருந்து Apple கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது சமீபத்திய மாற்றங்கள் காட்டப்படும். போர்டில் உள்ளவற்றை அனைவரும் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய, விஷுவல் ஐட்டங்களுக்கான விளக்கங்களைச் சேர்க்கலாம்.

ஒரு பயனர் வேறொரு நபரின் Freeform போர்டைப் பின்தொடர்வது காட்டப்பட்டுள்ளது.

போர்டில் கூட்டுப்பணியாற்ற மற்றவர்களை அழைத்தல்

பகிரப்பட்ட Freeform போர்டில் மற்றவர்களுடன் கூட்டுப்பணியாற்றும்போது, மற்றவர்கள் செய்யும் திருத்தங்களை நீங்கள் பார்க்கலாம். மாற்றங்கள் iCloudஇல் சேமிக்கப்படும் என்பதால், போர்டுக்கான அணுகல் உள்ளவர்கள் அதைத் திறக்கும் போதெல்லாம் சமீபத்திய பதிப்பு காட்டப்படும்.

குறிப்பு: உரிமையாளரின் iCloud கணக்கில் மட்டுமே போர்டுகள் சேமிக்கப்படும். போர்டில் உங்கள் ஐட்டங்கள், பங்கேற்பாளர்களின் iCloud சேமிப்பகத்தைப் பாதிக்காது.

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “அனைத்து போர்டுகள்” பக்கத்தில் இருக்கும்போது: நீங்கள் பகிர விரும்பும் போர்டைத் தொட்டு பிடித்து, “பகிர்” என்பதைத் தட்டவும்.

    • போர்டில்: நீங்கள் பகிர விரும்பும் போர்டைத் திறந்து (அல்லது புதிய ஒன்றைத் தொடங்க, “புதிய போர்டு” பட்டன்-ஐத் தட்டவும்), “போர்டைப் பகிர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. போர்டின் பெயருக்குக் கீழே, தற்போதைய பகிர்வு அமைப்பு காட்டப்படும். எ.கா. “அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே திருத்தலாம்”. அமைப்பை மாற்ற, அதைத் தட்டவும். பகிர்வு அமைப்புகளை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

    குறிப்பு: உங்களால் மட்டுமே மற்றவர்களை அழைக்க முடிய வேண்டும் என்று விரும்பினால், “அழைக்கப்பட்டவர்களால் மட்டும்” என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆன் செய்யப்பட்டு பச்சை நிறத்தில் உள்ள “மற்றவர்களை அழைக்க அனுமதி” என்பதை ஆஃப் செய்யவும்.

  4. மெசேஜஸ், Mail போன்ற எந்தச் செயலி மூலம் போர்டைப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம் அல்லது சமீபத்தில் நீங்கள் தொடர்புகொண்டவர்களின் ஐகானைத் தட்டலாம்.

போர்டைப் பகிரத் தொடங்கிய பிறகும் மற்றவர்களை போர்டில் சேர்க்கலாம். “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டி, “பகிரப்பட்ட போர்டை நிர்வகியுங்கள்” என்பதைத் தட்டி, “அதிக நபர்களுடன் பகிர்” என்பதைத் தட்டவும். மெசேஜஸ் செயலியில் உள்ள மற்றவர்களின் அமைப்புகளைப் பொறுத்து, “கூட்டுப்பணியாற்றுக” பட்டன் மாறுபடலாம்.

குறிப்பு: போர்டைத் திருத்த அல்லது பார்க்க, நீங்கள் பகிரும் அனைவரும், iOS 16.2, iPadOS 16.2, macOS 13.1 அல்லது இவற்றுக்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் தங்களின் Apple கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும். மெசேஜஸ் செயலியைப் பயன்படுத்தி கூட்டுப்பணியாற்ற, நீங்களும் நீங்கள் அழைப்பவரும் iMessageஐ ஆன் செய்திருக்க வேண்டும்.

போர்டில் மற்றவர்களைப் பார்த்தல்

உங்கள் போர்டில் மற்றவர்கள் எங்கே பணியாற்றுகிறார்கள் என்பதை நிகழ்நேரத்தில் பார்க்கலாம், மற்றொரு பங்கேற்பாளர் போர்டில் நகரும்போது பின்தொடரலாம். உதாரணமாக, Freeform போர்டில் தங்கள் வடிவமைப்பு தொடர்பான முன்மொழிவைச் செய்யும் ஒருவரை நீங்கள் பின்தொடர்ந்தால், அவர்கள் போர்டில் எங்கே உள்ளனர், அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம்.

பகிரப்பட்ட Freeform போர்டில் கூட்டுப்பணியாற்றுதல் தொடர்பான மெனு ஒரு iPhoneஇல் திறக்கப்பட்டுள்ளது.
  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. கூட்டுப்பணியாற்றுபவர்களை எந்த போர்டில் பார்க்க விரும்புகிறீர்களோ அந்தப் பகிரப்பட்ட போர்டைத் திறந்து, “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “பங்கேற்பாளர் கர்சர்கள்” என்ற அமைப்பு ஆஃப் செய்யப்பட்டிருந்தால் அதை ஆன் செய்யவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அவர்கள் பணியாற்றும் இடத்திற்குச் செல்ல: பங்கேற்பாளரின் பெயரைத் தட்டவும்.

      பங்கேற்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள நிறம், போர்டில் உள்ள அவர்களின் இடத்தைக் குறிக்கும் நிறத்துடன் பொருந்தும்.

    • அவர்கள் பணியாற்றும்போது அல்லது உலாவும்போது அவர்களின் போர்டு காட்சியைப் பின்தொடர: பங்கேற்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “பின்தொடர்” என்பதைத் தட்டவும். இல்லையெனில், போர்டில் அந்த நபரின் அவதாரைத் தட்டி, “பின்தொடர்” என்பதைத் தட்டவும்.

      இந்தப் பயன்முறையில் நுழைவதற்கு முன்பு நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்தும் தேர்வுநீக்கப்படும். போர்டில் அவர்கள் பார்ப்பவை ஒரு பார்டருக்குள் (நீங்கள் பின்தொடரும் நபரின் கர்சருடன் பொருந்தக்கூடிய நிறத்தில்) ஃபிரேம் செய்து காட்டப்படும்.

      நீங்களும், நீங்கள் பின்தொடரும் தொகுப்பாளரும் ஆன்லைனில் இருக்க வேண்டும்.

நீங்கள் ஒருவரைப் பின்தொடரும்போது, போர்டில் உள்ள எதையும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது, மேலும் மற்ற நபரின் காட்சியைப் பொறுத்தே உங்கள் போர்டின் ஜூம் அளவும் இருக்கும்.

பின்தொடர்வதை நிறுத்த, மேல் வலது மூலையில் உள்ள “நிறுத்து” என்பதைத் தட்டலாம் அல்லது ஸ்க்ரால் செய்யலாம், பெரிதாக்கலாம் அல்லது திருத்தலாம்.

குறிப்பு: போர்டில் உங்களுடன் பணியாற்றும் மற்றவர்களால், போர்டு திறந்திருக்கும்போது மட்டுமே தங்கள் மாற்றங்களைச் செயல்தவிர்க்கவும் மீண்டும் செய்யவும் முடியும். உங்கள் சொந்த iPhoneஇல் நீங்கள் செய்த மாற்றங்களைப் பார்க்க, “செயல்தவிர்” பட்டன்-ஐப் பயன்படுத்தவும். ஒரு மாற்றத்தைச் செயல்தவிர்த்த பிறகு அதை மீண்டும் செய்ய, “செயல்தவிர்” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, “மீண்டும் செய்” என்பதைத் தட்டவும்.

அணுகல்தன்மை விளக்கங்களைச் சேர்த்தல்

உங்கள் போர்டில் உள்ள எந்தவொரு ஐட்டத்திலும் காட்சி உள்ளடக்கத்திற்கான விளக்கத்தைச் சேர்க்கலாம். இதன்மூலம், VoiceOver போன்ற உதவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களால் விவரிக்கப்பட்ட காட்சி உள்ளடக்கத்தை வாசிக்கச் செய்து கேட்க முடியும். (விளக்கங்கள் போர்டில் காட்டப்படாது.)

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. அணுகல்தன்மை விளக்கங்களைச் சேர்க்க விரும்பும் போர்டைத் திறக்கவும்.

  3. நீங்கள் விவரிக்க விரும்பும் ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்து, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “விளக்கம்” என்பதைத் தட்டவும்.

  4. காட்சி உள்ளடக்கத்தின் விளக்கத்தை உள்ளிட்டு, “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. விளக்கத்தைக் கேட்க, VoiceOverஐ ஆன் செய்து ஐட்டத்தைத் தட்டவும்.

பகிர்வது அல்லது கூட்டுப்பணியாற்றுவதை நிறுத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. பகிர்வது அல்லது கூட்டுப்பணியாற்றுவதை நிறுத்த விரும்பும் போர்டைத் திறக்கவும்.

  3. “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டி, “பகிரப்பட்ட போர்டை நிர்வகியுங்கள்” என்பதைத் தட்டவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • நபர்களை அகற்ற: நீங்கள் அகற்ற விரும்பும் பங்கேற்பாளரின் பெயரைத் தட்டி, “அணுகலை அகற்று” என்பதைத் தட்டவும்.

    • வேறொருவரின் போர்டில் இருந்து உங்களை அகற்ற: உங்கள் பெயரைத் தட்டி, “என்னை அகற்று” என்பதைத் தட்டவும்.

    • அனைவருடனும் பகிர்வதை நிறுத்த: “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டி, “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

      இந்த விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், மற்ற பங்கேற்பாளர்களின் சாதனங்களில் போர்டு இனி காட்டப்படாது. ஆனால் உங்களுக்கு அணுகல் இருக்கும்.

நீங்கள் ஒரு போர்டைப் பகிரத் தொடங்கிய பிறகு அணுகலையும் அனுமதிகளையும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் ஒட்டுமொத்தமாகவும் மாற்றலாம். பகிர்வு அமைப்புகளை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

கூட்டுப்பணியாற்றுதல் அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்த, பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆன்லைனில் இருப்பதுடன், அவர்களின் Apple கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும். iCloudஇல் Freeform செயலி ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும் (iCloud பயனர் வழிகாட்டியில் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் Freeform செயலிக்கு iCloudஐ அமைத்தல் என்பதைப் பார்க்கவும்) மற்றும் இரு காரணி அங்கீகாரத்தை அமைத்திருக்க வேண்டும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.